Ratings | [Total: 0 Average: 0] |
Site | mellinam.in |
2 years ago
www.mellinam.in/islamic-calendar-1439/ ... மேலும்மேலும்
- Likes: 7
- Shares: 0
- Comments: 0
3 years ago
3 years ago
www.mellinam.in/joys-of-the-spirit-sayyid-qutb-part-2/ ... மேலும்மேலும்
ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) - சையித் குதுப்
மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன். என்னால் செய்யமுடிந்த அள...3 years ago
www.mellinam.in/joys-of-the-spirit-sayyid-qutb-part-1/ ... மேலும்மேலும்
ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) - சையித் குதுப்
விரிந்த ஆன்மாவோடு, தவறையும் பலவீனத்தையும் கண்டு இரங்குகின்ற கனிவோடு அடுத...4 years ago
மக்கா படுகொலைகள் (1987) - டாக்டர் ஸஃபர் பங்காஷ்
மக்கா நகரின் அந்தஸ்து மற்றும் பாத்திரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவர். அல்லாஹ் கடமையாக்கியுள்ள ஹஜ்ஜின் குவிமையமும் மக்காவே. உலகளாவிய முஸ்லிம்களின் வருடாந்திர மாநாடான ஹஜ், முறையாக நிர்வகிக்கப்படுகையில், எண்ணிப் பார்க்கவியலா அளவு ஆற்றலை உற்பத்தி செய்யவல்லது என்பதையும் எவரும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். எனினும், இன்று அது தனிமனித ஆன்மீகப் பரவசத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட, சமூகளவில் பொருளேதுமற்ற, சடங்கு முறையிலான ஒரு நிகழ்வாகச் சுருக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணங்களுள் ஒன்று, அதை இன்று நிர்வகித்து வரும் சவூதி மன்னர் குடும்பம் என்றால் அது மிகையல்ல.
மக்காவைப் புனிதத் தலமாகவும் அபய பூமியாகவும் அல்லாஹ் திருக்குர்ஆனில் பிரகடனப்படுத்தியுள்ளான். அங்கு, ஹஜ்ஜுக் காலத்தில், விலங்குகளைக் கூட வேட்டையாடக் கூடாதெனத் தடைசெய்திருக்கிறான். இவ்வாறிருக்க, மக்கா-மதீனாவைச் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்து ஆட்சிசெய்துவரும் சவூதுக் குடும்பத்தினரோ, அல்லாஹ்வின் ஆணைகளைத் துச்சமென மதித்து, 1987-ம் ஆண்டு ஹஜ்ஜு காலத்தில் மக்காவில் வைத்துச் சுமார் 500 ஹாஜிகளைத் தடியடி நடத்தியும், துப்பாக்கிகளால் சுட்டும் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்த பெருங்கொடுமை பற்றிய நேரடி அறிக்கையே இந்த நூல். இந்த நிகழ்வு சவூதுக் குடும்பத்தின் உண்மை இயல்பினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்ததெனினும் மேற்குலகின் ஆதரவு, தனது பொய்ப்பிரச்சாரப் பித்தலாட்டங்கள் மற்றும் அரசவை 'ஆலிம்களின்' துணைகொண்டு, உலக முஸ்லிம்கள் மத்தியில் இந்நிகழ்வு உண்மையில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய அதிர்வினைக் கட்டுப்படுத்துவதில் அது பெருமளவு வெற்றிபெற்றுவிட்டது என்றே கூறவேண்டும்.
இந்தத் துயர நிகழ்வை நேரில் கண்ட நூலாசிரியர், அதனை விவரிப்பதுடன் நின்றுவிடாமல், எந்தக் கருத்தமைவில் வைத்து அதை நோக்க வேண்டுமோ அதை நமக்குச் சாத்தியமாக்கி இருக்கிறார். இந்நிகழ்வு பற்றி கொஞ்சமேனும் அறிந்திருப்போரின் மனங்களிலும் கூட "இது ஷியாக்களின் சதி முயற்சி" என்பதாகவே பதிந்து போயிருக்கிறது. ஷியா-சுன்னி என்பதாக முஸ்லிம்களிடையே நிலவிவரும் உட்பிரிவுவாத தப்பபிப்பிராயங்களை மூலதனமாக்கி, இந்த அக்கிரமக்காரர்கள் குற்றம் பிடிக்கப்படுவதிலிருந்து லாவகமாகத் தப்பிவிட்டனர். இது தொடர்பிலான பொய்யுரைகள் ஒவ்வொன்றையும் நூலாசிரியர் தோலுரித்திருக்கிறார். வரலாற்றில் இந்தப் புனிதக்கேட்டுக்கு இணையான நிகழ்வுகளாக, மக்காவின் மீது கொடுங்கோலன் யஸீதின் படைகள் நிகழ்த்திய அட்டூழியத்தையும், கராமித்தாக்கள் புரிந்த நாசங்களையும் ஆசிரியர் மிகச் சரியாக பொருத்திக் காட்டுகிறார்.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முஜாஹிதுகள் பலரும் எவ்வாறு ஹஜ்ஜிலிருந்து உணர்வூக்கம் பெற்றனர் என்பதை 'ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்' எனும் அத்தியாயம் சித்தரிக்கிறது. இவ்வரிசையில் இந்தியாவின் சையித் அஹ்மது ஷஹீது, செச்சன்யாவின் இமாம் ஷாமில், அல்ஜீரியாவின் அமீர் அப்துல் காதிர், லிபியாவின் சனூசி ஆகியோரை ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகிறார். ஹஜ்ஜை அதே செயல்திறன் மிக்க ஒன்றாக மீட்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடைமுறை நடவடிக்கைகளை 'ஹரமைனின் எதிர்காலம்' எனும் அத்தியாயம் பட்டியலிடுகிறது.
சவூதுக் குடும்பத்தின் அமெரிக்க அடிமைச் சேவகம் இன்று எவரும் அறியாத ஓர் இரகசியம் அல்ல. ஆஃப்கானிஸ்தான், ஈராக், லிபியா என முஸ்லிம் நாடுகள் மீது தொடர்ந்து வரும் அமெரிக்க ஆக்கிரமிப்பு வரைமுறையற்று சிரியா, ஈரான் என்று நீண்டுசெல்ல எத்தனிக்கிறது. இவை அனைத்திலும் முதன்மைச் சேவகனாக இருந்து சவூதி ஆற்றிவரும் பாத்திரமும் தனியே விளக்கத் தேவையற்ற வகையில் துலக்கமாகி வருகிறது. ஸியோனிஸ யூதக் கரங்களிலிருந்து பைத்துல் முகத்தஸையும் ஃபலஸ்தீனையும் விடுவிப்பதற்கான போராட்டம், ஆப்பிரிக்க முஸ்லிம்களின் பட்டினிச் சாவுகள் என உம்மத்தின் எந்தவொரு பிரச்சினையிலும், இந்தச் சவூதிகள் உருப்படியாக எதுவும் செய்வதில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் பல விதங்களிலும் இப்பிரச்சினைகளின் மூலவர்களோடு கைகோர்த்து, அவற்றை மேலும் சிக்கலாக்கி வருகிறார்கள் என்பதையும் எளிதில் அவதானிக்க முடிகிறது. மக்காவை முஷ்ரிக்குகளின் கைகளிலிருந்து விடுவித்து, அதை அதன் அசல் நிலைக்கு மீட்பதே இறைத்தூதரின் வாழ்நாள் நீளப் போராட்டத்தின் அடிநாதமாக விளங்கியது. பிரிட்டிஷாரால் பதவியில் அமர்த்தப்பட்ட சவூதுக் குடும்பம், இன்று உலகளாவிய குஃப்ர் மற்றும் ஷிர்கின்தலைமையகமாக விளங்கிவரும் வாஷிங்டனின் விசுவாசமான அடியாளாக விளங்கி, அதன் நலன்களுக்கே சேவை செய்துவருகிறது.
