Ratings | [Total: 0 Average: 0] |
Site | sigappunada.com |
2 years ago
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு மதுபான கடைகளும், அனுமதி பெற்ற பார்களும் ஏற்கனவே செயல்பட்டு வந்தது. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சின்னசேலம் நகரத்தில் இருந்த 5 மதுபான கடைகளும், கனியாமூர் கிராம பகுதியில் இருந்த மதுபான கடையும் அதிரடியாக மூடப்பட்டன. மேலும் அங்கு செயல்பட்டு வந்த பார்களுக்கும் கலால் தனிவட்டாட்சியர்.... ... மேலும்மேலும்
2 years ago
கோர்ட்டில் ஆதார் கட்டாயமில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால் ஒருபக்கம் எல்லாவற்றிற்கும் ஆதார் கட்டாயம் என்று வற்புறுத்துகிறது அரசு.
ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க சமர்ப்பிக்கப்படும் பல்வேறு ஆவணங்களில் ஆதாரும் ஒன்று. பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக்கொண்டும் வங்கிக் கணக்கு தொடங்க இயலும். ஆனால், நாட்டின் ஒரு சில வங்கிகளில் ஆதார் கார்டு இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்க வங்கிகள்.... ... மேலும்மேலும்
3 years ago
ரசிகர்கள் பல மாதங்களாகக் காத்திருந்த ‘வேலைக்காரன்’ போஸ்டர் ரிலீஸ் வெற்றிகரமாக முடிவடைந்தது.சிவகார்த்திகேயன் ஒரு கையில் லேப்டாப் பேக்கையும் மறு கையில் அரிவாளையும் வைத்திருப்பது போல ‘வேலைக்காரன்’ போஸ்டர் வெளியிடப்பட்டது. வேலைக்காரன் போஸ்டரை பார்த்ததும் எங்கோயோ பார்த்த மாதிரி தெரிய, கூகுளில் தேடியபோது பதில் கிடைத்தது. அது சுட்ட போஸ்டர் என்பது தெரிந்து விட்டது.
இது, ‘ஃபாலிங் டவுன்’ என்ற ஹாலிவுட் பட போஸ்டரின் காப்பி என சமூக வலைதளங்களில் சிலர் குறிப்பிடுகிறார்கள்..... ... மேலும்மேலும்
3 years ago
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்தி வருபவர் முருகசாமி. இவர் நடத்திவரும் பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளை பள்ளியின் நிர்வாகியான முருகசாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்வதாக அந்தப் பள்ளியின் முன்னாள் ஊழியர் அருண்காந்தி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து.... ... மேலும்மேலும்
3 years ago
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ எனப் பல படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியது. அடுத்து ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ஜீவாவை. அடுத்து அவர் நடிப்பில் உருவாகிய காமெடி படமான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் வெளியாகும் நிலையில் உள்ளது. அந்தப் படம் ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்தாலும் மாஸ் வெற்றியை அவர் கொடுத்தே ஆக வேண்டும் என்ற.... ... மேலும்மேலும்
3 years ago
திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசின் செயலற்ற தன்மையை பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக கடுமையாக விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கும் விதமாக ஊழலுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசின் இமாலய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டி அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் நடவடிக்கை.... ... மேலும்மேலும்
3 years ago
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள முடிச்சூர் மெயின்ரோடில் அன்னை அருள் ஏஜென்சி என்ற பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வேலையாட்கள் மரியாதை இல்லாமல் வா,போ,என்று ஒருமையில் பேசுகின்றனர் என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெண்களாக இருந்தால் மூடிக்கொண்டு போ என்று ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் பெண்கள் அந்த பங்கிற்கு வர அச்சப்படுகின்றனர். பெட்ரோல் போடும்போது ரீடிங்கை பார்க்க முடியாத அளவிற்கு வண்டியை முன்னே கொண்டு நிறுத்த சொல்கின்றனர்..... ... மேலும்மேலும்
3 years ago
திருச்சி மண்டல பொதுப்பணித் துறையின் முதன்மை பொறியாளராக இருப்பவர் பழனிக்குமார். 6 மாதத்திற்கு முன்பு இவரது கட்டுப்பாட்டில் 24 மணல் குவாரிகள் இருந்தன. 3 மாதத்திற்கு முன்னர் அதன் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது .ஒரு நாளைக்கு குவாரிக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் பல மணல் குவாரிகள் மூடப்பட்டு திருச்சி மண்டல பொதுப்பணித்துறை மேற்பார்வையில் 8 மணல் குவாரிகள் மட்டுமே.... ... மேலும்மேலும்
