Namma Adayalam

Ratings
[Total: 1 Average: 5]
Sitefacebook.com/namma-adaiyalamComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்ற ஆண்டு மாத சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தி 1 லட்சத்து 5 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டது,

இதை பல கட்சிகள் விமர்சித்தனர்.
சம்பளம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர்.

இதை காரணம் காட்டி, தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு புதிய சம்பளம் வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதை அடுத்து கடந்த 13 மாதங்களாக பழைய சம்பளமான 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ க்கள் வாங்கி வந்தனர்.

அதே நேரத்தில் புதிய சம்பளத்தை வாங்க அனுமதிக்கும் படி ஸ்டாலினிடம் துரைமுருகன் மூலம் வற்புறுத்தி வந்தனர்.

இதையடுத்து எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க எம்.எல்.ரக்கள் அனைவருக்கும் புதிய சம்பளத்தை வழங்கும் படி சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.

தி.மு.க தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களே சம்பளம் வாங்குகிறோம். நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டதால் தி.மு.க எம்.எல்.ஏ க்கள் அனைவரும் புதிய சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளோம் என்று கடிதத்தில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தி.மு.க எம்.எல்.ஏ க்களுக்கு புதிய சம்பளம் வழங்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார்.

இனதயடுத்து தி.மு.க எம்.எல்.ஏ க்கள் 89 பேருக்கும் 1.7 2017 முதல் கணக்கிட்டு 13 மாத நிலுவைத் தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி மரணமடைந்த நாள் வரை (ஆகஸ்ட் 7-2018) கணக்கிட்டு அவருடைய வங்கிக் கணக்கிலும் 6 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.
... மேலும்மேலும்

Comment on Facebook

கொடுமை.

சென்னையில் தனியாக செல்லும் பெண்களை மயக்கி அவர்களை பலாத்காரம் செய்து வந்துள்ளான் ஒரு கால் டாக்ஸி டிரைவர்.

சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற கால் டாக்ஸி டிரைவர், அடையாறு, திருவான்மியூர், ஈசிஆர் பகுதிகளில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறான். ரோட்டில் தனியாக செல்லும் பெண்களிடம் யோக்கியன் மாதிரி நைசாக பேசி அவர்களை அவன் வலைக்குள் சிக்க வைப்பான், பின் என் முதலாளி சுமங்கலி பூஜை நடத்துறார். அந்த பூஜையில் பட்டுப்புடவை தர்றார். அவர் வீடு பக்கத்துலதான் இருக்கு என்று ஆசை வார்த்தை கூறுவான்.

இதனை நம்பிய பல பெண்களை காரில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைத்து அவர்களை கற்பழித்துவிட்டு, அவர்களிடமிருந்து பணம் நகைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளான்.

இதுகுறித்து பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் களத்தில் இறங்கிய போலீஸார் காமுகன் சுரேஷை கைது செய்தனர்.

அவனை பிடித்து விசாரித்ததில், எனக்கு கல்யாணம் ஆன பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர்கள் மேல ஒரு கண்ணு. அப்படிப்பட்டவர்கள் ரோட்டில் தனியாக போனால், நைசா பேசி அவர்களை என் வலைக்குள் சிக்க வைப்பேன் என கூறியுள்ளான் அந்த அயோக்கியன்.

இந்த மாதிரியான அயோக்கியன்களை எல்லாம் ஜெயிலில் அடைப்பதை விட உடனடியாக கொடூரமான தண்டனை கொடுத்து சாவடிக்க வேண்டும் என அவனால் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
... மேலும்மேலும்

Comment on Facebook

This is not N A style. Political news

டி.டி.வி தினகரன் தலைமையில் நாளை அ.ம.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது ... மேலும்மேலும்

சென்னையை சேர்ந்த 'அப்பல்லோ பயிற்சி மைய' இயக்குனர் சாம் ராஜேஸ்வரனை கைதுசெய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளன, ... மேலும்மேலும்

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார்

கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று (10-ந் தேதி) அறிவிப்பாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனவே அந்தத் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும். எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானதாக சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது
... மேலும்மேலும்

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, ... மேலும்மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு, திமுகவினர் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் ... மேலும்மேலும்

பாராளுமன்றத்தில் 22 மொழிகளில் எந்த மொழிகளிலும்
உறுப்பினர்கள் இனி பேசலாம்

புதுடெல்லி, ஆக.11–

பாராளுமன்றத்தில் 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இதுவரை, அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 17 மொழிகளை ஒரே நேரத்தில் மொழி பெயர்ப்பதற்கான வசதி மட்டுமே இருந்து வந்தது.