அத்துடன் நில்லாது, இஸ்லாத்தின் துவக்ககால வரலாற்றுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை அறுத்தெறியும் வகையில், இஸ்லாத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களையும் சின்னங்களையும் திட்டமிட்டு அழித்துவருகிறது. இது பற்றிய ஆசிரியரின் ஒரு சமீபத்தியக் கட்டுரையும் பின்னிணைப்பாக தரப்பட்டிருக்கிறது. ... மேலும்மேலும்
5 years ago
மெல்லினம் வெளியிட்டுள்ள 'இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்' நூலின் ஆசிரியர் முஹம்மது அபூ ஸஹ்ரா பற்றிய சகோ. நௌஃபரின் (Nowfer Mohammed) பதிவிலிருந்து....
ஷேக் அபூ ஸஹ்றா (ரஹ்)1898 - 1974
சில குறிப்புகள் :
===============================
ஷேக் அபூ ஸஹ்றா (ரஹ்) அவர்கள் எழுதிய "தாரீஹுல் ஜதல்" என்ற நூலை நேற்றிரவு ஒரு தேவைக்காக துருவிக் கொண்டிருந்தேன்.அப்போது இமாம் அவர்கள் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஷேக் அபூ ஸஹ்றா (ரஹ்) அவர்கள் எனது ஷரீஆக் கல்வியின் ஆரம்பக காலத்தில் அறிமுகமான ஒரு அறிஞராவார். நான் இஸ்லாஹிய்யாவில் படித்துக் கொண்டிருந்த போது இமாம் ஷாபி இ (ரஹ்) அவர்கள் பற்றிய ஒரு தேடலின் போது இமாம் அவர்கள் எழுதிய நூல் கண்ணில் பட்டது.
அதைத் தொடர்ந்து நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் மற்றும் இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்), இமாம் இப்னு தைமியாஹ் (ரஹ்)போன்ற ஷேக் அவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் வாசித்து முடித்தேன்.
பல இமாம்களை முறையாக அறிமுகப்படுத்திய ஷேக் அவர்களை, குறிப்பாக இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களைப் பற்றி புதிதாக எனக்கு அறிமுகம் செய்த ஷேக் அபூ ஸஹ்றா (ரஹ்) அவர்கள் பற்றி ஒரு பதிவு போடுவது அவசியம் என்பதனால் எண்ணத்துக்கு உடனடியாகவே செயலாக்கம் கொடுத்துவிட்டேன்.
சிறு பிராயம்:
============
ஷேக் அபூ ஸஹ்றா (ரஹ்)இயற் பெயர் முஹம்மத் அஹ்மத் முஸ்தபா அஹ்மத் ஆகும். 1898/3/29ம் திகதி எகிப்து நாட்டின் மேல் மாகாணத்தில் அல் மஹல்லதுல் குப்றா என்ற ஊரில் பிறந்தார்கள்.
கல்வி:
=====
சிறு பிராயத்திலேயே அல் குர் ஆன் மத்ரஸாவில் சேர்ந்து எழுத்து வாசிப்புக் கலைகளின் அடிப்படையக் கற்றுத் தேர்ந்த ஷேக் அவர்கள் தந்தா நகரில் உள்ள பல அறிஞர்பெருமக்களின் வகுப்புகள் நடைபெற்ற "இரண்டாம் அஸ்ஹர் எனப் பெயர் பெற்றிருந்த அஹ்மதி ஜும்மாப் பள்ளிவாயிலுக்குச் சென்று சுமார் மூணு வருடங்கள் இஸ்லாமியக் கலைகள் சிலதைக் கற்றுத் தெளிந்தார்கள்.
பின்னர் 1916ம் ஆண்டு ஷரீஆ துறை நீதவான் கலாசாலையில் சேர்ந்து சிறு வயதிலேயே.. குறுகிய காலத்திலேயே படித்து முடித்து முதல் நிலை மாணவனாகத் தேர்வானார்கள்.
அதனைத் தொடர்ந்து ஷேக் அவர்கள் முஹம்மத் ஆதிப்ஃ பறகாத் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட நீதவான்களுக்கான பிரத்யேக கல்லூரியில் இணைந்து எட்டு வருடங்களில் சர்வதேச நீதவான் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்கள்.
பதவிகள்:
========
தனது கல்லூரிக் கல்விகளை முடித்துக்கு கொண்ட ஷேக் அவர்கள் உயர்தரப் பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் 1933ம் ஆண்டு உஸூலுத்தீன் பீடத்திற்கு விரிவுரையாளராகத் தெரிவாகி அங்கே விவாதம் மற்றும் பிரசங்கப் பாட நெறிகளுக்கான விரிவுரையாளராகப் பணி புரிந்தார்.
பிரசங்கம் தொடர்பில் தனித்துவமான விரிவுரைகள் நடாத்திய ஷேக் அவர்கள் எழுதிய முதல் நூலான "அல் கிதாபஃ" பிரசங்கம்: அடிப்படைகளும் அறபு சமுதாயத்தில் அதன் பொற்கால வரலாறும்" என்ற நூல் குறித்த துறையில் முதலாவது தனியான தனித்துவமான நூலாக அமைந்து ஷேக் அவர்களுக்கு பெரயையும் புகழையும் ஈட்டித் தந்தது.
இதன் காரனமாக ஷேக் அவர்கள் சட்ட பீடத்தில் பிரசங்கப் பாட விரிவுரையாளராகத் தேர்வு செய்யப்பட்டு சிறிது காலத்தின் பின்னர் ஷரீஆ பாட விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு பின்னர் ஷரீஆ பீடாதிபதியாக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
1962ம் ஆண்டு "முஜம்மஉல் புஹூதில் இஸ்லாமியா" எனும் உலமாக்கள் உயர் சபை எகிப்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மையத்திலும் இலவசமாகவே விரிவுரை நிகழ்த்தினார்கள்.
போராட்ட வாழ்வு:
=================
பல்வேறு சித்தாங்கங்கள் சட்டவாக்கத்தில் இஸ்லாத்தைப் புறந்தள்ளி கால்பதிக்க முற்பட்ட எகிப்தின் சங்கடமான காலகட்டத்தில் உலமாக்கள் என அறியப்பட்டவர்கள் பலர் மௌனிகளாக இருந்த வேளையில் ஷேக் அவர்கள் இஸ்லாமிய சட்டவாக்க நடை முறை முஸ்லிம்கள் வாழ்வில் வர வேண்டும் என அரும்பாடு பட்டார்கள்.
ஆட்சியாளர்களின் அராஜகத்தில் இருந்து மார்க்கத்தையும் மக்களையும் பாதுகாக்க "ஷூறா"வின் அவசியத்தை தனது பேச்சிலும் எழுத்திலும் அழுத்தமாக பதிவு செய்தார்கள்.
வட்டிமயமான பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட எத்தனிக்கப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்த ஷேக் அவர்கள் வட்டி சமூக , பொருளாதார வாழ்வில் ஏற்பத்தும் கெடுதியையும் சீரழிவையும் அறிவுபூர்வமாகவும் ஆதாரங்கள் அடிப்படையிலும் பிரமிக்கத்தக்க வகையில் விளக்கினார்கள்.