3 years ago
கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகம் முழுவதும் ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் கைவிடப்பட்டது. மே 16ஆம் தேதியான நேற்று மாலை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பயனாக பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்தது. குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தையில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், டிடிஎஸ்எப், டிஎம்டிஎஸ்பி, பிடிஸ், எம்எல்எஃப், ஏஏஎல்எஃப், டிடபிள்யூ,.... ... மேலும்மேலும்
3 years ago
‘கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கோவையைச் சேர்ந்த மர வியாபாரி சஜீவன் கூறியுள்ளார். கொடநாடு சம்பவம் நடந்தபோது தான் துபாயில் இருந்ததாகவும், சயன், மனோஜ் உள்ளிட்ட யாரையும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். டிரைவர் கனகராஜைத் தனக்கு நன்றாக தெரியும் என்றும், அவரை போயஸ் கார்டனில் இருந்து வேலையை விட்டு நிறுத்திய பின்னர், அவருடன் தான் பேசுவதில்லை என்றும் சஜீவன்.... ... மேலும்மேலும்
3 years ago
மதுரையில் சித்திரை திருவிழா நடக்கவிருப்பதை முன்னிட்டு செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய அமைச்சர்கள் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.
இதற்காக மதுரை வந்த அமைச்சர்கள் முதலில் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். பின்னர் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். வைகை ஆற்றையும் அழகர் ஆற்றில் இறங்கும் பகுதிகளையும் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மதுரையில்.... ... மேலும்மேலும்
3 years ago
‘டாஸ்மாக் கடைகளை மாற்றுவதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு, மக்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதில்லை’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே 3ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “கொளத்தூர் தொகுதியில் 99 சதவிகித இடங்களில் குடிநீர் பிரச்னை நிலவி வருவதால், இந்த பிரச்னையில் தமிழ்நாடு.... ... மேலும்மேலும்
3 years ago
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் . புரட்சி பாரதம் கட்சியின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளரான இவர், வக்கீலாகவும் பணியாற்றினார். இவர் கடந்த 18ம் தேதி காலை, அருகில் உள்ள ஏரிக்கரைக்கு நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லிங்கமூர்த்தி உட்பட ஐந்துபேரை கைது செய்தனர். ஏன் கொலை செய்தார் என்பது பற்றி லிங்கமூர்த்தி.... ... மேலும்மேலும்
3 years ago
சென்னை புழல் நீலகண்டன் தெருவை சேர்ந்தவர் அல்வின் கிறிஸ்டோபர்.இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியில் கட்டுவாராம். கடந்த வாரம் வசூலான ரூ.32 ஆயிரத்தை அந்த வங்கியில் கட்டியுள்ளார். அதில் 13 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. அவைகள் ஒரே வரிசை எண்ணில் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது. இதனால்.... ... மேலும்மேலும்
3 years ago
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலீசார் போல் நடித்து, மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த காசிமன்னன், சொந்தமாக லாரி வைத்துள்ளார். கடந்த வாரம் ஆத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு 8 டன் பாக்குகளை ஏற்றிக் கொண்டு இவரது லாரி சென்று கொண்டிருந்தது. ஓமலூர் அருகே உள்ள எலத்தூரில் சென்று கொண்டிருந்த போது, காவல்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார்.... ... மேலும்மேலும்
3 years ago
வீட்டை காலி செய்வதாக கூறி ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டும், ஏன் இன்னும் செய்யவில்லை என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ரூ.30 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக எஸ்விஎஸ் குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு.... ... மேலும்மேலும்
3 years ago
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சுபா என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காலை போலீஸ் உடையில் வந்த ஒருவர் வரவேற்பறையில் பணியில் இருந்தவர்களிடம், தான் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறியுள்ளார்.