மீதமுள்ள காஷ்மீரி, டோங்ரி, கொங்கனி, சந்தலி, சிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால், பாராளுமன்றத்தில் இந்த மொழிகளில் பேசும் உறுப்பினர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சமீபத்தில் இந்த ஐந்து மொழிகளுக்கான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 8- வது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என தெரிவித்துள்ளார். இதனை உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறினார்.

பாராளுமன்றத்தில் 17 மொழிகளுடன் இந்த காஷ்மீரி, டோங்ரி, கொங்கனி, சந்தலி, சிந்தி ஆகிய மொழிகளிலும் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கமுடியும். மாநிலங்களவையின் முழு ஒத்துழைப்போடு மக்களவை இந்த வசதியை மேற்கொண்டுள்ளது.

உறுப்பினர்கள் எந்த மொழிகளிலும் பேசப்போகிறோம் என்பதை 24 மணி நேரத்திற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கூறினார். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
... மேலும்மேலும்

காங். தலைவர் ராகுல்காந்தி கேரள மக்களுக்காக தனது டிவிட்டர் பக்கத்தில், “முன்பு எப்போதும் இல்லாத கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் உள்ள காங்கிரசாரும், அருகில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். இந்த கடினமான நேரத்தில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார், ... மேலும்மேலும்

மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலையான சில நிமிடங்களில் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டார். ... மேலும்மேலும்

கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தியை மடக்கி பிடித்து கைது செய்தனர்....