"அல் மஸ்லஹஃ அல் ஆம்மா" பொது நலன் கருதி சில சட்டங்களை விட்டுவிட முடியும் என சிலர் நபித் தோழர்களின் வாழ்க்கையை பிழையாக விளங்கி வாதங்கள் வைத்த போது ஷேக் அவர்கள் இவ்வாதத்தின் பார தூரத்தை விளக்கி "நலன்" என்பது மார்க்கம் கூறும் சட்டதிட்டங்களை எடுத்து நடப்பதில் தான் உள்ளதே அன்றி அதை விட்டு விடுவதில் அல்ல என்பதையும் சட்டவாக்கத்தில் வஹிதான் மூலாதாரம் பகுத்தறிவு அல்ல என காத்திரமான முறையில் விளக்கினார்கள்.
சத்தியத்தில் சமரசம் இல்லை:
===========================
ஷேக் அவர்களது அஞ்சாநெஞ்சத்தையும் சத்தியத்தில் சமரசம் செய்து கொள்ளாத பண்பையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் பின்வரிம் இரு சம்பவங்களை இங்கு குறிப்பிடலாம்.
1.ஒரு முறை ஆட்சியாளரினால் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்படு அதில் ஆட்சியாளர் "இஸ்லாமிய சோஷலிஸம்" !! என்ற கருப் பொருளில் உரையாற்றி அதை ஆதரிக்கும் படி அழைக்கப்படிருந்த உலமாக்களைக் கேட்டுக் கொண்டார்!!.
எந்த உலமாவும் மாற்றுக் கருத்துத் தெரிவிக்க முன்வராத போது ஷேக் அபூ ஸஹ்றா (ரஹ்) அவர்கள் துணிந்து ஆட்சியாளரின் அணுமதி பெற்று:
"ஆட்சியாளர்கள் மார்க்க விடயங்களை தகுதியான உலமாக்களிடம் விட்டு விட்டு தங்களது எல்லைகளுடன் நின்று கொள்ள வேண்டும். நாங்கள் இங்கு அழைக்கப்பட்டது ஜனாதிபதியின் கருத்தை சரியா பிழையா என பரிசீலிக்கவே அன்றி சரியென மட்டும் ஆதரிக்க அல்ல.ஆட்சியாளர் கூறுகிறார் என்பதற்காக நாம் சரிகாணாத கருத்தை ஆதரிக்க முடியாது."
என முகத்தில் அறைந்தது போல் கூறினார். மாநாடும் அந்த முதல் அமர்வோடு முடிவடைந்து விட்டது!!
2.அதே போன்று ஷேக் அவர்களது ஆட்சியியல் பற்றிய துணிகர கருத்துகளைச் சகிக்க முடியாத ஆட்சியாளர் ஷேக் அவர்களை விசாரனைக்காக அழைத்து "நீர் உமது புத்தகங்கள் மூலம் சம்பாதிப்பவர்" எனக் குற்றம் சுமத்திய போது ஷேக் அவர்கள்:
"அவை அல்லாஹ்வுக்காக எழுதப்பட்டவை விரும்பியவர்கள் வாங்கிப் படிக்கிறார்களே அல்லாமல் அரசாங்கம் மக்கள் பணத்தை வீணடித்து உதவாக்கரை புத்தகங்களை பாடசலைகளும் நூலகங்களும் வாங்கவேண்டும் என நிர்ப்பந்தித்து மூலையில் கிடக்கும் புத்தகங்கள் அல்ல"
என காரமாகக் கூறினார்.
ஷேக் அபூ ஸஹ்றா (ரஹ்) அவர்கள் பெரியதும் நடுத்தரமானதும் சிறியளவிலுமான சுமார் ஐம்பது நூல்களை இஸ்லாமிய ச்மூகத்திற்கு வழங்கியுள்ளார்கள். இந்நூல்கள் அனைத்தும் சரளமான எழுத்து நடையில் தர்க்க ரீதியான முறைமையில் காத்திரமான கருத்துகளை தன்னகத்தே கொண்டு காலத்தை வென்று நிற்கின்றன.
அவைகளில் குறிப்பாக:
1.இமாம் அபூ ஹனீபா(ரஹ்): வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
2.இமாம் மாலிக் (ரஹ்):வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
3.இமாம் அஷ் ஷாபிஇ (ரஹ்):வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
4.இமாம் (அஹ்மத்) இப்னு ஹன்பல் (ரஹ்):வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
5.இமாம் ஸைத் (ரஹ்):வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
6.இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹ்):வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
7.இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்):வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
8.இமாம் அஸ்ஸாதிக் (ரஹ்):வாழ்வு, காலம், கருத்துகள், சட்ட விளக்கம்
குறித்த ஷேக் அவர்களது எட்டு நூற்களும் பிரபல்ய இமாம்கள் பற்றிய பாரம்பரிய நூல்களில் இருந்து வடிகட்டியெடுக்கப்பட்ட சாரமாகவும் ,இமாம்கள் அவர்களது வாழ்க்கை வரலாறு, பணி, சட்டவாக்க நுணுக்கங்கள் மற்றும் முறைமைகள் பற்றிய ஒரு கச்சிதமான பார்வ்வையாகவும் திகழ்கின்றன.
அத்துடன் இன்று வரை இமாம்கள் பற்றிய பல்கலைக் கழக ஆய்வுகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆய்வு மேற்பார்வைப் பேராசிரியர்களால் இந் நூல்களில் ஷேக் அவர்கள் கையாண்டுள்ள முறைமையே பரிந்துரை செய்யப்படுகின்றன.
9."அல் கிதாபஃ" பிரசங்கம்: அடிப்படைகளும் அறபு சமுதாயத்தில் அதன் பொற்கால வரலாறும்" என்ற நூல் குறித்த துறையில் முதலாவது தனியான, தனித்துவமான நூலாக அமைந்து ஷேக் அவர்களுக்கு பெயரயையும் புகழையும் ஈட்டித் தந்தது.
10.காதமுன் நபிய்யீன் (ஸீறா) மூண்று பாகங்கள்
11.தாரீகுல் மதாஹிபில் இஸ்லாமியா (சிந்தனைப் பிரிவுகளின் வரலாறு பற்றிய நூல்)
12.அல் முஃஜிஸதுல் குப்றா( அல்குர் ஆன் பற்றிய நூல்)
மேற்படி வரலாற்றுடன் தொடர்புடைய நூல்கள் அல்லாமல் ஷேக் அவர்கள் இஸ்லாமிய சட்ட முறைமைகள் தொடர்பிலும் அதிக நூல்களை எழுதியுள்ளார்கள். அவைகளில் குறிப்பிடத்தக்கதாக:
13.இஸ்லாமிய சட்டத்தில் தண்டனை
14.இஸ்லாமிய சட்டத்தில் குற்றம்.
15.தனியார் சட்டம்
16.வாரிசுரிமைச் சட்டங்கள்
17.உடமையும் ஒப்பந்தக் கோட்பாடும்
18.குடும்ப அமைப்பும் குடும்பக் கட்டுப்பாடும்
அத்துடன் சமூகவியல் மற்றும் தஃவா மத ஒப்பீடுகள் தொடர்பாகவும் ஷேக் அவர்களது நூற்கள் உள்ளன.