பின், ‘விடுதியின் கோப்புகளை எடுத்துக்காட்டுங்கள்’ என மிரட்டியதுடன், 1,000 ரூபாய் பணமும் கேட்டிருக்கிறார். வரவேற்பறையில் இருந்தவர்கள் தங்கள் மேலதி காரிகளிடம்தான் பணம் வாங்க முடியும் என்று கூறியிருக்கின்றனர். உடனே.... ... மேலும்மேலும்
3 years ago
அடையார், சாஸ்த்திரிநகர் மதுவிலக்கு அமல்பிரிவில் வேலைபார்த்து தற்போது கண்ணகிநகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் வேலை பார்த்து வரும் ஆய்வாளர் வேலுவுக்கு கலால் ஏ.டி.சி.செந்தில் முருகன் 3ஏ மெமோ கொடுத்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? வேலு உத்தமர் காந்தி விருது வாங்கியவர்.
ஏன் மெமோ? அப்படி என்ன செய்தார்?
வேலு கலால் பிரிவில் இருந்தபோது, வழக்கு என்ற பெயரில் கணக்கு காண்பிப்பதற்காக தன் டிரைவர் உதவியுடன், அந்த டிரைவருக்கு தெரிந்த ஒருவரை, பிடித்து,.... ... மேலும்மேலும்
3 years ago
பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா வீட்டார் போபா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் மாப்பிள்ளையான ரிஸ்வான் வீட்டாரிடம் மாட்டிறைச்சி கிடைக்காததால், அசைவ உணவு வழங்க முடியவில்லை என்று கூறியதாகவும், அதைக் கேட்டு ரிஸ்வான் கோபமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டதைக் கண்டு.... ... மேலும்மேலும்
3 years ago
இரட்டை இலை வழக்கில் லஞ்சம் கொடுக்க முயன்றவர்களை கைது செய்த போலீசார், வாங்க முயன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயற்ற வழக்கில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஏப்ரல் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,'.... ... மேலும்மேலும்
3 years ago
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
2008ஆம் ஆண்டு செப்டம்பரில், மும்பையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் மோட்டார் பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் எட்டு பேர் பலியாகினர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவதைப் போலவே, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனி விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணைக்காக.... ... மேலும்மேலும்
3 years ago
திருவள்ளூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு, எஸ்.பியின் கட்டுப்பாட்டில் இல்லையென அதிகாரிகள் புலம்புகின்றனர். இதே மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரன்டென்டண்ட்டாக இருப்பவர் சாம்சங். இந்த மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை கேள்விக் குறியாக உள்ளது. கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் பொதுமக்கள் பொதுவாக முதலில் தொடர்பு கொள்வது போலீஸ் கன்ட்ரோல் ரூம் தொலைபேசிக்குதான். ஆனால் இந்த மாவட்டத்திற்கு போலீஸ் கன்ட்ரோல் ரூம் தொலைபேசி நம்பரே கிடையாது. இப்படி இருக்கையில் சாம்சங்.... ... மேலும்மேலும்
3 years ago
சமீபத்தில் வந்த ‘8 தோட்டாக்கள்’ என்ற படம் சத்தம் போடாமல் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் புதுமுகங்கள். இப்படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். 22 வயதேயான ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘8 தோட்டாக்கள்’ படம் கடந்த வாரம் வெளியானது. தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குநர்’ என்ற நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் டைட்டில்.... ... மேலும்மேலும்
3 years ago
அரசியல் பிரவேசமே இன்னும் முழுதாக அரங்கேறவில்லை. அதற்குள் தீபா மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது, சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என நேற்று (21.4.2017) புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து விண்ணப்ப படிவம் விற்றதில் மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கம் ஜானகிராம் என்பவர் தீபா மீது புகார் கொடுத்திருக்கிறார்.
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா,.... ... மேலும்மேலும்
3 years ago
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ-வும் ஊரக தொழில் துறை அமைச்சருமான பெஞ்சமின் சமீபத்தில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீயை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, “என்னம்மா பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதியில் 40 மணல் லாரிகளையும், மணல் ஏற்றி வந்த 20 மாட்டு வண்டிகளையும் பிடித்து வைத்திருக்கிறீர்களாமே? மரியாதையாக வண்டியை விட்டுவிடுங்க, இல்லையென்றால், நீங்கள் வேற ஊருக்குதான் மாற வேண்டியிருக்கும்” என்று தன் பாணியில் மிரட்டியிருக்கிறார்.
