Tamilnadu Today

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamilnadutoday.com



3 months ago

Tamilnadu Today
Sabari tours
Coimbatore
All types of vehicle at best rates
9789303020
9362303020
Sabaritoursandtravelscbe@gmail.com

Sabari tours
Coimbatore
All types of vehicle at best rates
9789303020
9362303020
Sabaritoursandtravelscbe@gmail.com
... மேலும்மேலும்

6 months ago

Tamilnadu Today

Daily Viral Stories
This Bear Cub is Proof You Should Never Give Up 🐻 👏

Credit: @ViralHog
... மேலும்மேலும்

1 years ago

Tamilnadu Today

... மேலும்மேலும்

2 years ago

Tamilnadu Today
female candidate wanted!
job requirement for accountant,requirements:
1)B.com with tally
4)minimum 1year experiance
3)basic computer knowledegesalary 8000/-per month..Note:coimbatore circle..if any one intrested,to call at my number vijay: 7845028062..
address:
Dhanya enterprises
47,thendral nagar
veerakeralam road
coimbatore-07.

female candidate wanted!
job requirement for accountant,

requirements:
1)B.com with tally
4)minimum 1year experiance
3)basic computer knowledege

salary 8000/-per month..

Note:coimbatore circle..

if any one intrested,to call at my number vijay: 7845028062..
address:
Dhanya enterprises
47,thendral nagar
veerakeralam road
coimbatore-07.
... மேலும்மேலும்

News18 Tamil Nadu
சுமார் 2000 ஏழைகளுக்கு தினமும் உணவளிக்கும் தஞ்சாவூர் தம்பையா....!

#இப்படிக்கு_இவர்கள்
... மேலும்மேலும்

Comment on Facebook

2 years ago

Tamilnadu Today

ஆன்லைனில் பொருள்கள்/சேவைகள் வாங்க அல்லது விற்க புதிய Group ஒன்று துவக்கப்பட்டுள்ளது...........
இப்புதிய சேவையில் சேர்ந்து பயன் பெற அழைக்கின்றோம்.........
இச்செய்தியை உங்கள் நன்பர்களுக்கும் பிற குரூப்களுக்கும் share செய்யவும்.........
m.facebook.com/groups/583454738530721?_e_pi_=7%2CPAGE_ID10%2C6028933912

நன்றி
... மேலும்மேலும்

4 years ago

Tamilnadu Today

1. உன் செயலுக்கு, நீயே முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்: பிறரது எண்ணம், சொல், உணர்ச்சி, செயல் போன்றவற்றால் நீ தூண்டப்பட்டால், உடனடியாக, உணர்ச்சி வசப்பட்டு, எதிர்வினையைக் காட்டி அவதிப்படாதீர். சற்று சிந்தித்து, சுய பொறுப்புடன் செயல்பட்டால், நல்ல விளைவுகள் உண்டாகும்.

2. இலக்கை மனதில் இருத்தி, பயணத்தைத் தொடங்கு: அடைய வேண்டிய குறிக்கோளை மனதில் பதித்து,’கருமமே கண்ணாயினாராய்’ செயல்பட்டால், பயணம் வெற்றிப் பாதையில், உறுதியாய்ச் செல்லும்.

3. முதன்மையானவற்றை முந்திச் செய்: செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, முக்கியமானவற்றை அவசரமின்றி, முனைப்புடன் முதலில் செய்தால், கால நிர்வாகம் கையில் இருக்கும், வெற்றி வீட்டு வாயிலில் நிற்கும்!

4. நீ மட்டுமின்றி, பிறரும் வெற்றி பெற நினை: உங்களது நலனோடு, பிறர் நலனையும் மனதில் இருத்தி, வெற்றி-தோல்வி மனப்பான்மை அற்ற பரந்த மனத்துடன், பிறருடன் பேச்சுவார்த்தை அல்லது பணியில் ஈடுபடும்போது, மனித உறவுகள் மேம்படவும், வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

5. முதலில் புரிந்துகொள்; பிறகு புரிந்து கொள்ளப்பட நாட்டம் கொள்: முதலில் பிறர் சொல்வதை கவனமாகக் கேட்டு, பின்பு அவரிடம் உரையாடினால், செய்திப் பரிமாற்றம் நல்ல முறையில் நடந்து, இருவரும் பயன் பெறலாம்; உறவும் மேம்படும்.

6. ஒருங்கிணைந்த, கூட்டு சக்தியாய் செயல்படு: பலர் இணையும்போது, வெறும் சேர்க்கையாக இன்றி, கூட்டு சக்தியாக, குழுமமாக செயல்பட்டால், பல மடங்கு பயன்களை அடையலாம்.

7. உன்னை தினமும் புதுப்பித்துக்கொள்: தினமும் உடல், உள்ளம், உணர்வு, ஆன்மிக அடிப்படையில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நாள் முழுவதும் சோர்வின்றி, உற்சாகத்தோடும், சக்தியோடும் செயலாற்ற முடியும்.

முதல் மூன்று பழக்கங்கள் (1,2,3) தனி மனித வெற்றிக்கானவை. அடுத்த மூன்று பழக்கங்கள் (4,5,6) ஒருவர் பொது வாழ்வில் வெற்றி பெறத் தேவையானவை. கடைசி பழக்கம் (7) அனைத்தையும் உள்ளடக்கி, இணைத்துச் செல்வதாகும்.

வாழ்வில் உயர்ச்சி அடைய, மேற்கூறிய ஏழு பழக்கங்களையும் கடைப்பிடிப்பது எளிதுதானே!
... மேலும்மேலும்

4 years ago

Tamilnadu Today

... மேலும்மேலும்

Comment on Facebook

5 years ago

Tamilnadu Today

... மேலும்மேலும்

Comment on Facebook

தொட்டு தொடரும் பாரம்பரியம்

5 years ago

Tamilnadu Today

... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today
‘ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான் என்பது கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த மூடநம்பிக்கை தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.எறும்பு இனம்?மழைக்காலம்தானே, ஈசல்களின் காலம். ஈசல்கள் பெருகும் இந்த நேரத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை இணைப் பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை கிளைத் தலைவருமான ப.குமாரசாமி, ஈசலைப் பற்றிச் சொல்லும் அறிவியல் உண்மைகள், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.“கறையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல். கறையான் புற்றில் இருந்து ஈசல்கள் வெளிப்படுவதைப் பார்த்திருக்கலாம். ஆரம்பத்தில், ஈசலை (Winged white ants) இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று ஆங்கிலத்தில் வகைப்படுத்தினார்கள். ஆனால், கறையான் எறும்பு இனத்தைச் சேர்ந்தது அல்ல. ஆறு கால்களைக் கொண்ட பூச்சியினத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.சமுதாயப் பூச்சிகறையான், கூட்டமாக வாழும் சமுதாயப் பூச்சி வகையைச் சேர்ந்தது. ஒரு புற்றில் ஆயிரம் முதல் 5 லட்சம் கறையான்கள்கூட இருக்கலாம்.தேனீக்களில் உள்ளது போலவே கறையான்களிலும் ராணி, ஆண், சிப்பாய், வேலைக்காரர்கள் என்று 4 வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றவை ராணிக் கறையான்கள். 4 வகைக் கறையான்களுக்கும் இதுவே தாய். ராணியைக் கர்ப்பமடையச் செய்வதே ஆண் கறையான்களின் பணி. புற்றை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியைச் சிப்பாய்க் கறையான்களும், உணவு சேகரிப்பு, புற்று கட்டுதல் போன்ற வேலைகளை வேலைக்காரக் கறையான்களும் செய்கின்றன.தனி ஏற்பாடுஒரே புற்றில் கறையான்கள் கட்டுக்கடங்காமல் பெருகினால் இடநெருக்கடி ஏற்படும். அருகருகில் வேறு புற்றுகளைத் தோற்றுவித்தாலும், உணவுப் போட்டி ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக ராணிக் கறையான்கள் சில சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அதில் இருந்து வெளிவருபவைதான் ஈசல்கள். இலவம் பஞ்சு மரமும் எருக்கஞ்செடியும் பஞ்சைப் பறக்கவிட்டு, தங்கள் விதைகளைப் பரப்புவதற்கு ஒப்பானதுதான் ஈசல் பறப்பதும்.ராணி ஈசல் இடுகிற முட்டையில் இருந்து வெளியே வந்த ஈசல் குஞ்சுகள் வெள்ளை நிறத்தில், நான்கு இறக்கைகளுடன் காணப்படும். அவற்றுக்கு வேலைக்கார கறையான்கள்தான் உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன. வளர்ந்ததும், ஈசல்கள் புற்றில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கும்.மரிப்பா, பிறப்பா?மழைக்காலம் தொடங்கியதும், (தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர் மாதங்கள்) ஈசல்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியேறும். ஈசல்களுக்கு 4 இறக்கைகள் இருந்தாலும்கூட அவற்றால் காற்றை எதிர்த்துப் பறக்க முடியாது. அதனால், காற்றில்லாத அமைதியான நேரத்தையே, அவை பறக்கத் தேர்ந்தெடுக்கின்றன.புற்றில் இருந்து வெளிவருகிற ஈசல்களில் சுமார் 80 சதவீதம்வரை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகிவிடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம். இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கறையான் காலனியை உருவாக்குகின்றன” என்கிறார்.எது உண்மை?அதெல்லாம் சரி, ஈசலின் உண்மையான ஆயுள்காலம் தான் என்ன? “கறையான்களில் 4 உறுப்பினர் வகைகளுக்கும் வெவ்வேறு ஆயுள்காலம் உண்டு. இதன்படி, ஈசலின் (இதுவும் ராணி கறையான்தான்) ஆயுள்காலம் 12 முதல் 20 ஆண்டுகள். நான்கு வகைகளில் வேலைக்காரக் கறையான்கள்தான் குறைந்த ஆயுள்காலம் கொண்டவை. அவை 4 முதல் 5 ஆண்டுகள்வரை வாழ்கின்றனஇன்னொரு முக்கியமான விஷயம். விவசாயத்தில் மனிதர்களுக்கு முன்னோடி இந்தக் கறையான்கள்தான். தாவரங்களில் உள்ள செல்லுலோஸ்தான் கறையான்களின் உணவு. ஆனால், அவற்றை ஜீரணிக்கும் சக்தி இவற்றுக்குக் கிடையாது என்பதால், சேகரித்துவைத்த மரத்துண்டுகளின் மீது ஒரு வகைக் காளான்களைப் பயிரிடுகின்றன. காளான்கள் மிருதுவாக்கிய உணவையே கறையான்கள் உண்கின்றன” என்கிறார்.இனிமேல் ஈசல் ஒரே நாளில் இறந்து போகும் என்று யாராவது சொன்னால், அவர்களிடம் உண்மையைச் சொல்லுங்கள்.