19.அத்தஃவா இலல் இஸ்லாம்
20.இஸ்லாமிய ஒற்றுமை
21.இஸ்லாத்திய்ல் சர்வதேச உறவுகள்
22.மதங்கள் ஒப்பீட்டாய்வு
23.கிருஸ்தவம் தொடர்பிலான விரிவுரைகள்
மேற்படி நூல்கள் அல்லாமல் ஷேக் அவர்கள் எழுதிய பல சிறப்புக் கட்டுரைகளும் பொருளாதார, சட்ட சஞ்சிகைகளிலும் அல் முஸ்லிமீன் சஞ்சிகை மற்றும் ஹழாறதுல் இஸ்லாம் சஞ்சிகை ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டன.
வல்ல அல்லாஹ் அன்னாரது தவறுகளை மன்னித்து நற்பணிகளை அங்கீகரித்தருள்வானாக.. ... மேலும்மேலும்
5 years ago
"அலீயின் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக! அவர் மட்டும் இல்லாது இருந்திருப்பின், அக்கிரமக்காரர்களுடன் முரண்பட்டு மோதுவது எவ்வாறு என்பது குறித்து நாம் அறிந்து கொண்டிருக்க முடியாது."
- இமாம் அபூ ஹனீஃபா, இமாம் அஷ்-ஷாஃபியீ, இப்னு ஹஸ்ம் இன்னும் பலர் மேற்காணும் கூற்றை மொழிந்துள்ளனர்.
இந்த அதிமுக்கிய விடயத்தைப் பொறுத்தவரை அலீ (ரழி)-ன் வாழ்வில் இஸ்லாமிய இயக்கத்துக்குப் பாரிய படிப்பினைகள் உண்டு என்பதையே இது குறிக்கிறதல்லவா! ... மேலும்மேலும்
5 years ago
கேள்வி:
நீங்கள் உங்களுடைய இஸ்லாமிய ஆதரவுக்கும் மார்க்சிய ஆதரவுக்கும் இடையில் எப்படி இணக்கம் காண்கிறீர்கள்?
எரிக் வால்பெர்க்:
"நான் ஒரு சார்பிலா ஓரிறைவாதியாகவும் (freelance monotheist), (முதலாளித்துவம் மற்றும் சமூகம் குறித்த சிந்தனையைப் பொறுத்தவரை) மார்க்ஸைப் பயன்படுத்துபவனாகவும், அதேவேளை பிரிவுகளையும் இசங்களையும் விரும்பாதவனாகவும், மிகத் தெளிவாக அவற்றுக்கு அப்பற்பட்டவனாகவும் என்னுடைய நிலைப்பாட்டை அமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன்.
நடைமுறையில் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒரே ஓரிறைவாத மார்க்கம் இஸ்லாம் தான். எனவே தான் அது இன்று குறிவைத்துத் தாக்கப்படுகிறது. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அதனைப் புரிந்து கொள்வதும் அதனைத் தற்காத்து வாதிடுவதும் அவசியம் ஆகின்றது. இஸ்லாம் ஏகாதிபத்தியத்திற்கு மாற்றீடாக ஒரு ஒத்திசைவான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கிறது.
இஸ்லாமும் மார்க்ஸும் ஒன்றோடொன்று இசைவானவையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, நான் எனது தீர்மானமாகப் பின்வருமாறு கூறுகிறேன்:
"யூதர்களின் தீர்க்கதரிசிகள், அவர்களைத் தொடர்ந்து வந்த இயேசு மற்றும் முஹம்மது, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புரட்சியின் மதச்சார்பற்ற தீர்க்கதரிசியான மார்க்ஸ் என அனைவருமே கந்து வட்டியையும் (பொதுவாக) வட்டியையும் 'அநீதியாகப் பெறப்படும் லாபம்' என்பதாக மிகச் சரியான நியாத்தின் பொருட்டு நிராகரித்தார்கள். இந்த முறையிலான உபரி ஈட்டலை மார்க்ஸ் 'தனியுடைமை மற்றும் உழைப்புச் சுரண்டலின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் வக்கிரத்தின் உச்சம்'" என்று பழித்தார். அவர்கள் அனைவருமே இந்தச் சுரண்டலை 'அது அநீதியானது' என்ற அறநெறியின் அடிப்படையிலேயே நிராகரித்தார்கள். பொருளாதாரம் என்பது அறநெறியில் பொதிந்ததாக இருக்க வேண்டுமென அவர்கள் அனைவருமே வலியுறுத்தினார்கள். முதலாளித்துவம் ஆதிக்கம் பெற்றதுமே இந்த அடிப்படைக் கோட்பாடு கைவிடப்பட்டு விட்டது. யூதமும் கிறித்தவமும் இதற்கு இசைவாகத் தம்மை தகவமைத்துக் கொண்டன. ஆனால் இஸ்லாம் அவ்வாறு செய்யவில்லை...
எனவே, மார்க்ஸ் 'சக்கரத்தை மீள்-கண்டுபிடித்திருக்கிறார்' எனத் தோன்றுகிறது. மார்க்ஸ் வாசிக்க இன்பம் தருபவராகவும், உணர்ச்சிப் பெருக்கும் மனிதநேயமும் நிறைந்தவராகவும், அறநெறி மிக்கவராகவும் காட்சி தருகிறார்."
(கனடாவைச் சேர்ந்த எரிக் வால்பெர்க் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ரஷ்ய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இதழியலாளராக உலகெங்கும் அறியப்படுபவர். டொரோண்டோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். 1980-கள் முதலாக கிழக்கு மற்றும் மேற்குலகுகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி எழுதி வருகிறார். அவர் சோவியத் யூனியனிலும், ரஷ்யாவிலும், பிறகு உஸ்பெகிஸ்தானிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகராகவும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்சமயம் பிரதானமாக கெய்ரோவிலிருந்து வெளிவரும் அல்-அஹ்ரம் செய்தித்தாளுக்காக எழுதி வருகிறார். மேலும் அவர் கவுண்டர் பஞ்ச், டிஸ்ஸிடன்ட் வாய்ஸ், குளோபல் ரிசர்ச், அல்-ஜஸீரா மற்றும் துருக்கிஷ் டெய்லி ஆகியவற்றில் வழமையான பங்கேற்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் வாய்ஸ் ஆஃப் தி கேப் ரேடியோவில் வருணனையாளரகவும் இருந்து வருகிறார்.) ... மேலும்மேலும்
மார்க்ஸியத்தையும் இஸ்லாத்தையும் இன்னொரு கோணத்தில் பொருத்திப் பார்க்கிறார். நல்ல முயற்சி. வரவேற்க வேண்டும்.
5 years ago
இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் - முஹம்மது அல்-கஸ்ஸாலி
மெல்லினம் பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு, இன்ஷா அல்லாஹ்.
சுருக்கமான நூல் அறிமுகம்: (நன்றி: www.usthazmansoor.com)
www.usthazmansoor.com/art-of-zikrs-and-duas-of-the-prophet/ ... மேலும்மேலும்
மெல்லினம் updated their cover photo.