பதிலுக்கு திவ்யஸ்ரீ, “இந்த மிரட்டலுக்கு நான்.... ... மேலும்மேலும்
3 years ago
மாம்பழத்திற்கு பெயர் பெற்ற சேலம் மாநகர் இன்று மக்களின் விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளது. சேலம் மாநகராட்சி அலுவலகம் இங்கு பொறியியல் பிரிவில் ரெகுலர் எஞ்ஜீனியராக பணியாற்றுபவர் காமராஜ். ஸ்கிம் எஞ்ஜீனியராக பணியாற்றுபவர் ரவி. இருவருக்கும் இடையே யார் சீனியர் என்று மோதல் இருந்து வந்தது. விளைவு ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பில் ரவி சீனியர் என்றும், அவருக்குதான் ரெகுலர் எஞ்சினீயர் பதவி வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது..... ... மேலும்மேலும்
3 years ago
இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேவூர்.ராமசந்திரன். இவர் தற்போது பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
எப்படியென்றால், திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கரின் சொந்த ஊரான ஆற்காடு குப்பம் என்ற கிராமத்தில் ஒரு பிரம்மாண்ட திருமண மண்டபம் அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதை அமைச்சரின் உறவினர் ஒருவரே முறைகேடாக டெண்டர் எடுத்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், திருமண மண்டபத்தைத் தரமற்ற முறையில் கட்டி வருகிறாராம். அதிகாரிகளோ, பொதுமக்களோ யாராவது இதுபற்றி கேட்டால் அமைச்சர் பெயரை.... ... மேலும்மேலும்
3 years ago
தர்மயுத்தத்தின் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதென்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து, பன்னீர்செல்வத்துடன் இணைந்து அதிமுக-வையும், சின்னத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார், நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி கூறினார்..... ... மேலும்மேலும்
3 years ago
கோவில் நகரான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் தேரடித் தெருவில் மிகவும் பிரபலமான ஹோட்டல் அபிராமி ஹோட்டல். இந்த ஓட்டலை நடத்தி வந்தவர் பால்ராஜ். இந்த ஓட்டலில் கேஷியராக வேலை செய்து வந்தவர் வீரராகவபெருமாள். சில ஆண்டுகளுக்கு முன்பு பால்ராஜும், அவரது மனைவி தனலட்சுமியும் கூட்டாக சேர்ந்து ஓட்டல் தொழில் அபிவிருத்திக்காக நகரில் சில வியாபார பிரமுகர்களிடம் ரூபாய் ஒரு கோடி கடன் வாங்கி இருந்தார்களாம்.
இது குறித்து பால்ராஜும்,.... ... மேலும்மேலும்
3 years ago
வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர் செந்தாமரை கண்ணன், காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரடெண்டாக இருந்தவர் முத்தரசி இருவருமே தற்போது காத்திருப்பவர் பட்டியலில் வைக்கப்
பட்டுள்ளனர். காரணம் கூவத்தூர் விவகாரம்தான்.
‘நீதிமன்ற உத்தரவுபடி தான் நாங்கள் செயல்பட்டோம். நீதிமன்ற உத்தரவுபடி செயல்பட்டதற்கு இந்த நிலை’யா? என செய்தியாளர்களிடம் புலம்பிவருகின்றனர். ‘நியாயப்படி பார்த்தால் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. திரிப்பாதி மீது தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக எங்களை பலிகடா ஆக்கியது நியாயமா?’ என உள்துறை.... ... மேலும்மேலும்
3 years ago
கோவை கணபதி நகர் அருகேயுள்ள சங்கனூர் சாலையில் மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் அரசு மகளிர் காப்பகம் உள்ளது. இங்கு போலீசாரால் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் இளம் பெண்கள், விபசார வழக்குகளில் மீட்கப்படும் பெண்கள் ஆகியோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த எட்டாம் தேதி நிலவரப்படி ஒன்பது பேர் தங்கியிருந்தனர். அங்கு வார்டனாக இருப்பவர் தீபா. அன்று இரவு அவர்களில் ஐந்து பெண்கள் வார்டன் தீபாவை சரமாரியாக தாக்கிவிட்டனராம்.
அங்கிருந்த சில.... ... மேலும்மேலும்
3 years ago
இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுப்பதற்காக தினகரன் சார்பில் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் முயன்றதாக அவரைக் கைது செய்தனர் டெல்லி போலீசார். 17-ம் தேதி சுகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரிப்பதற்காக கஸ்டடியில் எடுத்துள்ளது காவல்துறை.