‘ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான்' என்பது கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த மூடநம்பிக்கை தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

எறும்பு இனம்?

மழைக்காலம்தானே, ஈசல்களின் காலம். ஈசல்கள் பெருகும் இந்த நேரத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை இணைப் பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை கிளைத் தலைவருமான ப.குமாரசாமி, ஈசலைப் பற்றிச் சொல்லும் அறிவியல் உண்மைகள், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

“கறையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல். கறையான் புற்றில் இருந்து ஈசல்கள் வெளிப்படுவதைப் பார்த்திருக்கலாம். ஆரம்பத்தில், ஈசலை (Winged white ants) இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று ஆங்கிலத்தில் வகைப்படுத்தினார்கள். ஆனால், கறையான் எறும்பு இனத்தைச் சேர்ந்தது அல்ல. ஆறு கால்களைக் கொண்ட பூச்சியினத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.

சமுதாயப் பூச்சி

கறையான், கூட்டமாக வாழும் சமுதாயப் பூச்சி வகையைச் சேர்ந்தது. ஒரு புற்றில் ஆயிரம் முதல் 5 லட்சம் கறையான்கள்கூட இருக்கலாம்.

தேனீக்களில் உள்ளது போலவே கறையான்களிலும் ராணி, ஆண், சிப்பாய், வேலைக்காரர்கள் என்று 4 வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றவை ராணிக் கறையான்கள். 4 வகைக் கறையான்களுக்கும் இதுவே தாய். ராணியைக் கர்ப்பமடையச் செய்வதே ஆண் கறையான்களின் பணி. புற்றை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியைச் சிப்பாய்க் கறையான்களும், உணவு சேகரிப்பு, புற்று கட்டுதல் போன்ற வேலைகளை வேலைக்காரக் கறையான்களும் செய்கின்றன.

தனி ஏற்பாடு

ஒரே புற்றில் கறையான்கள் கட்டுக்கடங்காமல் பெருகினால் இடநெருக்கடி ஏற்படும். அருகருகில் வேறு புற்றுகளைத் தோற்றுவித்தாலும், உணவுப் போட்டி ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக ராணிக் கறையான்கள் சில சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அதில் இருந்து வெளிவருபவைதான் ஈசல்கள். இலவம் பஞ்சு மரமும் எருக்கஞ்செடியும் பஞ்சைப் பறக்கவிட்டு, தங்கள் விதைகளைப் பரப்புவதற்கு ஒப்பானதுதான் ஈசல் பறப்பதும்.

ராணி ஈசல் இடுகிற முட்டையில் இருந்து வெளியே வந்த ஈசல் குஞ்சுகள் வெள்ளை நிறத்தில், நான்கு இறக்கைகளுடன் காணப்படும். அவற்றுக்கு வேலைக்கார கறையான்கள்தான் உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன. வளர்ந்ததும், ஈசல்கள் புற்றில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கும்.

மரிப்பா, பிறப்பா?

மழைக்காலம் தொடங்கியதும், (தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர் மாதங்கள்) ஈசல்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியேறும். ஈசல்களுக்கு 4 இறக்கைகள் இருந்தாலும்கூட அவற்றால் காற்றை எதிர்த்துப் பறக்க முடியாது. அதனால், காற்றில்லாத அமைதியான நேரத்தையே, அவை பறக்கத் தேர்ந்தெடுக்கின்றன.

புற்றில் இருந்து வெளிவருகிற ஈசல்களில் சுமார் 80 சதவீதம்வரை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகிவிடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம். இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கறையான் காலனியை உருவாக்குகின்றன” என்கிறார்.

எது உண்மை?

அதெல்லாம் சரி, ஈசலின் உண்மையான ஆயுள்காலம் தான் என்ன? “கறையான்களில் 4 உறுப்பினர் வகைகளுக்கும் வெவ்வேறு ஆயுள்காலம் உண்டு. இதன்படி, ஈசலின் (இதுவும் ராணி கறையான்தான்) ஆயுள்காலம் 12 முதல் 20 ஆண்டுகள். நான்கு வகைகளில் வேலைக்காரக் கறையான்கள்தான் குறைந்த ஆயுள்காலம் கொண்டவை. அவை 4 முதல் 5 ஆண்டுகள்வரை வாழ்கின்றன

இன்னொரு முக்கியமான விஷயம். விவசாயத்தில் மனிதர்களுக்கு முன்னோடி இந்தக் கறையான்கள்தான். தாவரங்களில் உள்ள செல்லுலோஸ்தான் கறையான்களின் உணவு. ஆனால், அவற்றை ஜீரணிக்கும் சக்தி இவற்றுக்குக் கிடையாது என்பதால், சேகரித்துவைத்த மரத்துண்டுகளின் மீது ஒரு வகைக் காளான்களைப் பயிரிடுகின்றன. காளான்கள் மிருதுவாக்கிய உணவையே கறையான்கள் உண்கின்றன” என்கிறார்.

இனிமேல் ஈசல் ஒரே நாளில் இறந்து போகும் என்று யாராவது சொன்னால், அவர்களிடம் உண்மையைச் சொல்லுங்கள்.
... மேலும்மேலும்

Comment on Facebook

Nalla thakaval

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today
how many knows the name of this temple....

how many knows the name of this temple.... ... மேலும்மேலும்

Comment on Facebook

Kailasanathar Temple, Kanchipuram, Tamil Nadu

5 years ago

Tamilnadu Today

... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today
The Peruvudaiyar Kovil or Brihadeeswarar Temple Circa 1000 CE (Tamil: பெருவுடையார் கோவில், peruvuḍaiyār kōvil ), also known as Rajarajeswaram, at Thanjavur in the Indian state of Tamil Nadu, is the worlds first complete granite temple and a brilliant example of the major heights achieved by Cholas in temple architecture. It is a tribute and a reflection of the power of its patron RajaRaja Chola I. It remains as one of the greatest glories of Indian architecture.The temple is part of the UNESCO World Heritage Site Great Living Chola Temples.This temple is one of Indias most prized architectural sites. The temple stands amidst fortified walls that were probably added in the 16th century. The Vimana - or the temple tower - is 216 ft (66 m) high and is among the tallest of its kind in the world. The Kalash or Chikharam (apex or the bulbous structure on the top) of the temple is not carved out of a single stone as is widely believed. There is a big statue of Nandi (sacred bull), carved out of a single rock, at the entrance measuring about 16 feet long and 13 feet high. The entire temple structure is made out of hard granite stones, a material sparsely available currently in Thanjavur area where the temple is located.