5 years ago
... மேலும்மேலும்
5 years ago
பற்றுறுதி கொண்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! ... மேலும்மேலும்
5 years ago
ஹஜ்ஜின் மறக்கடிக்கப்பட்ட அம்சங்கள்
"ஹஜ்ஜின் விடயத்தில் நம்முடைய கவனத்தைக் கோரும் மேலும் இரு அம்சங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, ஹஜ்ஜானது உம்மத்தின் வருடாந்திர மாநாடாக இருக்கிறது. சமகால வரலாற்றில் இதற்கு இணையானது என்று வேறு எந்த நிகழ்ச்சியையும் கூற முடியாதளவு அது மிகப் பிரம்மாண்டமான ஓர் மாநாடாக அமைந்துள்ளது. அது உம்மத்தின் ஒருமைத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் ஹஜ்ஜில் வந்து திரண்டாலும், மிகப் பெரும்பான்மையோர் தமது சக முஸ்லிம்கள் பற்றிய பெரிய பரிச்சயமோ கரிசனையோ இன்றியே ஹஜ்ஜுக்கு வந்து செல்கின்றனர். மகத்தானதொரு வாய்ப்பினை வீணடிப்பதாகும் இது. நாம் ஒருவரையொருவர் அறிந்து பரிச்சயப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்புகிறான்; அதற்கு மிகப் பொருத்தமானதொரு சந்தர்ப்பத்தை ஹஜ் வழங்குகின்றது. பல இலட்சக்கணக்கான சக முஸ்லிம்கள் அருகிருக்க தமது ஹஜ்ஜினை மேற்கொள்ளும் பெரும்பாலான முஸ்லிம்கள் அந்த சக முஸ்லிம்களின் பிரச்சினைகள் அல்லது நலவுகள் குறித்து ஏதொன்றும் அறியாதோராகவே (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வருகின்றனர்.
இரண்டாவதாக, முஸ்லிம்கள் ஹஜ்ஜில் வைத்து இணைவைப்பவர்களை விட்டான தமது உறவு விலகலைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது ஹஜ்ஜுடன் தொடர்புடைய மற்றொரு குர்ஆனியக் கட்டளையாக இருக்கிறது.
'இணைவைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அறிவிக்கும் வெளிப்படையான பிரகடனம் இது...' (9:3)
இந்த வசனங்கள் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் முஸ்லிம்கள் அபூ பக்கர் (ரழி) தலைமையில் ஹஜ்ஜுக்காக மதீனாவிலிருந்து மக்காவுக்குக் கிளம்பிச் சென்றிருந்த போது அருளப்பட்டன. உடனேயே அண்ணல் நபியவர்கள் (ஸல்) கொஞ்சமும் தாமதியாமல் இமாம் அலீ (ரழி) அவர்களை அனுப்பி இந்த வசனங்களை ஹஜ்ஜின் போது அறஃபாவில் வைத்துப் பிரகடனம் செய்யுமாறு பணித்தார்கள். இணைவைப்பவர்களை விட்டான இந்த வெளிப்படையான-தெளிவான உறவு விலகல் ஒரு குர்ஆனியக் கட்டளையாக இருந்தபோதும், (பன்னெடுங்காலமாக ஹஜ்ஜை கட்டுக்குள் வைத்திருக்கும் சட்டவிரோத அரசுகளின்) அதிகாரபூர்வ கொள்கை மற்றும் வரலாற்றுத் திரிபின் காரணத்தால் இந்தக் கடமை கைவிடப்பட்டு, ஏறத்தாழ முற்றாக மறக்கடிக்கப்பட்டே விட்டது."
- ஸஃபர் பங்காஷ் ... மேலும்மேலும்
5 years ago
ஹஜ்
(கவிஞர் நாஸிர் குஸ்ரோவின் பாரசீகக் கவிதையின் மொழிபெயர்ப்பு)
யாத்ரிகர்கள் மாபெரும் பாக்கியம் பெற்றவர்களாக,
தனிப்பெருங் கருணையாளன் இறைவனுக்கு நன்றி செலுத்திய வண்ணம் திரும்பினர்.
அறஃபாவிலிருந்து மக்காவுக்குச் செல்லும் தங்கள் வழிநெடுக உணர்ச்சிப் பெருக்குடன் "லப்பைக்" என மீட்டி மீட்டி முழங்கிச் சென்றனர்.
ஹிஜாஸ் பாலைவனத்தின் கஷ்டங்களை அனுபவித்துச் சோர்ந்தபோது, நெருப்பிலிருந்தும் வேதனையிலிருந்தும் தப்பினோம் என நெஞ்சம் குதூகலித்தனர்.
அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி, உம்றாவைப் பூர்த்தி செய்துவிட்டனர். இப்போது பாதுகாப்பாகத் தாயகம் திரும்புகின்றனர்.
அவர்களை வரவேற்பதற்காக நான் சென்றேன். பொதுவாக அது என்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் வழக்கமல்ல என்ற போதிலும்.
காரணம், அந்தப் பயணக் கூட்டத்தில் எனக்கு நெருங்கிய ஓர் உண்மை நண்பர் இருந்தார்.
இந்தக் கடினமான, அபாயம் நிறைந்த பயணத்தை எப்படிச் செய்து முடித்தீர் என அவரிடம் நான் வினவினேன்.
என்னை அவர் தனியே விட்டுச் சென்றதிலிருந்து நான் அடைந்த மனவருத்தத்தையும் துயரத்தையும் அவரிடம் கூறினேன்.
நீர் ஹஜ்ஜை நிறைவேற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எமதூரில் நீர் தான் ஒரே அல்-ஹாஜ்.
இனி சொல்லும், எப்படி ஹஜ் செய்தீர்? புனித பூமிக்கு எப்படி மரியாதை செய்தீர்?
ஆடை களைந்து இஹ்ராம் அணியும் வேளையில், பரவசம் நிறைந்த அந்த கணப்பொழுதில் நீர் வைத்த நிய்யத் என்ன?
தவிர்க்க வேண்டியவை யாவற்றையும் தவிர்த்துக் கொண்டீரா? எல்லாம் வல்ல இறைவனுக்கு விருப்பமில்லாத தாழ்ந்தவை யாவற்றையும் தவிர்த்துக் கொண்டீரா? என அவரிடம் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
பூரணமாக அறிந்த நிலையில், மகத்தான மதிப்பச்சத்துடன் "லப்பைக்க" எனச் சொன்னீரா? அல்லாஹ்வின் கட்டளையைச் செவியுற்றீரா? அல்லது, இப்ராஹீமைப் போல் கீழ்ப்படிந்தீரா? என அவரிடம் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
அவர் அறஃபாவில் அல்லாஹ்வுக்கு அருகே நிற்கும்போது, அவனை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததா? அவ்வறிவை சற்றேனும் பெற வேண்டுமென்ற ஆர்வம் மிகைக்கவில்லையா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
கஅபாவில் நுழையும்போது கஹ்ஃபு மற்றும் ரகீம் (குகை மற்றும் சாசன) மக்கள் செய்தது போல் தன்னல மறுப்பை மேற்கொள்ளவில்லையா? மறுமையின் தண்டனைக்கு அஞ்சினீரா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
சிலைகளின் மீது கல்லெறியும் போது அவற்றைத் தீமை எனக் கருதினீரா? அதன் பிறகு தீய செயல்கள் அனைத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீரா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
ஓர் ஏழைக்கு அல்லது அநாதைக்கு உணவளிக்கும் பொருட்டு குர்பான் கொடுத்தபோது முதலில் அல்லாஹ்வை நினைத்தீரா? பின்பு சுயநலத்தைப் பலியிட்டீரா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
இப்ராஹீமின் இடத்தில் நின்றபோது உண்மையுள்ளத்துடனும் வலிமையான இறைநம்பிக்கையுடனும் பூரணமாக அல்லாஹ்வை மட்டுமே ஆதரவு வைத்தீரா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
வலம் வந்தபோது, கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்தபோது வானவர்கள் யாவரும் இவ்வுலகை சதாசர்வ காலமும் வலம் வந்துகொண்டிருப்பது ஞாபகம் வந்ததா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
ஸஈயின் போது, ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையில் ஓடியபோது தூய்மையுற்றுப் புனிதமடைந்தீரா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
இப்போது மக்காவிலிருந்து திரும்பிவிட்ட நிலையில், கஅபாவை எண்ணி ஏங்குகின்ற நிலையில், உம்முடைய 'சுயத்தை' அங்கேயே புதைத்துவிட்டு வந்தீரா? அங்கேயே திரும்பிப் போய்விட வேண்டுமென்ற ஆவல் மீறுகின்றதா? எனக் கேட்டேன். அவர் "இல்லை!" என்றார்.