இந்த விவகாரத்தில் தினகரனை முதல் எதிரியாகவும், சுகேஷை இரண்டாவது எதிரியாகவும் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறை, இதுபற்றி தினகரனிடம் விசாரணை நடத்தவும் தீவிரமாகியுள்ளனர். சுகேஷின் வாக்குமூலத்தைப் பெற்று அதன்.... ... மேலும்மேலும்
3 years ago
'மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்’ படத்திலும், தெலுங்கில் `நேனே ராஜு நேனே மந்த்ரி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவையெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்கள். இந்தப் படங்கள் முடியும் தருவாயில் உள்ளன. அதன்பிறகு நடிக்க கைவசம் படம் இல்லை. யார் யாருக்கோ.... ... மேலும்மேலும்
3 years ago
வள்ளியூர் ரயில் நிலையத்தில் கழிப்பிடம், இருந்தும் இல்லாநிலை தான் தற்போது உள்ளது. காரணம் தண்ணீர் இல்லை. இதனால் ரயில் நிலையத்தில் நுழைந்தவுடனே மூக்கை மூடிக் கொள்ள வேண்டியுள்ளது. அந்தளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அங்கு கழிப்பிடம் செல்ல முடியாமல் ரயில் பயணிகள் குறிப்பாக பெண்கள் ,குழந்தைகள் பரிதவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
வாட்டர் பாட்டிலை கொண்டு போய் கழிப்பிடம் இருக்கவும் வகை இல்லை. அந்த அளவுக்கு சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டர் தண்ணீர்.... ... மேலும்மேலும்
3 years ago
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் 6-வது பிளாக்கில் “வேளாங்கண்ணி பப்ளிக் ஸ்கூல்” என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
பிரிகேஜி முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1400 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்பிப்பதாக கூறி அதற்கான கட்டணம் வசூலிதிருக்கிறது நிர்வாகம்.
ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட மாற்று சான்றிதழில் (டி.சி) சி.பி.எஸ்.இ பள்ளி என்று குறிப்பிடாமல் மெட்ரிக்குலேசன் என்று குறிப்பிட்டது தெரியவந்திருக்கிறது. அந்த மாணவன்.... ... மேலும்மேலும்
3 years ago
3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜெல்லி கொடுக்கக்கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஜெல்லிக்கு தடைவிதித்துள்ளன. ஏனெனில், இவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில் இது போன்ற உணவு பண்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கேரளாவில், ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டியைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன்.... ... மேலும்மேலும்
3 years ago
தமிழக விவசாயிகள் கடந்த 34 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில்.... ... மேலும்மேலும்
3 years ago
டெல்லி யூனியன் பிரதேசத்தில், ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்கும் நடந்த அதிகார மோதலால், யாருக்கு அதிகாரம் என்று நீதிமன்றத்துக்கு சென்றதில், ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, புதுச்சேரியையும் பாஜக கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, ஆளுநர் தலையீடு அதிகரித்து வருகிறது .
பாண்டிச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில். அரசு அதிகாரியை பணிமாற்றம் செய்ய ஆளுநருக்குதான் அதிகாரம் உள்ளது, ஆட்சியாளர்களுக்கு இல்லை.... ... மேலும்மேலும்
3 years ago
சித்திரை மாத முழுவதும் சிறப்பு விழாக்கள் பல ஒவ்வொரு ஆலயங்களிலும் நடைபெறுகின்றன. சித்திரை திருவிழா மாதம் என்று கூறும் அளவிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் விதவிதமான பெயர்களிலும் வெவ்வேறு விதமான விழா வடிவங்களில் கொண்டவாறு உள்ளன.
சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களை காண அந்தந்த ஊர்களிலும் ஏராளமான பொதுமக்களும், வெளிநாட்டினரும் அதிகளவு குவிகின்றனர். சித்திரையின் வெயில் தாண்டவத்தையும் தாண்டி இறைவனின் அருள் தாண்டவத்தையும் விழாகோல இறை உருவங்களையும் காண மக்கள்.... ... மேலும்மேலும்
3 years ago
சமக தலைவர் சரத்குமார் வீட்டுக்கு நேற்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அவரிடம் வீட்டில் வைத்தே விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை தேனாம் பேட்டை ஜெயம்மாள் தெரு மற்றும் தி.நகர் பவுல் அப்பாசாமி தெருவில் உள்ள ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர்,.... ... மேலும்மேலும்
3 years ago
சிரியாவின் வடக்கு மாகாணமான இத்லிபின் கான் ஷெய்கான் நகரில் கடந்த திங்கள் கிழமை அதிகாலை நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் இது. குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே பறந்து செல்லும் அடையாளம் தெரியாத விமானம் ரசாயன வாயு அடங்கிய குண்டுகளை வீசிவிட்டுச் செல்கிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் வாயில் நுரை தள்ள, துள்ளத் துடிக்க இறந்துபோகிறார்கள் மக்கள். மொத்தம் 72 பேர் என்கிறது சிரியா. ஆனால், 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள்..... ... மேலும்மேலும்
3 years ago
‘காங்கிரஸுடன் சேர்ந்து தேசிய அளவில் திமுக ஊழல் செய்துவிட்டது’ என்று பாஜக-வின் மூத்தத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
திமுக கட்சியின் வேட்பாளரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் தொடர்பாகவும், தமிழர்கள் பற்றியும் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் இவர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கோவை விமான நிலையத்தில் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான.... ... மேலும்மேலும்
3 years ago
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கேரக்டரில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் நடிக்கிறார். ‘ஒக்கடு மிக்கிலது’ எனப் பெயரிட்டிருக்கும் இத்திரைப்படத்தில் மொத்தமாக இரண்டு கேரக்டரில் இவர் நடிக்கிறார். 1990ஆம் ஆண்டுகளில் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை இருந்த நிலையை அடிப்படையாகக் கொண்டதும், 2017ஆம் ஆண்டில் மாணவர்கள் அமைப்பின் தலைவராக ஒரு கேரக்டரிலும் என அந்த இரண்டு கேரக்டர்கள் திட்டமிட்டிருக்கின்றன. நேற்று (06.04.17) மாலை இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் கணக்கு.... ... மேலும்மேலும்
3 years ago
ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணியினர் ஜெயலலிதா மரணத்தை சித்திரித்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணியினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை மையப்படுத்தியே பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின், ராஜாஜி அரங்கில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற மாதிரியை தயாரித்து வியாழக்கிழமை பிரசாரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தப் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொருக்குப்பேட்டையில் மேற்கொண்டார். அவரின் பிரசார வாகனத்துக்கு முன்பாக, கண்ணாடி பேழையில் ஜெயலலிதா உடல்.... ... மேலும்மேலும்
3 years ago
ஜூலை, 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி நடைமுறை அமலுக்கு வரும் போது, 12 சதவீத வரியின் கீழ் வரும் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், 'தங்கத்தை, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்' என, பரிந்துரை செய்துள்ளார். 12 சதவீதத்தை தாண்ட கூடாது ''ஒரு தொழில் நல்ல முறையில் வளர வேண்டும்.... ... மேலும்மேலும்
3 years ago
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அஜீத்தின் புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவா. ‘சாய்… சாய்…’ என்ற வார்த்தைகளுடன் அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தில், கையில் தற்காப்புக்கலை ஆயுதத்துடன் இளமையுடன் காட்சியளிக்கிறார் . ஏற்கெனவே, சிக்ஸ் பேக் உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்.... ... மேலும்மேலும்
3 years ago
ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓ.பி.எஸ் அணியும், தினகரன் அணியும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி பிரசாரம் செய்கிறார்கள். இந்நிலையில், தண்டையார்பேட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பேசினார். அப்போது அவர், “ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க மத்திய போலீஸ் படையை தீவிரப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். அப்படியென்றால் கறுப்புப் பணத்தை பிரதமர் மோடி எப்படி.... ... மேலும்மேலும்
3 years ago
விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரம் சின்னத்திரையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு வார இதழுக்கு நந்தினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நானும் கார்த்திக்கும் கடந்த ஒரு வருடமாக காதலித்தோம். அதன் பின் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டோம்..... ... மேலும்மேலும்
3 years ago
ஆர்.கே.நகரில் விடிய விடிய பணப்பட்டுவாடாவில் தினகரன் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.11,18,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக ஓ.பி.எஸ் அணியினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் காலை 6.30 மணிக்கு பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1,28,000 பணம்.... ... மேலும்மேலும்