The Peruvudaiyar Kovil or Brihadeeswarar Temple Circa 1000 CE (Tamil: பெருவுடையார் கோவில், peruvuḍaiyār kōvil ), also known as Rajarajeswaram, at Thanjavur in the Indian state of Tamil Nadu, is the world's first complete granite temple and a brilliant example of the major heights achieved by Cholas in temple architecture. It is a tribute and a reflection of the power of its patron RajaRaja Chola I. It remains as one of the greatest glories of Indian architecture.The temple is part of the UNESCO World Heritage Site "Great Living Chola Temples".

This temple is one of India's most prized architectural sites. The temple stands amidst fortified walls that were probably added in the 16th century. The 'Vimana' - or the temple tower - is 216 ft (66 m) high and is among the tallest of its kind in the world. The Kalash or 'Chikharam' (apex or the bulbous structure on the top) of the temple is not carved out of a single stone as is widely believed. There is a big statue of Nandi (sacred bull), carved out of a single rock, at the entrance measuring about 16 feet long and 13 feet high. The entire temple structure is made out of hard granite stones, a material sparsely available currently in Thanjavur area where the temple is located.
... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today
அந்தக் காலத்தில் தீபாவளி...இல்லாமையைத் தீபாவளிபோல் வெளிச்சம்போட்டுக் காட்டும் பண்டிகை வேறெதுவும் இல்லை.1977-ம் ஆண்டு தீபாவளி முடிந்து மறுநாள் விடியவில்லை. பின்னிரவில் ஆரம்பித்து, வெள்ளி முளைக்கும்போது பெரும் புயல் அடித்துக் காலை ஏழு மணிக்கு ஓய்ந்தது. கிராமங்களுக்கு வந்திருந்தவர்கள் திரும்ப முடியவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர்க்காரர்கள் தீபாவளிக்கு ஊருக்கு வருவது அப்போது முதல் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. இயற்கையின் சில மணி நேரச் சீற்றமே வரலாற்றின் இழைகளை அறுத்துவிடுகிறதே!அப்போது தஞ்சைப் பகுதி கிராமங்களும் நகரங்களும் தீபாவளியில் புதுச் சோபை பெற்றுவிடும். வெளி மாநிலங் களில் வேலையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வரு வார்கள். புதுப்புது முகங்களாக இருக்கும். தங்கள் ஊரை அவர்களும் புதிதாய்ப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். எல்லாம் விழிவிரித்து பார்க்கும் வியப்பு மயம்.கலாச்சார செருகளம்காவிரியில் குளித்தாலும் கங்கா ஸ்நானம்தான். அங்கேயே முரண்பாடு. தமிழ்நாட்டுக் கலாச்சாரத் தளத்தில் தீபாவளி சர்ச்சையாகிப்போனதில் வியப்பில்லை. புராணங்களுக்கு மக்களின் மீதிருந்த பிடியை உடைப்பதற்குத் தமிழ் அடையாள ஆர்வலர்கள் தேர்ந்துகொண்ட செருகளம் தீபாவளி. பொருளாதார, சாதியக் கட்டமைப்பின் கீழ்த் தட்டுகள் பொங்கல் என்ற பொதுவெளியில் பங்கேற்கும் அளவுக்குத் தீபாவளி தளர்ந்து இடம்தராது.தீபாவளி மறுப்பு, பிரச்சாரத்தோடு நின்றுவிடாது. ஒரு கிராமத்தில் இந்த மறுப்பு ஊர்க் கட்டுமானமாகவே இருந்தது. ஆனாலும், புத்தாடை, வெடியெல்லாம் இல்லாமல் குழந்தைகளைச் சாக்காக வைத்துப் பலகாரம் மட்டும் செய்துவிடுவார்கள். தீபாவளி என்பது தீபங் களின் வரிசை. ஆனால், பண்டிகையில் இதற்கான அடையாளத்தை நான் பார்த்ததில்லை. இப்போதுதான் விளம்பரங்களில் இந்தச் சொல்லை அர்த்தப்படுத்தும் விதமாகப் பட்டில் ஜொலிக்கும் பெண்கள் வரிசையாகத் தீபம் ஏற்றுவதைப் பார்க்கிறோம்.விவசாயிகளுக்குத் தலைவலிஐப்பசி அடைமழைக் காலத்தில் வரும் தீபாவளி, காவிரிப் படுகை விவசாயிகளுக்குப் பெரும் தலைவலிதான். வரவே இல்லாத காலத்தில் ஒரு பெருஞ்செலவு. அப்போதுதான் சம்பா நடவுக்குச் செலவுசெய்து கை ஓய்ந்திருப்பார்கள். பிறந்த வீட்டுப் பெண்களுக்கு வரிசை, துணிமணி என்று தவிர்க்க முடியாத செலவினமாக தீபாவளி வந்து நிற்கும். இப்போதுபோல் நான்கு லட்சம் ஏக்கர் அளவுக்குக் குறுவை பயிரிடுவது இல்லை.ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் தீபாவளிச் செலவுக்கு ஆகும் என்று நட்டுவைப்பார்கள். சரியான மழையில் அறுவடைக்கு வரும். அதை நெல் மண்டிக்குக் கொண்டுசென்றால், தீபாவளி நெருக்கடியை ஆதாயமாக்க விலை குறைத்துக் கேட்பார்கள். ஒரு தீபாவளியின்போது மூட்டை நெல் பதினெட்டு, பதினாறு ரூபாய்க்கு விற்க வேண்டியிருந்தது.கடைத்தெருவில் விவசாயிகளின் குமுறல். “துணிமணி, பலகாரம் இல்லையென்றால் தீபாவளி போக மாட்டேன்னு சொல்லுமா?” இப்படிக் கேட்டுக் கொண்டே ஒரே ஒரு மூட்டை நெல்லை விற்று, தலைக்கு எண்ணெயும், சாமி கும்பிட பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வாங்கிக்கொண்டு மற்ற மூட்டைகளைத் திருப்பி எடுத்துச் சென்றார்கள்.பாலும் பழமும்பெரும்பாலான மிராசுதாரர்களுக்கு மளிகை, ஜவுளிக் கடைகளில் பற்றுவரவு இருக்கும். அங்கே தங்கள் பற்றாக மளிகைச் சாமான்களையும் துணிமணிகளையும் பெற்றுக்கொள்வார்கள். தை பிறந்து அறுவடை முடிந்துதான் இந்தக் கணக்கு நேராகும்.துணிகளை வகை வகையாகப் பார்க்க முடியாது. இப்போது உலகமாக விரிந்திருக்கும் ஆயத்த ஆடைகளும் அப்போது அதிகம் இல்லை. பிள்ளைகளுக்குச் சீட்டித் துணியில் பாவாடை சட்டை தைத்து வாங்குவதே பெரும் பாடு. சம்பா நடவு மும்முரத்தில் கடைத்தெருவுக்குப் போக நேரமிருக்காது. பெரிய குடும்பங்களில்கூட முதல் நாள் மாலையில்தான் அவசர அவசரமாக வண்டி கட்டிக்கொண்டு கடைத்தெருவுக்குச் செல்வார்கள்.குடும்பத்தோடு சென்று துணி வாங்குவதெல்லாம் அப்போது இயலாது. பெரியவர்கள் வாங்கிவந்து கொடுப் பதை உடுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் “இது என்ன கிழிவுபோல் இருக்கிறது” என்று துணியைக் குறை சொல்வார்கள். “எனக்கு ஒரு கிழிவு போதும்; பணம்பெற்ற துணியெல்லாம் வேண்டம்” என்று வயதானவர்கள் சொல்வார்கள்.கிழிவு என்றால், நீளமாக நெய்த துணியில் தேவையான அளவு வெட்டிக்கொள்ளும் கரைக்கட்டு இல்லாத துண்டு. கோடம்பாக்கம் நூல்புடவை, சின்னாளப்பட்டி சுங்கடி, அதற்கு முன்பு கண்டாங்கிச் சேலை எல்லாம் பிரபலம். வெங்காயச் சருகு என்று செல்லமாக அழைக்கப்பட்ட நைலான், நைலக்ஸ் எல்லாம் பிற்பாடுதான். திரைப்படப் பெயரின் மகிமையால் பிரபலமான சேலை ‘பாலும் பழமும்’. உடல் முழுதும் வண்ண வண்ணக் கட்டங்களாகக் கண்ணைப் பறிக்கும்.உயிர்பிடிக்கும் கைத்தறிபின்லே எட்டுமுழ மல் வேட்டியை வெறும் ஆறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். ஒரு முறை கும்பகோணம் ஜவுளிக்கடை ஒன்றில், தீபாவளி துணி எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். சாலையின் நடையோரத்தில் இரண்டு அடுக்குக் கைத்தறி காரிக்கன் வேட்டிகளை வைத்துக்கொண்டு நின்ற நெசவாளி ஒருவர், “இதிலும் இரண்டு வாங்கக் கூடாதா?” என்றார்.என்னைக் கப்பிக் கொண்ட குற்ற உணர்விலிருந்து நான் இன்றும் மீளவில்லை. காரிக்கன் என்பது நனைத்து பிளீச் பண்ணாதது. நல்ல நாளில் உடுத்துவது வழக்கம். பல ஆண்டுகள் கழித்து திருவாரூர் கடைத்தெருவில் காரிக்கன் வேட்டிக்காக அலைந்து இரண்டே இரண்டு இருந்த இடத்தில் ஒன்று மட்டும் வாங்கிவந்தேன். அப்போது அநேகமாகப் பட்டுப் போயிருந்த கைத்தறி இப்போது புடவைகள் வழியாகக் கொஞ்சம் உயிர்பிடிக்கிறது.மாப்பிளை வெடிவெடிகளுக்கு அதிகம் செலவுசெய்வதில்லை. ஓலை வெடி, ஒத்தை வெடி, மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம் என்று சில வகை. மின்னல் வெடி என்று காகிதத்தில் முக்கோண வடிவில் இருக்கும். அதற்கு முன்பு மாப்பிள்ளை வெடி அல்லது வெங்காய வெடி என்று இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மாப்பிள்ளையின் முதுகில் எறிந்தால் அந்த அழுத்தத்திலேயே வெடிக்குமாம்.கம்பியாக நீளக் கைப்பிடிவைத்து ஒரு சுத்தியல் உண்டு. அடிக்கும் வாயில் ஒரு குழி இருக்கும். அதில் மருந்தைக் கிடித்து சுவரில் அடித்தால் வெடிச் சத்தம் வரும். இப்படி ஒரு சாதனம் வீட்டில் இருந்தது. அப்போதே அது காலாவதி ஆகியிருந்தது. அப்போது இருந்தவற்றை நாட்டுவெடி என்று அடையாளப்படுத்தி, சிவகாசித் தயாரிப்புகள் தங்களை உயர்த்திக் கட்டமைத்துக்கொண்டன.தீபாவளி மருந்துசடங்கு, சம்பிரதாயம் என்று தீபாவளியில் அப்போதும் ஒன்றும் பெரிதாக இருக்காது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, பெரியவர்கள் கையால் கொடுக்கும் புதுத் துணியை மஞ்சள் வைத்து உடுத்துவார்கள். மருதாணி இட்டுக்கொள்வது உண்டு. தவறாமல் இடம்பெறும் பலகாரம் கடலைப் பருப்பும் வெல்லமும் சேர்த்து எண்ணெயில் சுட்டு எடுக்கும் சுழியன். அதிரசம், முறுக்கு, பயத்த உருண்டை, கெட்டி உருண்டை இவற்றை விருப்பம், வசதியை ஒட்டிச் செய்துகொள்வார்கள்.செரிமானத்துக்குத் தீபாவளி மருந்து என்று ஒரு லேகியம். சில சமயம் அது பலகாரத்தைவிட ருசியாக இருக்கும்! இருமுறை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் புழங்கும் மக்களுக்கு நம் முன்னோர்கள் இலுப்பை எண்ணெயில் பலகாரம் செய்தார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.முகம் தெரியாத இருட்டில் குழந்தைகளை இழுத்துக் குளிப்பாட்டிவிடுவதும், கொஞ்சம் சூட்டிகையான வீடுகளில் குளியல் முடித்து, புத்தாடை உடுத்தி வெடிவெடிப்பதும் அமர்க்களப்படும். வீட்டுக்கு வீடு பலகாரப் பரிமாற்றம் நடக்கும். சிறுவர்களும் சிறுமிகளும் பலகாரத் தட்டோடு பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர்த்த வீடு என்று புத்தாடை தரும் கூச்சத்தில் பட்டாம்பூச்சிகளாய்ப் பறப்பார்கள்.‘தேவையும் திங்களும் இருப்பவர்களுக்குத்தான்’ என்று சொல்வதுண்டு. இல்லாமையை தீபாவளியைப் போல் இரக்கமில்லாமல் பறைசாற்ற வல்லது வேறெதுவுமில்லை. அடையாள அரசியலின் தாக்குதல், நெல்லை மலிவாக்கும் நெருக்கடி, மில் துணி ஆக்கிரமித்துக்கொண்ட கைத்தறியின் இடம் - இப்படியாக தீபாவளி ஒரு இழுபறி களமாகவே அப்போது இருந்தது. எனினும், பெரியவர்களின் தீபாவளியைப் போலல்ல குழந்தைகளின் தீபாவளி. குழந்தைகளுக்கு தீபாவளி என்பது எப்போதும் கனவுகளின் பண்டிகைதான்!- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,

அந்தக் காலத்தில் தீபாவளி...

இல்லாமையைத் தீபாவளிபோல் வெளிச்சம்போட்டுக் காட்டும் பண்டிகை வேறெதுவும் இல்லை.

1977-ம் ஆண்டு தீபாவளி முடிந்து மறுநாள் விடியவில்லை. பின்னிரவில் ஆரம்பித்து, வெள்ளி முளைக்கும்போது பெரும் புயல் அடித்துக் காலை ஏழு மணிக்கு ஓய்ந்தது. கிராமங்களுக்கு வந்திருந்தவர்கள் திரும்ப முடியவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர்க்காரர்கள் தீபாவளிக்கு ஊருக்கு வருவது அப்போது முதல் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. இயற்கையின் சில மணி நேரச் சீற்றமே வரலாற்றின் இழைகளை அறுத்துவிடுகிறதே!

அப்போது தஞ்சைப் பகுதி கிராமங்களும் நகரங்களும் தீபாவளியில் புதுச் சோபை பெற்றுவிடும். வெளி மாநிலங் களில் வேலையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வரு வார்கள். புதுப்புது முகங்களாக இருக்கும். தங்கள் ஊரை அவர்களும் புதிதாய்ப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். எல்லாம் விழிவிரித்து பார்க்கும் வியப்பு மயம்.

கலாச்சார செருகளம்

காவிரியில் குளித்தாலும் கங்கா ஸ்நானம்தான். அங்கேயே முரண்பாடு. தமிழ்நாட்டுக் கலாச்சாரத் தளத்தில் தீபாவளி சர்ச்சையாகிப்போனதில் வியப்பில்லை. புராணங்களுக்கு மக்களின் மீதிருந்த பிடியை உடைப்பதற்குத் தமிழ் அடையாள ஆர்வலர்கள் தேர்ந்துகொண்ட செருகளம் தீபாவளி. பொருளாதார, சாதியக் கட்டமைப்பின் கீழ்த் தட்டுகள் பொங்கல் என்ற பொதுவெளியில் பங்கேற்கும் அளவுக்குத் தீபாவளி தளர்ந்து இடம்தராது.

தீபாவளி மறுப்பு, பிரச்சாரத்தோடு நின்றுவிடாது. ஒரு கிராமத்தில் இந்த மறுப்பு ஊர்க் கட்டுமானமாகவே இருந்தது. ஆனாலும், புத்தாடை, வெடியெல்லாம் இல்லாமல் குழந்தைகளைச் சாக்காக வைத்துப் பலகாரம் மட்டும் செய்துவிடுவார்கள். தீபாவளி என்பது தீபங் களின் வரிசை. ஆனால், பண்டிகையில் இதற்கான அடையாளத்தை நான் பார்த்ததில்லை. இப்போதுதான் விளம்பரங்களில் இந்தச் சொல்லை அர்த்தப்படுத்தும் விதமாகப் பட்டில் ஜொலிக்கும் பெண்கள் வரிசையாகத் தீபம் ஏற்றுவதைப் பார்க்கிறோம்.

விவசாயிகளுக்குத் தலைவலி

ஐப்பசி அடைமழைக் காலத்தில் வரும் தீபாவளி, காவிரிப் படுகை விவசாயிகளுக்குப் பெரும் தலைவலிதான். வரவே இல்லாத காலத்தில் ஒரு பெருஞ்செலவு. அப்போதுதான் சம்பா நடவுக்குச் செலவுசெய்து கை ஓய்ந்திருப்பார்கள். பிறந்த வீட்டுப் பெண்களுக்கு வரிசை, துணிமணி என்று தவிர்க்க முடியாத செலவினமாக தீபாவளி வந்து நிற்கும். இப்போதுபோல் நான்கு லட்சம் ஏக்கர் அளவுக்குக் குறுவை பயிரிடுவது இல்லை.

ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் தீபாவளிச் செலவுக்கு ஆகும் என்று நட்டுவைப்பார்கள். சரியான மழையில் அறுவடைக்கு வரும். அதை நெல் மண்டிக்குக் கொண்டுசென்றால், தீபாவளி நெருக்கடியை ஆதாயமாக்க விலை குறைத்துக் கேட்பார்கள். ஒரு தீபாவளியின்போது மூட்டை நெல் பதினெட்டு, பதினாறு ரூபாய்க்கு விற்க வேண்டியிருந்தது.

கடைத்தெருவில் விவசாயிகளின் குமுறல். “துணிமணி, பலகாரம் இல்லையென்றால் தீபாவளி போக மாட்டேன்னு சொல்லுமா?” இப்படிக் கேட்டுக் கொண்டே ஒரே ஒரு மூட்டை நெல்லை விற்று, தலைக்கு எண்ணெயும், சாமி கும்பிட பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வாங்கிக்கொண்டு மற்ற மூட்டைகளைத் திருப்பி எடுத்துச் சென்றார்கள்.

பாலும் பழமும்

பெரும்பாலான மிராசுதாரர்களுக்கு மளிகை, ஜவுளிக் கடைகளில் பற்றுவரவு இருக்கும். அங்கே தங்கள் பற்றாக மளிகைச் சாமான்களையும் துணிமணிகளையும் பெற்றுக்கொள்வார்கள். தை பிறந்து அறுவடை முடிந்துதான் இந்தக் கணக்கு நேராகும்.

துணிகளை வகை வகையாகப் பார்க்க முடியாது. இப்போது உலகமாக விரிந்திருக்கும் ஆயத்த ஆடைகளும் அப்போது அதிகம் இல்லை. பிள்ளைகளுக்குச் சீட்டித் துணியில் பாவாடை சட்டை தைத்து வாங்குவதே பெரும் பாடு. சம்பா நடவு மும்முரத்தில் கடைத்தெருவுக்குப் போக நேரமிருக்காது. பெரிய குடும்பங்களில்கூட முதல் நாள் மாலையில்தான் அவசர அவசரமாக வண்டி கட்டிக்கொண்டு கடைத்தெருவுக்குச் செல்வார்கள்.

குடும்பத்தோடு சென்று துணி வாங்குவதெல்லாம் அப்போது இயலாது. பெரியவர்கள் வாங்கிவந்து கொடுப் பதை உடுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் “இது என்ன கிழிவுபோல் இருக்கிறது” என்று துணியைக் குறை சொல்வார்கள். “எனக்கு ஒரு கிழிவு போதும்; பணம்பெற்ற துணியெல்லாம் வேண்டம்” என்று வயதானவர்கள் சொல்வார்கள்.

கிழிவு என்றால், நீளமாக நெய்த துணியில் தேவையான அளவு வெட்டிக்கொள்ளும் கரைக்கட்டு இல்லாத துண்டு. கோடம்பாக்கம் நூல்புடவை, சின்னாளப்பட்டி சுங்கடி, அதற்கு முன்பு கண்டாங்கிச் சேலை எல்லாம் பிரபலம். வெங்காயச் சருகு என்று செல்லமாக அழைக்கப்பட்ட நைலான், நைலக்ஸ் எல்லாம் பிற்பாடுதான். திரைப்படப் பெயரின் மகிமையால் பிரபலமான சேலை ‘பாலும் பழமும்’. உடல் முழுதும் வண்ண வண்ணக் கட்டங்களாகக் கண்ணைப் பறிக்கும்.

உயிர்பிடிக்கும் கைத்தறி

பின்லே எட்டுமுழ மல் வேட்டியை வெறும் ஆறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். ஒரு முறை கும்பகோணம் ஜவுளிக்கடை ஒன்றில், தீபாவளி துணி எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். சாலையின் நடையோரத்தில் இரண்டு அடுக்குக் கைத்தறி காரிக்கன் வேட்டிகளை வைத்துக்கொண்டு நின்ற நெசவாளி ஒருவர், “இதிலும் இரண்டு வாங்கக் கூடாதா?” என்றார்.

என்னைக் கப்பிக் கொண்ட குற்ற உணர்விலிருந்து நான் இன்றும் மீளவில்லை. காரிக்கன் என்பது நனைத்து பிளீச் பண்ணாதது. நல்ல நாளில் உடுத்துவது வழக்கம். பல ஆண்டுகள் கழித்து திருவாரூர் கடைத்தெருவில் காரிக்கன் வேட்டிக்காக அலைந்து இரண்டே இரண்டு இருந்த இடத்தில் ஒன்று மட்டும் வாங்கிவந்தேன். அப்போது அநேகமாகப் பட்டுப் போயிருந்த கைத்தறி இப்போது புடவைகள் வழியாகக் கொஞ்சம் உயிர்பிடிக்கிறது.

மாப்பிளை வெடி

வெடிகளுக்கு அதிகம் செலவுசெய்வதில்லை. ஓலை வெடி, ஒத்தை வெடி, மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம் என்று சில வகை. மின்னல் வெடி என்று காகிதத்தில் முக்கோண வடிவில் இருக்கும். அதற்கு முன்பு மாப்பிள்ளை வெடி அல்லது வெங்காய வெடி என்று இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மாப்பிள்ளையின் முதுகில் எறிந்தால் அந்த அழுத்தத்திலேயே வெடிக்குமாம்.

கம்பியாக நீளக் கைப்பிடிவைத்து ஒரு சுத்தியல் உண்டு. அடிக்கும் வாயில் ஒரு குழி இருக்கும். அதில் மருந்தைக் கிடித்து சுவரில் அடித்தால் வெடிச் சத்தம் வரும். இப்படி ஒரு சாதனம் வீட்டில் இருந்தது. அப்போதே அது காலாவதி ஆகியிருந்தது. அப்போது இருந்தவற்றை நாட்டுவெடி என்று அடையாளப்படுத்தி, சிவகாசித் தயாரிப்புகள் தங்களை உயர்த்திக் கட்டமைத்துக்கொண்டன.

தீபாவளி மருந்து

சடங்கு, சம்பிரதாயம் என்று தீபாவளியில் அப்போதும் ஒன்றும் பெரிதாக இருக்காது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, பெரியவர்கள் கையால் கொடுக்கும் புதுத் துணியை மஞ்சள் வைத்து உடுத்துவார்கள். மருதாணி இட்டுக்கொள்வது உண்டு. தவறாமல் இடம்பெறும் பலகாரம் கடலைப் பருப்பும் வெல்லமும் சேர்த்து எண்ணெயில் சுட்டு எடுக்கும் சுழியன். அதிரசம், முறுக்கு, பயத்த உருண்டை, கெட்டி உருண்டை இவற்றை விருப்பம், வசதியை ஒட்டிச் செய்துகொள்வார்கள்.

செரிமானத்துக்குத் தீபாவளி மருந்து என்று ஒரு லேகியம். சில சமயம் அது பலகாரத்தைவிட ருசியாக இருக்கும்! இருமுறை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் புழங்கும் மக்களுக்கு நம் முன்னோர்கள் இலுப்பை எண்ணெயில் பலகாரம் செய்தார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முகம் தெரியாத இருட்டில் குழந்தைகளை இழுத்துக் குளிப்பாட்டிவிடுவதும், கொஞ்சம் சூட்டிகையான வீடுகளில் குளியல் முடித்து, புத்தாடை உடுத்தி வெடிவெடிப்பதும் அமர்க்களப்படும். வீட்டுக்கு வீடு பலகாரப் பரிமாற்றம் நடக்கும். சிறுவர்களும் சிறுமிகளும் பலகாரத் தட்டோடு பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர்த்த வீடு என்று புத்தாடை தரும் கூச்சத்தில் பட்டாம்பூச்சிகளாய்ப் பறப்பார்கள்.

‘தேவையும் திங்களும் இருப்பவர்களுக்குத்தான்’ என்று சொல்வதுண்டு. இல்லாமையை தீபாவளியைப் போல் இரக்கமில்லாமல் பறைசாற்ற வல்லது வேறெதுவுமில்லை. அடையாள அரசியலின் தாக்குதல், நெல்லை மலிவாக்கும் நெருக்கடி, மில் துணி ஆக்கிரமித்துக்கொண்ட கைத்தறியின் இடம் - இப்படியாக தீபாவளி ஒரு இழுபறி களமாகவே அப்போது இருந்தது. எனினும், பெரியவர்களின் தீபாவளியைப் போலல்ல குழந்தைகளின் தீபாவளி. குழந்தைகளுக்கு தீபாவளி என்பது எப்போதும் கனவுகளின் பண்டிகைதான்!

- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,
... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

Comment on Facebook

Absolutely right

Yes

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today
The Secret......

The Secret...... ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today
ரமேஷ் அகர்வால்இந்தியாவின் கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் உள்ள கரே கிராமத்தில் ஒவ்வொரு நாள் காலையும் அரை மணிநேரத்துக்கு நிலம் அதிர்ந்துகொண்டே இருக்கும். அது நிலநடுக்கம் அல்ல. தினசரி நிலம் நடுங்குவது எப்படி நிலநடுக்கமாக இருக்க முடியும்?அருகிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஜிண்டால் நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு முறை வெடி வைத்துத் தகர்க்கும்போதும் அரை மணி நேரத்துக்கு அதிர்ந்து பிறகு அமைதியாகிறது நிலம். தொடர்ந்து கரும் தூசுப்புகை மேல் எழுந்து சூரியனை மறைத்து வானமும் கறுத்துவிடுகிறது. ஒரு நிலக்கரிச் சுரங்கத்துக்கே அரை மணி நேரத்துக்கு நிலம் அதிர்கிறது என்றால், இரண்டாவது நிலக்கரிச் சுரங்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?இதைப் பற்றித் தீவிர அக்கறை கொண்ட ரமேஷ் அகர்வால் (60), கரே கிராமம் அருகே ஜிண்டால் இரும்பு மின் ஆலை, இரண்டாவது நிலக்கரிச் சுரங்கத்தை 2012-ல் திறக்க அனுமதி கோரியதற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.வெற்றிக்குக் கிடைத்த பரிசுமூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது சிறிய கடைக்குள் நுழைந்த ஒரு நபர் நீ ரொம்ப பேசுகிறாய் என்று கூறிவிட்டு, துப்பாக்கியை நீட்டி அவருடைய வலது காலில் இரண்டு முறை சுட்டான். பிறகு பைக்கில் ஏறிப் பறந்துவிட்டான்.அவர் சுடப்பட்ட பிறகு, சுட்டது தாங்கள்தான் என்று ஜிண்டால் இரும்பு, மின் ஆலையின் பாதுகாவலர்கள் தாங்களாகவே அறிவித்துக்கொண்டார்கள். ஆனால், ரமேஷ் சுடப்பட்டதற்கும் ஜிண்டால் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை.தனி நபர் ராணுவம்இப்படி உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையக்கூடிய அரசியல் பலம் மிகுந்த கனிமச் சுரங்கம், மின் ஆலைகளின் நில ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனி நபர் ராணுவம் போலப் பத்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவருகிறார் ரமேஷ் அகர்வால். பெருநிறுவனங்களுக்கு எதிரான மூன்று வழக்குகளில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். ஏழு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.“இந்தப் போராட்டத்தை நான் தொடங்கியபோது, தாக்குதலுக்கு உள்ளாவேன் என்று தெரியாமல் இல்லை. ஆனால், இதற்காகவெல்லாம் அஞ்சி ஓடிவிட மாட்டேன் - அமைதியாகப் பேசும் ரமேஷ் அகர்வால், தற்போது ராய்கரில் வாழ்ந்துவருகிறார். அவருடைய தொடையில் உடைந்துள்ள எலும்பை இணைக்கப் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.மிரட்டிப் பணம் பறித்ததாகவும், அவதூறு செய்ததாகவும் போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் ரமேஷ் அகர்வால் 72 நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். பிறகு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.அதிகாரத்தை எதிர்த்து“அதிகாரம் மிக்கவர்களை எதிர்த்து மோத முடியாது என்று மக்கள் பொதுவாக நம்புகிறார்கள். ஆனால், சில வழக்குகளில் நாம் வெற்றிபெற ஆரம்பித்துவிட்டால், முதலில் தங்களையும் பிறகு இந்த நாட்டையும் மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள்.கனிமச் சுரங்கம் தோண்டுவது சுற்றுச்சூழலைச் சீர்கெடச் செய்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் அழித்துவிடும்” அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன.அவரது வார்த்தைகளை உறுதிப்படுத்துவது போல உள்ளன, இந்தப் பகுதியில் உள்ள ஒரே அலோபதி மருத்துவரான ஹரிஹர் பட்டேலின் கூற்று. இந்தப் பகுதியில் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள், தோல் சிதைவு, உடல் உணர்விழப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.கோல்ட்மேன் பரிசுரமேஷ் அகர்வாலின் 10 ஆண்டு தளராத போராட்டம் இன்றைக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் ‘பசுமை நோபல் என்றழைக்கப்படும் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசைப் பெற்ற ஆறு பேரில் அவரும் ஒருவர்.1990-ல் ரிச்சர்ட், ரோதா கோல்மான் ஆகிய இருவரும் இணைந்து இந்த விருதை உருவாக்கினர். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தீவு நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அடித்தட்டு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75 லட்சம் வழங்கப்படும்.எது வளர்ச்சி?இவ்வளவு மதிப்பு மிக்க விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், சத்தீஸ்கரில்கூட என்னை யாருக்கும் பெரிதாகத் தெரியாமல் இருப்பதும், உதவி கிடைக்காமல் இருப்பதும் வருத்தத்தைத் தருகிறது என்கிறார் ரமேஷ்.வளர்ச்சி என்றால் என்ன என்பதற்கான வரையறையைத் திருத்தி எழுதியாக வேண்டும். இப்போது நடைபெறும் வளர்ச்சி நடவடிக்கைகள் சிறிய கூட்டத்துக்குத்தான் பயன்படுகின்றன, எது பெரும் மக்கள் கூட்டத்துக்குப் பயன்படுகிறதோ, அதுதான் உண்மையான வளர்ச்சி.சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறினால், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள். வேலை இருக்காது, பணம் இருக்காது, விவசாய நிலங்கள் இருக்காது, காடுகள் இருக்காது. கடைசியில் அவர்கள் ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு அடுத்தவரைக் கொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்கிறார் ரமேஷ் அகர்வால்.மனிதனை மனிதன் சாப்பிடப் போகும் அந்தத் தருணத்தைத் தன்னால் முடிந்த அளவு தள்ளிப்போடுவதற்கான உத்வேகம் வார்த்தைகளில் மட்டுமல்லாமல், ரமேஷின் செயலிலும் இருப்பதை நன்கு உணர முடிகிறது.

ரமேஷ் அகர்வால்

இந்தியாவின் கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் உள்ள கரே கிராமத்தில் ஒவ்வொரு நாள் காலையும் அரை மணிநேரத்துக்கு நிலம் அதிர்ந்துகொண்டே இருக்கும். அது நிலநடுக்கம் அல்ல. தினசரி நிலம் நடுங்குவது எப்படி நிலநடுக்கமாக இருக்க முடியும்?

அருகிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஜிண்டால் நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு முறை வெடி வைத்துத் தகர்க்கும்போதும் அரை மணி நேரத்துக்கு அதிர்ந்து பிறகு அமைதியாகிறது நிலம். தொடர்ந்து கரும் தூசுப்புகை மேல் எழுந்து சூரியனை மறைத்து வானமும் கறுத்துவிடுகிறது. ஒரு நிலக்கரிச் சுரங்கத்துக்கே அரை மணி நேரத்துக்கு நிலம் அதிர்கிறது என்றால், இரண்டாவது நிலக்கரிச் சுரங்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?

இதைப் பற்றித் தீவிர அக்கறை கொண்ட ரமேஷ் அகர்வால் (60), கரே கிராமம் அருகே ஜிண்டால் இரும்பு மின் ஆலை, இரண்டாவது நிலக்கரிச் சுரங்கத்தை 2012-ல் திறக்க அனுமதி கோரியதற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.

வெற்றிக்குக் கிடைத்த பரிசு

மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது சிறிய கடைக்குள் நுழைந்த ஒரு நபர் "நீ ரொம்ப பேசுகிறாய்" என்று கூறிவிட்டு, துப்பாக்கியை நீட்டி அவருடைய வலது காலில் இரண்டு முறை சுட்டான். பிறகு பைக்கில் ஏறிப் பறந்துவிட்டான்.

அவர் சுடப்பட்ட பிறகு, சுட்டது தாங்கள்தான் என்று ஜிண்டால் இரும்பு, மின் ஆலையின் பாதுகாவலர்கள் தாங்களாகவே அறிவித்துக்கொண்டார்கள். ஆனால், ரமேஷ் சுடப்பட்டதற்கும் ஜிண்டால் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை.

தனி நபர் ராணுவம்

இப்படி உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையக்கூடிய அரசியல் பலம் மிகுந்த கனிமச் சுரங்கம், மின் ஆலைகளின் நில ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனி நபர் ராணுவம் போலப் பத்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவருகிறார் ரமேஷ் அகர்வால். பெருநிறுவனங்களுக்கு எதிரான மூன்று வழக்குகளில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். ஏழு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

“இந்தப் போராட்டத்தை நான் தொடங்கியபோது, தாக்குதலுக்கு உள்ளாவேன் என்று தெரியாமல் இல்லை. ஆனால், இதற்காகவெல்லாம் அஞ்சி ஓடிவிட மாட்டேன்" - அமைதியாகப் பேசும் ரமேஷ் அகர்வால், தற்போது ராய்கரில் வாழ்ந்துவருகிறார். அவருடைய தொடையில் உடைந்துள்ள எலும்பை இணைக்கப் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

மிரட்டிப் பணம் பறித்ததாகவும், அவதூறு செய்ததாகவும் போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் ரமேஷ் அகர்வால் 72 நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். பிறகு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிகாரத்தை எதிர்த்து

“அதிகாரம் மிக்கவர்களை எதிர்த்து மோத முடியாது என்று மக்கள் பொதுவாக நம்புகிறார்கள். ஆனால், சில வழக்குகளில் நாம் வெற்றிபெற ஆரம்பித்துவிட்டால், முதலில் தங்களையும் பிறகு இந்த நாட்டையும் மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள்.

கனிமச் சுரங்கம் தோண்டுவது சுற்றுச்சூழலைச் சீர்கெடச் செய்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் அழித்துவிடும்” அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன.

அவரது வார்த்தைகளை உறுதிப்படுத்துவது போல உள்ளன, இந்தப் பகுதியில் உள்ள ஒரே அலோபதி மருத்துவரான ஹரிஹர் பட்டேலின் கூற்று. "இந்தப் பகுதியில் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள், தோல் சிதைவு, உடல் உணர்விழப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன."

கோல்ட்மேன் பரிசு

ரமேஷ் அகர்வாலின் 10 ஆண்டு தளராத போராட்டம் இன்றைக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் ‘பசுமை நோபல்' என்றழைக்கப்படும் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசைப் பெற்ற ஆறு பேரில் அவரும் ஒருவர்.

1990-ல் ரிச்சர்ட், ரோதா கோல்மான் ஆகிய இருவரும் இணைந்து இந்த விருதை உருவாக்கினர். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தீவு நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அடித்தட்டு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75 லட்சம் வழங்கப்படும்.

எது வளர்ச்சி?

இவ்வளவு மதிப்பு மிக்க விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், சத்தீஸ்கரில்கூட என்னை யாருக்கும் பெரிதாகத் தெரியாமல் இருப்பதும், உதவி கிடைக்காமல் இருப்பதும் வருத்தத்தைத் தருகிறது என்கிறார் ரமேஷ்.

"வளர்ச்சி என்றால் என்ன என்பதற்கான வரையறையைத் திருத்தி எழுதியாக வேண்டும். இப்போது நடைபெறும் வளர்ச்சி நடவடிக்கைகள் சிறிய கூட்டத்துக்குத்தான் பயன்படுகின்றன, எது பெரும் மக்கள் கூட்டத்துக்குப் பயன்படுகிறதோ, அதுதான் உண்மையான வளர்ச்சி.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறினால், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள். வேலை இருக்காது, பணம் இருக்காது, விவசாய நிலங்கள் இருக்காது, காடுகள் இருக்காது. கடைசியில் அவர்கள் ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு அடுத்தவரைக் கொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்" என்கிறார் ரமேஷ் அகர்வால்.

மனிதனை மனிதன் சாப்பிடப் போகும் அந்தத் தருணத்தைத் தன்னால் முடிந்த அளவு தள்ளிப்போடுவதற்கான உத்வேகம் வார்த்தைகளில் மட்டுமல்லாமல், ரமேஷின் செயலிலும் இருப்பதை நன்கு உணர முடிகிறது.
... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

Timeline Photos ... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today

தொழில் தொடங்குவதற்கு ஐடியா மட்டுமே போதுமானது, பணம் ஒரு பிரச்சினையே இல்லை என்று இளம் தலைமுறை தொழில் முனைவோர்கள் சொல்வதை சமீப காலமாக நாம் கேட்க முடிகிறது. பல இளம் தொழில் முனைவோர்கள் வென்ச்சர் கேப்பிட்டல் மூலமாக வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். வென்ச்சர் கேப்பிடல் என்றால் என்ன, தொழில்முனைவோர்கள் அவர்களை எப்படி அணுகுவது, வென்ச்சர் கேப்பிடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ள சென்னையில் இருக்கும் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனமான வென்ச்சர் ஈஸ்ட் (Ventureast) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கே.ஏ.ஸ்ரீனிவாசனை சந்தித்தோம்.

வென்ச்சர் கேப்பிடல் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

சார்ட்டட் மற்றும் காஸ்ட் அக்கவுண்ட் முடித்து, ஹிந்துஜா குழுமத்தில் சில காலம் வேலை செய்தேன். அதன்பிறகு ஏ.வி.டி. தாமஸ் நிறுவனத்தில் எட்டு வருடங்களும், சதர்லாண்ட் நிறுவனத்தில் சில காலமும் வேலை செய்தேன். பிறகு சொந்தமாக எஃப்.ஏ.ஓ. (Finance and Accounting Outsourcing), ஆரம்பித்து சில வருடங்களில் ஆதித்யா பிர்லா நிறுவனத்திடம் விற்றுவிட்டேன். அதன் பிறகு வென்ச்சர் ஈஸ்ட் நிறுவனத்துக்கு வந்துவிட்டேன்.

வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பற்றி சொல்லுங்கள்...

மியூச்சுவல் ஃபண்ட்களில் சிறுமுதலீட்டாளர்கள் எப்படி முதலீடு செய்கிறார்களோ, அதேபோல இதில் பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். இந்தத் தொகையை நாங்கள் (வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள்) நிர்வாகம் செய்வோம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். நாங்கள் வளரும் தொழில் முனைவோர்களின் ஐடியாக்களில் முதலீடு செய்வோம்.

ஒரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களில் பல ஃபண்ட்கள் இருக்கும். ஒவ்வொரு ஃபண்டுக்கும் வரைமுறை இருக்கும். அதாவது டெக்னாலஜி சார்ந்த தொழில் ஐடியாக்களில்தான் இந்த ஃபண்டின் தொகை முதலீடு செய்யப்படும் என்று எதாவது ஒரு திட்டம் இருக்கும். பொதுவாக ஒரு ஃபண்டின் காலம் என்பது 8 வருடங்கள்.

ஒரு ஃபண்ட் ஆரம்பித்து பணத்தை திரட்டிய பின்பு, முதல் நான்கு வருடங்களில் தொழில்களில் முதலீடு செய்வதற்கும், அடுத்த நான்கு வருடங்களில் அந்த திட்டங்களில் இருந்து வெளியேறுவதற்கும் எடுத்துக்கொள்வோம்.

ஐடியாக்களை மட்டும் நம்பி முதலீடு செய்வது ரிஸ்க் ஆயிற்றே?

இது ரிஸ்க் என்பது எங்களது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தெரியும். மேலும் பல கட்ட வடிகட்டலுக்குப் பிறகுதான் எங்களது முதலீட்டை ஆரம்பிப்போம். ஆரம்ப கட்டத்திலே எளிதாக வடிகட்டி விடுவோம். மேலும் நாங்கள் மொத்த முதலீட்டையும் ஒரே தொழிலில்/ஐடியாவில் முதலீடு செய்வது கிடையாது. நாங்கள் திரட்டும் முதலீட்டை சுமார் 15 தொழில்களில் முதலீடு செய்வோம். சில முதலீடுகளில் 10 மடங்கு லாபம் கிடைக்கும். சில முதலீடுகளில் 5 மடங்கு லாபம் கிடைக்கும். சில முதலீடுகளில் முதலீடு செய்த தொகை மட்டும்தான் கிடைக்கும். மிகச் சில முதலீடுகளில் நஷ்டம் கூட வரும். இது எல்லாம் சேர்ந்ததுதான் வென்ச்சர் கேப்பிடல்.