"இதுவரை நீர் கேட்டது எதுவுமே எனக்குப் புரியவில்லை" என்றார் அவர்.
நான் சொன்னேன், "நண்பரே, நீர் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை. மேலும், நீர் அல்லாஹ்வுக்கு முற்றாகக் கீழ்ப்படியவில்லை. நீர் மக்காவுக்குப் போய் கஅபாவைத் தரிசித்தீர். நீர் காசைச் செலவழித்து வாங்கியது பாலைவனத்தின் கஷ்ட அனுபவங்களைத் தான்! திரும்பவும் நீர் ஹஜ் செய்யத் தீர்மானித்தால் நான் இதுகாறும் அறிவுறுத்தியபடி நிறைவேற்ற முயற்சி செய்வீராக!"
(நிறைவுற்றது) ... மேலும்மேலும்
மெல்லினம் updated their cover photo.
5 years ago
... மேலும்மேலும்
5 years ago
சத்தியம் நிறுவப்படுவது எப்போது?
"அறிஞர்கள் அச்சத்தினாலும், பாமரர்கள் அறியாமையினாலும் வாய்மூடி மௌனம் காக்கும்போது சத்தியம் எப்படி நிறுவப்படும்?"
- இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்)
[சத்தியம் தழைத்து நிலைபெறுவது என்பது அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுதல் மற்றும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுதலில் தங்கியிருக்கிறது என்பதை வலியுறுத்தி...] ... மேலும்மேலும்
5 years ago
இஸ்லாத்தின் சாராம்சம் எது?
"(நபியே) கூறுவீராக. வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விதித்திருப்பவற்றை நான் ஓதிக் காண்பிக்கிறேன்:
(இறைமை, அதிகாரம், வல்லமை ஆகிய அம்சங்களில்) ஏதொன்றையும் அவனுக்கு இணைகற்பிக்காதீர்கள்; பெற்றோருடன் மிக அழகான முறையில் நடந்து கொள்ளுங்கள்; வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்-ஏனெனில், உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; மானக்கேடான காரியங்களை நெருங்காதீர்கள்-அவை வெளிப்படையானவையாயினும் இரகசியமானவையாயினும் சரி; அல்லாஹ் தடுத்துள்ள எந்தவொரு ஆன்மாவையும் நீதி மற்றும் சட்ட ரீதியிலன்றி கொலை செய்யாதீர்கள்; நீங்கள் நல்லறிவு பெறவேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்கு இவற்றை ஏவுகிறான்.
அநாதையின் செல்வத்தை அவன் பருவம் அடையும் வரையில் அழகான-நியாயமான முறையிலன்றி நெருங்காதீர்கள்; அளவையையும் நிறுவையையும் நீதமாக நிரப்பமாக்குங்கள்; நாம் எந்தவொரு ஆன்மாவின் மீதும் அதன் சக்திக்கு மீறி பாரம் சுமத்துவதில்லை. நீதிக்கு உகந்ததையே பேசுங்கள்- (அதனால் பாதிக்கப்படுபவர்) உங்களுக்கு நெருங்கியவராக இருப்பினும் சரி. அல்லாஹ்வுடனான உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; நீங்கள் விழிப்புணர்வு பெறும் பொருட்டே அவன் உங்களுக்கு இவற்றை ஏவுகிறான்.
நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழியாகும்; எனவே நீங்கள் இதையே பின்பற்றுங்கள்; இதர வழிகளைப் பின்பற்ற வேண்டாம்-அவை உங்களை அவனுடைய வழியை விட்டும் விலக்கி தூரமாக்கிவிடும்; (மனித வாழ்வில் அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னம் குறித்த) கூருணர்வை நீங்கள் பெறவேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்கு இவற்றை ஏவுகிறான்." (அத்தியாயம் அல்-அன்ஆம், 151-153)
[இஸ்லாம் என்பது என்ன என்பதற்கு அல்லாஹ் வழங்கும் வரைவிலக்கணம், நாம் இன்று புரிந்து வைத்திருக்கும் வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் கலாச்சார சம்பிரதாயங்களின் அடிப்படையிலான வரைவிலக்கணத்திலிருந்து எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஒரு தனிமனித, குடும்ப, ஒழுக்க, நீதி பரிபாலன, பொதுநல, பொருளாதார, அரசியல் வாழ்வுக்கு அவசியமான அடிப்படைக் கோட்பாடுகளை மேற்காணும் இறைவசனங்கள் எத்துணை எளிமையான வார்த்தைகளில் முன்வைத்துள்ளன! இந்த அடிப்படைத் தூண்களின் மீதமைந்த ஒரு சமூக அமைப்பையும் அதற்கு அவசியமான நிறுவனப் பொறிமுறைகளையும் (Institutional Mechanisms) நிறுவுவதற்காகவும், அதற்குத் தடைபோடும் சக்திகளோடு மோதி முறியடிப்பதற்குமான ஒரு வாழ்நாள் நீளப் போராட்டமே அண்ணல் நபியின் ஆகப் பெரிய சுன்னாஹ் என்பது நபிவரலாற்றை மேலோட்டமாகப் பார்த்தாலே கூட புலப்படுகிறது அல்லவா!] ... மேலும்மேலும்
5 years ago
ஒடுக்குமுறை அமைப்புகள் யாவுமே மக்களின் அறியாமை எனும் அடித்தளத்தின் மீது தான் கட்டமைக்கப்படுகின்றன. அந்த அறியாமையின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது போது அவை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைகின்றன. ஆனால் இன்று இஸ்லாமிய இயக்கங்கள் என்பதாக நம்மிடையே இயங்குபவையோ இந்த அடிப்படை உண்மையை தெரிந்தும் தெரியாதவை போல நடந்து கொள்கின்றன. எளிதாக மக்களை திரட்டுவதற்கு வசதியாக இருக்கும் உணர்வுப்பூர்வமான முழக்கங்களை முன்வைத்து கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் மட்டுமே இலட்சியங்களை சாதித்து விடலாம் என்பதாகத் தமது தொண்டர்களையும் வெகுமக்களையும் அவை நம்பவைக்கின்றன. அப்படியே அவை எதையேனும் கற்பித்தாலும் பிற முஸ்லிம்களை விவாதத்தில் தோற்கடிப்பதற்கும், தம்மைத் தவிர மற்ற எல்லோரும் நெறிபிறழ்விலேயே உள்ளனர் என்று நிறுவுவதற்கும் தேவையான தர்க்கவியல் அடிப்படையை வலுப்படுத்தும் விதமான ஒரு கல்வியாகவே அது இருக்கிறது. நேர்வழி தமது தனியுடைமை என்பதான ஒரு கற்பிதத்தைச் சுமந்து திரியும் அகந்தை கொண்ட தனிமனிதர்களையே அது உருவாக்கியிருக்கிறது. வேறு சில இயக்கங்களோ இஸ்லாத்தின் செய்தியை முடியுமானமட்டும் நீர்த்துப் போகச் செய்து, காலில் விழாத குறையாகக் கெஞ்சும் பாணியில் அதைப் பிறருக்கு முன்வைக்கும் ‘அழைப்பாளர்களை’ உற்பத்தி செய்வதற்கான ஒரு பாடத்திட்டத்தை முன்னிறுத்துகின்றன. இதனால் தன்னம்பிக்கையோ, தான் சுமந்திருக்கும் புரட்சிகர செய்தியின் மீதான உறுதிப்பாடோ இல்லாது பரிதாபகரமாக நடமாடும் ஓர் தலைமுறை உருவாக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
குர்ஆனிய உலகநோக்கை உட்கிரகித்து, இஸ்லாத்தின் புரட்சிகர இயல்பில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டு, எதை நீக்கி எதை நிர்மாணிக்க முனைகிறோம் என்பது பற்றிய பூரண பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குப் பொருத்தமான ஒரு கல்விமுறையே உண்மையில் தேவையாக இருக்கிறது. ... மேலும்மேலும்
எல்ல இயக்கமும் அப்படி அல்ல! மக்களுக்கு நன்கு விளங்கிடும்... யார் இறையஞ்சி வேலை செய்பவர்கள் என! இதற்கு விடை காலம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறது.,வல்ல இறைவனும் அறிவான்.