கைது செய்வதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று திருமுருகன் கேள்வி... வாக்கு வாதத்தால் பரபரப்பு.
... மேலும்மேலும்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

~~~~~

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று வேதாந்தா குழுமம் தொடுத்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நிர்வாகப் பணிகளுக்காக ஆலையைத் திறப்பதற்கு அது அனுமதி வழங்கியுள்ளது. இது தங்களுக்குக் கிடைத்த வெற்றியென்று ஆலை நிர்வாகம் கூறியுள்ளது. சரியான முறையில் வாதிடாமல் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு துணை போகின்றதோ என்ற அய்யம் நமக்கு ஏற்படுகிறது. எந்த விதத்திலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுகிறது என்ற ஆதாரங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அப்படி தாக்கல் செய்யாமல் போனால் ஆலை செயல்படுவதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளிக்கக் கூடிய ஆபத்து உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்ட போது போதுமான ஆதரங்களோடு விரிவான முறையில் அரசாணை வெளியிடப்பட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எல்லா எதிர்கட்சிகளுமே வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை இப்போது வழக்கு விசாரணை செல்லும் திசையைப் பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உதவி செய்வதற்காகத்தான் தமிழக அரசு அத்தகைய குறைபாடுடைய அரசாணையைப் பிறப்பித்ததோ என்ற அய்யம் வலுப்படுகிறது. பசுமைத் தீர்ப்பாயத்தின் நேற்றைய உத்தரவுக்கு தடை வாங்கிட தமிழக அரசு உடனே உத்தரவிட வேண்டும். மீண்டும் ஆலையைத் திறப்பதற்கு வாய்ப்பளித்துவிடாமல் வழக்கைத் திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
... மேலும்மேலும்

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் பக்தர்கள் இன்றுஇலவசமாக குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசை விசேஷமானது என்பதால், அன்றைய தினம் கடல், ஆறு, அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் குளித்துவிட்டு, பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

இதனடிப்படையில், தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியிலும் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். மேகமலை வன உயிரினச் சரணாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுருளிஅருவிக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல நுழைவுக் கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு,இன்று சுருளி அருவிக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி செல்லலாம் என்று, மேகமலை வனச் சரணாலய கம்பம் கிழக்கு வனச்சரகர் துரை. தினேஷ் தெரிவித்துள்ளார்.
... மேலும்மேலும்

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் மலைப்பகுதிக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் ஊடுருவலைத் தடுக்க முதன்முறையாக சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ... மேலும்மேலும்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடந்தது. இந்த கலந்தாய்வில் பங்கேற்று அரசுக்கல்லூரிகளில் உள்ள இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 1ம் தேதி வகுப்புகள் தொடங்கியது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கிறது. இன்றைய கலந்தாய்வுக்கு தரவரிசைப்பட்டியலில் முதல் 2,352 பேர், அழைக்கப்பட்டுள்ளனர். ... மேலும்மேலும்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில் ஷேர்–ஆட்டோ மற்றும் டாக்சி சேவை 11–ந்தேதி (இன்று) முதல் தொடங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இந்த சேவைகள் 6 மாத காலத்துக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, அசோக்நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, சின்னமலை, நந்தனம், திருமங்கலம் மற்றும் அண்ணாநகர் டவர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் ஷேர்–ஆட்டோ சேவைகள் இயக்குவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேபோல கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, ஏஜி–டி.எம்.எஸ். மற்றும் வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து டாக்சி சேவை இயக்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து, ஷேர்–ஆட்டோ மற்றும் டாக்சி சேவை 3 கி.மீ. தூரத்திலான சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இயக்கப்படும்.

ஷேர்–ஆட்டோவில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.10–ம், டாக்சி சேவைக்கு ரூ.15–ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வி.ஆர்.மால், பாடி மேம்பாலம், சரவணா ஸ்டோர்ஸ், திருமங்கலம் வரையிலும், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தாமரை ஐ.டி.பார்க், ‘சிபெட்’ தலைமை அலுவலகம், கிண்டி பஸ் நிறுத்தம் வரையிலும், அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிலான பகுதிக்கும் டாக்சி சேவை இயக்கப்படும்.

இதேபோல ஏஜி–டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை, போஸ்ச் அலுவலகம், செம்மொழி பூங்கா வரையிலும், வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சிம்ஸ் ஆஸ்பத்திரி, முருகன் கோவில், மேனகா கார்ட்ஸ் வரையிலும் இயக்கப்படும்.

அசோக்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடியிருப்பு, செக்டர்–9, 10, ஆர்.டி.ஓ. மைதானம், செக்டர்–12, அண்ணாநகர் சாலை வரையிலும், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பட் சாலை, சென்னை வர்த்தக மையம், மியாட் ஆஸ்பத்திரி, செயின்ட் பாட்ரிக்ஸ் தேவாலயம் வரையிலும், ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி பஸ் நிலையம், திரு.வி.க.நகர் தொழிற்பேட்டை வரையிலும் ஷேர்–ஆட்டோ சேவை இயக்கப்படும்.

கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, விஜயநகர் சந்திப்பு, வேளச்சேரி வரையிலும், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பாடிகுப்பம், முகப்பேர் தொழிற்பேட்டை, ஜே.ஜே.நகர், முகப்பேர் மேற்கு, எம்.ஜி.ஆர். கல்லூரி, டேனியல் தாமஸ் பள்ளி வரையிலும், பரங்கிமலையில் இருந்து மேடவாக்கம் மெயின்ரோடு, ஐ.ஆர்.ஆர். வரையிலும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிலான தூரத்துக்கும் ஷேர்–ஆட்டோ சேவை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
... மேலும்மேலும்

ஆடி அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தென்காசியை அடுத்த குற்றாலம் அருவிக்கரையிலும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு நடத்துகின்றனர். ... மேலும்மேலும்

வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ... மேலும்மேலும்

காவிரியின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நேற்று 1.20 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் இன்று 1.24 லட்சம் கன அடியாக உயர்வு ... மேலும்மேலும்

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!!

EPS,OPS ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து!

அஇஅதிமுக -வில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் செய்த விதி மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.

அதிமுக வில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது பொதுச்செயலாளர் பதவி தான்-உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு.

இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு!
... மேலும்மேலும்

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசானமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ... மேலும்மேலும்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது - மத்திய அரசு ... மேலும்மேலும்

உதகையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 ஓட்டல்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்

யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் நேற்று ஆணையிட்டது

உச்சநீதிமன்ற ஆணைப்படி யானை வழித்தடத்தில் உள்ள 27 ஓட்டல்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்
... மேலும்மேலும்

டெல்லி சட்டப்பேரவையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திருவுருவப்படம் திறப்பு. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவப்படமும் டெல்லி சட்டப்பேரவையில் திறப்பு ... மேலும்மேலும்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக முத்தலாக் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவில்லை ... மேலும்மேலும்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழுவின் காலம் அக். 31 வரை நீட்டிப்பு - கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு. ... மேலும்மேலும்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு நவ.11ல் நடைபெறுகிறது.

1199 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.9 கடைசி நாள்.

சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது.
... மேலும்மேலும்

திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

- மு.க.ஸ்டாலின்.
... மேலும்மேலும்

”அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்"

”எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்"

”இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்"

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி வழக்கு.

4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
... மேலும்மேலும்

நீட் தேர்வை ஆன்லைனில், வருடத்திற்கு 2 முறை நடத்தலாம் என்ற மத்திய மனிதவள அமைச்சகத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது - நீட் தேர்வுத்துறை இயக்குநர் சான்யம் பரத்வாஜ். ... மேலும்மேலும்

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம். விவசாயக் கடன் தள்ளுபடி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி போராட்டம் ... மேலும்மேலும்

அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் பற்றி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு பகீர் கடிதம். பதிவாளர் கணேசனை பதவியில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை. பல்கலைக்கழக முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன்தான் காரணம் என குற்றச்சாட்டு ... மேலும்மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். கேரள மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - பிரதமர் மோடி. ... மேலும்மேலும்

திருப்பதி கோயிலில் ஆக.11 முதல் 16ம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதி. ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதி ... மேலும்மேலும்

கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் இன்று வெளியாகவில்லை. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படம் வெளியாகவில்லை. ... மேலும்மேலும்

நேற்று மாலை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் பருக் அப்துல்லாவை புது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15 இல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

நேற்று மாலை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் பருக் அப்துல்லாவை புது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15 இல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். ... மேலும்மேலும்

இன்று காலை குற்றாலம் மெயின் அருவியின் அழகு...

இன்று காலை குற்றாலம் மெயின் அருவியின் அழகு... ... மேலும்மேலும்

அரசுப் பள்ளி ஆசிரியர், காவல் துறை 5 லட்சம், ரயில்வே மற்றும் சுகாதாரத் துறையில் 4 லட்சம், ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் 1.2 லட்சம், நீதிமன்றங்களில் 5 ஆயிரம், அங்கன்வாடிகளில் 2 லட்சத்து 20 ஆயிரம், தபால் துறையில் 54,263 ஆக மொத்தம் 24 லட்சம் காலியிடங்கள் நாடு முழுவதும் உள்ளன. ... மேலும்மேலும்

நெல்லையையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ராக்கெட் ராஜா தினமும் காலை, மாலை வேளைகளில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் - நீதிபதி உத்தரவு.

நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை செய்யபட்ட வழக்கில் எனது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்த நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து
ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தாரணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
... மேலும்மேலும்

தலைவரைப் பார்க்க விரும்பிய குழந்தையுடன் சில ஆண்டுகளுக்கு முன் தலைவரால் ராகவேந்திரா மண்டபத்தில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதியினர்...

தலைவரைப் பார்க்க விரும்பிய குழந்தையுடன் சில ஆண்டுகளுக்கு முன் தலைவரால் ராகவேந்திரா மண்டபத்தில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதியினர்... ... மேலும்மேலும்

ரஜினிகாந்த் இன்று இவர்களை சந்தித்தார். யார் இவர்கள்? விரைவில்...

ரஜினிகாந்த் இன்று இவர்களை சந்தித்தார். யார் இவர்கள்? விரைவில்... ... மேலும்மேலும்

உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்தார்

கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் டாக்டர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர்.

இதுபற்றி ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறும் போது, கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவரை சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளித்தனர். மருந்துகளை ஏற்றுக் கொண்டு உடல் நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

கருணாநிதி செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறார். தேவைப்படும் போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. திரவ உணவு குழாய் வழியாக செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
... மேலும்மேலும்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, கேரள முதல்வர் பிரணராய் விஜயன் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, கேரள முதல்வர் பிரணராய் விஜயன் விசாரித்தார். ... மேலும்மேலும்

கன்னியாகுமரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளராக S.A .அசோகன் நியமனம் .மேற்கு மாவட்ட செயலாளராக ஜாண் தங்கம் நியமனம் என தலைமை கழகம் அறிவிப்பு ... மேலும்மேலும்

மேல்மருவத்தூர் ஆடிப்பூரம் விழாவினை முன்னிட்டு கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதன்படி, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தாம்பரம்- நெல்லை அந்தோதியா ரயில், வைகை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், மன்னார்க்குடி எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் இருமார்க்கமாகவும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். ... மேலும்மேலும்

சென்னை தாழம்பூரில் குடோனில் பாதிக்கப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குடோனில் குட்காவை பதுக்கி வைத்திருந்த ஜெயராஜ், மஞ்சுநாத், வடிவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர் ... மேலும்மேலும்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு

2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு.
... மேலும்மேலும்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.39 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.74 காசுகள் உள்ளன ... மேலும்மேலும்

தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க கணக்கெடுப்பு துவங்கியது! ... மேலும்மேலும்

காவேரி மருத்துவமனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நடிகர் கவுண்டமணி வருகை. ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Namma Adayalam – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .