Leprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்
மனிதனை தாக்கக்கூடிய கொடுமையான நோய்களாக எய்ட்ஸ், புற்றுநோய், காசநோய், தொழுநோய் போன்றவை காணப்படுகின்றன. சில நோய்கள் உடனடியான மரணத்தை தருகின்றன. சில நோய்கள் வாழ்வின் கடைசி காலம் வரை மனிதனின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், உடல் உறுப்புகளை இழக்க வைக்கின்றன. அந்த வரிசையில் தொழுநோய் மனிதனின் கை, கால்களின் விரல்களை இழக்க செய்து, வாழ்நாள் முழுவதும் நோய் தாக்குதலுக்குள்ளானவரை முடக்கி வைக்கும் நோயாக உள்ளது. (# Leprosy Facts – தெரிந்து கொள்வோம்.)