5 years ago
எது இஸ்லாமிய இயக்கம்? - II
(இது பற்றிய எமது முந்தைய பதிவினை மேலும் தெளிவுபடுத்தக் கோரிய ஒரு சகோதரரின் பின்னூட்டத்திற்கு எமது பதிலின் ஒரு பகுதி... )
'இஸ்லாமிய இயக்கம்' என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் 'அரசியல் கட்சி' அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி. மாறாக அந்தக் குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும், அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே 'இஸ்லாமிய இயக்கம்' பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தப் பொருளில் பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கியது வேறு யாருமல்ல, நம்முடைய அண்ணல் நபிகளார் தான். ஆனால், அரசியல் குறிக்கோள்களுக்காக 'அரசியல் கட்சி' பாணி குழுக்களை உருவாக்கும் இன்றைய அணுகுமுறையின் வேர்களை நீங்கள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய ஐரோப்பாவின் சூழமைவில் காணலாம். கம்யூனிச, ஃபாசிச-நாஜி கட்சிகளே இந்த அணுகுமுறையின் முன்னோடிகள்.
அல்லாஹ்வின் நாட்டத்தை இந்த உலகில் நிலைநாட்டுவதற்காகவும், நீதியின் மீதமைந்த சமூக அமைப்பை நிறுவுவதற்காகவும், 'நன்மையை ஏவித் தீமையைத் தடை செய்தல்' உள்ளிட்ட இஸ்லாத்தின் அரசியல் குறிக்கோள்களை மெய்ப்படுத்திக் காண்பதற்காகவும் ஒட்டுமொத்த உம்மத்தையும் அதன் முழு வலிமையோடு எழுச்சிபெறச் செய்து, அல்லாஹ்வின் பாதையில் முன்னேறச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் கூட்டு உழைப்பே அதன் சரியான பொருளில் இஸ்லாமிய இயக்கமாகும். எல்லாவற்றிலும் போல் இதிலும் நபிகளார் தான் நமக்கு முன்மாதிரி. நபிக்குப் பிந்தைய புத்தாக்க (தஜ்தீத்) முயற்சிகளும் கூட நாம் கூறவரும் கருத்துக்களை உறுதிசெய்வனவாகவே இருப்பதைக் காணலாம்.
அதேவேளை, மேலே குறிப்பிடப்பட்ட இஸ்லாத்தின் குறிக்கோள்களை அவற்றின் முழுமையான பரிமாணத்தில் சாதிப்பதற்கு இன்றைய 'அரசியல் கட்சி' அணுகுமுறை மிகப் பொருத்தமானது இல்லை என்பதை அல்ஜீரியா, எகிப்து, துருக்கி என உலகின் பல்வேறு பகுதிகளிலும் 'இஸ்லாமியக் கட்சிகளுக்குக்' கிடைத்த கடந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவம் தெளிவாகக் காட்டுகின்றது. 'இஸ்லாமியக் கட்சிகள்' தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலமோ, அல்லது வேறு சிலர் கனவு காண்பது போல் இராணுவக் கலகங்களை நிகழ்த்தியோ ஒருபோதும் இஸ்லாத்தின் குறிக்கோள்களைச் சாதிக்க முடியாது. இவை போன்ற பிழையான கற்பிதங்கள்-ஒரு விதத்தில்-இஸ்லாத்தைத் திரிபு படுத்துவதாகவே அமைகின்றன ... மேலும்மேலும்
5 years ago
"நடமாடும் நூலகங்களாகவும் கலைக் களஞ்சியங்களாகவும் விளங்கும் அறிஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஃபிக்ஹு, வாரிசுரிமைச் சட்டங்கள், ஸகாத், வியாபார உடன்படிக்கைகள், ஷரீஆ, இஸ்னாத், மத்ன், அஸ்பாப் அந்-நுஸுல், இத்யாதி இத்யாதி என அனைத்தைக் குறித்தும் அவர்கள் அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதிநவீன மின்னணுத் தகவல் சேமிப்பு இயந்திரங்கள் கூட அவர்களின் நினைவாற்றலுக்கு முன்னால் வெட்கித் தலைகுனிந்துதான் நிற்க வேண்டும். ஆனால் உலகில் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பவற்றை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், எப்படி அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் போன்றவற்றில் மக்களுக்கு ஒரு தெளிவான-குழப்பமற்ற திசைநெறியைக் காட்டித்தர வேண்டும் என்று வரும்போது அவர்கள் ஆரம்பப் பள்ளிக்குக் கூடப் போயிராதவர்கள் போல் காட்சி தருகிறார்கள். பாரபட்சம், சூது, சந்தர்ப்பவாதம் போன்றவை கோலோச்சும் சமூக-அரசியல் துறைகள் என்று வரும்போது ஒன்று அவர்கள் காட்சியிலேயே இருப்பதில்லை; அல்லது ஒரு பைத்தியக்காரன் கூட பொருட்படுத்த முன்வராத மாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் (இத்துறைகளில் சத்தியம் எது, அசத்தியம் எது என்பதை அறிந்திருக்க வேண்டியதுதான் உண்மையிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் மயக்கத்தன்மை நிலவுவதை அனுமதித்தால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும்). அரசியல் நுண்புலன் மிக்கோராக இருப்பதற்கு சிந்திக்கும் திறன் வேண்டும் - வெறுமனே மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் ஒருபோதும் அதற்கு மாற்றீடாக அமைய முடியாது."
- அஃபீஃப் கான் ... மேலும்மேலும்
Excellent
5 years ago
"அவர்கள் உம்மிடம் வந்து 'நாங்கள் (அல்லாஹ்வின் பாதையில்) எதைச் செலவு செய்ய வேண்டும்?' என்று கேட்கிறார்கள். 'உங்களின் தேவைக்கு மிஞ்சியதை' என்று கூறுவீராக." (அத்தியாயம் அல்-பகறா, வசனம் 219)
தேவைகள், அடிப்படை வசதிகள் என்பன ஒவ்வொருவருக்கும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து கொஞ்சம் கூடலாம்-குறையலாம் என்பது உண்மை தான். எனவே 'தேவைக்கு மிஞ்சியது' என்றால் என்னவென்பதை வரைவிலக்கணம் செய்வது சற்று சிக்கலானதாகத் தோன்றலாம். அதற்காக, இவ்விடயத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு வரைவிலக்கணத்தை எட்டுவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்று என்று அர்த்தமில்லை. நம்மிடத்தில் மார்க்க அறிஞர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பஞ்சமா என்ன?! அனைவரும் இதில் கவனத்தைக் குவித்து அப்படியொரு வரைவிலக்கணத்தை எட்டட்டுமே. யார் தடுப்பது?
அவ்வாறு ஒரு வரைவிலக்கணம் எட்டப்பட்டுவிட்டால், பிறகு அதற்கு மிஞ்சிய அனைத்தும் வறியோருக்காகவும் தேவையுடையோருக்காகவும் செலவிடப்பட வேண்டும். இதில் குழப்பத்திற்கு இடமெதுவும் இல்லை. எனில், எங்கனம் சமூகத்தில் சிறுபான்மையான பெரும் பணக்காரர்கள் ஆடம்பரத்தில் ஊறித் திளைக்க, மிகப் பெரும்பான்மை மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அல்லல்படுகிறார்கள்?
"...இன்னும், எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் (செல்வத்தை) குவித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றனரோ அவர்களுக்கு நோவினை தரும் கடும் வேதனையைக் குறித்து நன்மாராயம் கூறுவீராக. அந்த (இறுதித் தீர்ப்பு) நாளில் அது நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அதைக் கொண்டு அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். "நீங்கள் சேமித்துக் குவித்தவற்றை நீங்களே சுவையுங்கள்" (என்று அப்போது சொல்லப்படும்)." (அத்தியாயம் அத்-தவ்பா, வசனம் 34-35)
நம்மிடம் அடிப்படையான ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது, குர்ஆனின் வழிகாட்டுதல்களையும் நபிகளாரின் நடைமுறை முன்மாதிரியையும் நாம் தனிமனித மட்டத்திற்குள்ளாக மட்டுமே சுருக்கிவிட்டிருப்பதால் சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகள் என்று வரும்போது அவற்றின் அர்த்தங்கள் புரிந்துகொள்ளாமல் விடப்படுகின்றன. இங்கு மேற்கோள் காட்டப்பட்ட குர்ஆன் வசனங்களும் கூட செல்வம் படைத்த சில தனிமனிதர்களைப் பற்றிப் பேசுவதாகவே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஒரு சமூகம் என்றளவில் இதில் நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன என்பது குறித்த ஒரு சிறு சிந்தனை கூட நம் மனத்தில் எழுவதில்லை. ... மேலும்மேலும்
5 years ago
வறுமையும் பட்டினியும் இறைவன் வகுத்த விதியா?
"ஒரு மனிதன் பட்டினியில் உழலுகிறான் என்றால், அதற்கு ஒரே காரணம் மற்றொரு மனிதன் மிதமிஞ்சிய செல்வத்தில் திளைக்கிறான் என்பது மட்டுமே."
- இமாம் அலீ (ரழி)
"தனது வீட்டில் உண்பதற்கு உணவேதும் இல்லாததைக் காணும் ஒரு மனிதன், (தன்னைப் போன்றே மிகப் பெரும்பான்மை மக்களை வறுமையில் ஆழ்த்திய) சமூகத்திற்கு எதிராக (அநீதமான சமூக அமைப்பிற்கு எதிராக) எவ்வாறு வாளை உருவிக் கொண்டு கிளர்ச்சியில் குதிக்காமலிருக்கிறான் என்பதையிட்டு நான் பெரிதும் திகைப்பில் ஆழ்கிறேன்."
- அபூ தர் அல்-கிஃப்பாரி (ரழி) ... மேலும்மேலும்
5 years ago
"இஸ்லாமிய இயக்கத்துக்கு கலீம் சித்தீக்கி ஆற்றிய மற்றொரு முக்கியமான பங்களிப்பு, இஸ்லாத்தின் வெகுமக்கள் மையத்தன்மை (Populism) குறித்த அவரது வலியுறுத்தலாகும். இஸ்லாமிய இயக்கத்திலிருக்கும் 'அரசியல் கட்சி' பாணி குழுக்களை அவர் காலனித்துவவாதிகளின் பிரதிபலிப்பு மற்றும் எச்சமாகவும், உம்மத்தின் ஒட்டுமொத்த மக்கள்திரளையும் அணிதிரட்டி எழுச்சிபெறச் செய்வதற்கு முன்னுள்ள ஒரு தடைக்கல்லாகவும் கண்டார். தேசிய-அரசுகள் எவ்வாறு அரசியல் மற்றும் இராணுவ மட்டத்தில் உம்மத்தைத் துண்டாடிடும் காரணிகளாகச் செயல்பட்டனவோ அதே போல் 'இஸ்லாமியக் கட்சிகள்' சித்தாந்த மற்றும் புரட்சிகர மட்டத்தில் உம்மத்தைப் பிளவுபடுத்தும் காரணிகளாகச் செயல்படுகின்றன. தற்போதைய பரிதாபகரமான நிலையிலிருந்து வலுமிக்கதொரு இஸ்லாமிய நிலைமாற்றம் என்பதாக உம்மத்தில் எட்டப்பட வேண்டிய ஓர் அனைத்தளாவிய மாற்றத்தைச் சாதிப்பது, உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் வெகுமக்கள் அனைவரையும் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்பதை கலீம் சித்தீக்கி தன்னுடைய எழுத்தாக்கங்கள் பலவற்றிலும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இத்தகையவோர் உண்மையான உலகளாவிய இயக்கத்துக்குக் குறைவான ஏதொன்றினாலும் முஸ்லிம் உலகில் புதிய இஸ்லாமிய யதார்த்தத்தை நங்கூரமிட்டுக் காலூன்றச்செய்ய முடியாது."
- இஸ்லாமிய அரசியல் சிந்தனைக்கு டாக்டர் கலீம் சித்தீக்கியின் பங்களிப்பு பற்றி இமாம் முஹம்மது அல்-ஆஸி ஆற்றிய உரையிலிருந்து... ... மேலும்மேலும்
5 years ago
"ஒரு சமூகம் சமத்துவம் மற்றும் நீதியைக் கொண்டு ஒருங்கிணைக்கப்படும் போது (இதுவே தவ்ஹீதின் சமூகப் பரிமாணம்) அது ஓரிறைவனை ஏற்று உறுதிசெய்வதற்கு உகந்ததாக ஆகின்றது. எப்போது இந்த சமூக ஒருமைத்துவம் பல்வேறு வர்க்கங்களாகவும் பிரிவுகளாகவும் உடைக்கப்படுமோ (இதுவே ஷிர்கின் சமூகப் பரிமாணம்) அப்போதுதான் இறையியல் புலங்களில் இணைவைப்பு (ஷிர்க்) தலைதூக்குகிறது. எனவே அசமத்துவம் மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடுவதென்பது ஒரு மார்க்கக் கடமையாகின்றது. ஏனெனில் யதார்த்தத்தில் அது இணைவைப்பு மற்றும் விக்கிரக வழிபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டமாகும்."
- அலீ ஷரீஅத்தி (1933 - 1977) ... மேலும்மேலும்
5 years ago