இதுபோல ரிஸ்க் எடுக்கும் போதுதான் அதிகமான வருமானம், லாபம் கிடைக்கும். மேலும், பல மடங்கு வளரக்கூடிய தொழில்களாக பார்த்துதான் நாங்கள் முதலீடு செய்வோம். ஆண்டுக்கு 20 சதவீத நிலையான வளர்ச்சி என்னும் பட்சத்தில் அங்கு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு வேலை இல்லை.

தொழில்களில் முதலீடு செய்வதோடு உங்கள் வேலை முடிகிறதா?

இல்லை. நாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் எங்கள் சார்பாக சில இயக்குநர்களும் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் புதிய நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது, ஒரு சிஸ்டத்தை (மார்க்கெட்டிங், அக்கவுண்ட்ஸ் உள்ளிட்ட) உருவாக்கித் தருவது போன்ற பல ஆலோசனைகளையும் நாங்கள் தருவோம்.

தொழில் முனைவோர்களின் நிறுவனங்களில் உங்கள் சார்பாக இயக்குநர்கள் இருப்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இடையூறாகவோ அல்லது தொல்லையாகவோ இருக்காதா?

இதை தொழில் முனைவோர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. நாங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவவும் வழிகாட்டுவதற்கும் மட்டுமே இருக்கிறோம். சில விஷயங்களில் தொழில் முனைவோர்கள் கேள்விப்பட்ட, கிடைத்த தகவலை வைத்துக்கொண்டு முடிவுகளை எடுப்பார்கள். தகவல்களின் அடிப்படையில், ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் குழு சொல்லும்.

சமயங்களில் முதலில் ஆரம்பித்த தொழில் சிறப்பாக வளர்வதற்கு முன்பாகவே, சம்பந்தமே இல்லாமல் இன்னொரு தொழிலில் முதலீடு செய்ய நினைப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் இது வேண்டாம் என்று சொல்லுவோம். இயக்குநர் குழு தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே இருக்கிறது.

சமயங்களில் எங்களுடைய முதலீட்டை வெளியே எடுத்த பின்பும் தொழில் முனைவோர்களின் வற்புறுத்தல் காரணமாக இயக்குநர் குழுவில் நீடிப்பதும் நடக்கும்.

உங்களுடைய முதலீட்டை எப்படி வெளியே எடுப்பீர்கள்? அது குறித்து விரிவாக சொல்லுங்களேன்...

ஒரு முதலீட்டை நாங்கள் செய்யும் போதே எந்தெந்த வழிகளில் அந்த முதலீட்டை வெளியே எடுக்க முடியும் என்ற வாய்ப்புகளை பார்த்த பிறகுதான் அந்த ஐடியா/தொழிலில் முதலீடு செய்வோம். ஐ.பி.ஓ. மூலம் எங்களது பங்குகளை விற்றுவிட்டு வெளியே வரலாம். இது ஒரு வாய்ப்பு. இப்போதைக்கு ஐ.பி.ஓ.வை பற்றி சொல்லத் தேவையில்லை. அது ஒரு வாய்ப்பு, அவ்வளவுதான்.

இரண்டாவது அந்தத் துறையில் இருக்கும் பெரிய நிறுவனத்தில் புதிய நிறுவனத்தை இணைக்கலாம் (merger and acquisition). சமயங்களில் அந்தத் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாமல் புதிய நிறுவனம் கூட இந்த பிஸினஸ் நன்றாக இருக்கிறது, என்று வாங்கிய சம்பவங்கள் கூட இருக்கிறது. மூன்றாவது strategic investors. அதாவது தனிநபரோ அல்லது நிறுவனங்களோ நாங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தில் எங்களது பங்குகளை மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.

நாங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் காலத்தில் இருப்போம். அதே சமயத்தில் இன்னொரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனம் முதலீட்டு காலத்தில் இருப்பார்கள், அவர்கள் எங்களது பங்குகளை வாங்கிக்கொள்வார்கள்.

உங்கள் முதலீடுகள் தோல்வி அடைந்திருக்கின்றனவா?

ஏற்கெனவே சொன்னதுபோல சில முதலீடுகளை write off செய்ய வேண்டிய சூழ்நிலை கூட வரும். இருந்தாலும் இறுதிகட்ட வழிதான். வேறு நிறுவனத்துடன் இணைக்கப் பார்ப்பது உள்ளிட்ட பல வகையான முயற்சிகளையும் செய்த பிறகுதான் write off செய்யும் முடிவை எடுப்போம்.

முதலீடு செய்யும் போதே எதாவது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்களா?

வங்கிகளில் பிணையம் கேட்கிறார்கள் என்றுதான் இங்கு வருகிறார்கள். நாங்கள் ஐடியாவை பொறுத்துதான் முதலீடு செய்கிறோம். ஆனால் முதலீடு செய்யும்போது சில விதிமுறைகள் இருக்கிறது. உதாரணத்துக்கு எங்கள் அனுமதி இல்லாமல், அவர்களின் பங்குகளை மட்டும் தனியாக விற்க முடியாது.

முக்கியமான அதிகாரிகளுக்கு / புரமோட்டர் களுக்கு போர்டு அனுமதி இல்லாமல் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள முடியாது. சமயங்களில் மொத்தமாக நிறுவனத்தையே கையகப்படுத்த மற்ற நிறுவனங்கள் நினைப்பார்கள். அப்போது புரமோட்டர்கள் பங்குகளை விற்க முடியாது என்று சொல்ல முடியாது என சில விதிமுறைகள் இருந்தாலும் இதையும் தாண்டி சில முயற்சிகள் தோல்வி அடையும்.

சிறுமுதலீட்டாளர் உங்களைப் போன்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாதா?

இப்போது சில நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களிடம் திரட்டி வருகிறார்கள். ஆனால் அந்தத் தொகை 1 கோடி ரூபாய்க்கும் மேல். மேலும், இந்த ஃபண்டில் முதலீட்டாளர்கள் நினைத்தவுடன் வெளியேற முடியாது. இது closed end fund. முதலீட்டு காலமும் அதிகம்.

எந்த மாதிரியான தொழில் முனைவோர்களின் ஐடியாக்களில் நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்கள்?

முதலில் அவர் என்ன படித்திருக்கிறார் என்று பார்ப்போம். அதன் பிறகு அவர் என்ன மாதிரியான நபர் என்று விசாரிப்போம். இப்போது சில வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் தனியார் ஏஜென்சியிடம் கொடுத்து அவரது பின்னணியைப் பற்றி விசாரிக்கிறார்கள். சிலர் சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் வருபவரை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள். இறுதியாக அவரது ஐடியா முக்கியம். அதுதான் எல்லாம்.

மேலும் ஏற்கெனவே சொன்னது போல பல மடங்கு வளர வாய்ப்பு இருக்கும் தொழில்களில்தான் முதலீடு செய்வோம்.

இறுதியாக அவர் ஆரம்பித்த தொழிலை, வளர்ந்த பிறகு விற்கத் தயாராக இருக்கிறாரா என்பது முக்கியம். இது என்னுடைய பிஸினஸ், விற்க முடியாது என்ற சென்டிமெண்ட் இருக்கும் பட்சத்தில் நாங்கள் எப்படி வெளியேற முடியும்.

இறுதியாக பார்த்தால் எங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் 5 சதவீதம் வரைதான் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அப்படியானால் படிக்கவில்லை என்றால் நீங்கள் முதலீடு செய்ய மாட்டீர்களா?

அப்படி இல்லை. இதற்கு நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ள கூடாது. நன்றாக படித்திருக்கும் பட்சத்தில் டெக்னாலஜி உள்ளிட்ட விஷயங்கள் தெரியும். பிஸினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.

ஏற்கெனவே சொன்னது போல ஐடியாதான் முக்கியம். பார்க்கிங் என்பது இதுவரை முறைப்படுத்தப்படாத தொழிலாக இருந்தது. இதை ஒரு சிஸ்டத்துக்குள் கொண்டுவந்து, திட்டத்தை வடிவமைத்து ஒருவர் கொண்டுவந்தார். அவர் பெரிதாக படிக்கவில்லை. இருந்தாலும் அந்த ஐடியா நன்றாக இருந்தது. அதில் முதலீடு செய்தோம்.

வென்ச்சர் கேப்பிடல் துறை எப்படி இருக்கிறது?

வென்ச்சர் கேப்பிடல் முதலீடுகள் கணிசமாக வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான அன்னிய நேரடி முதலீடு வரம்பு இருக்கிறது. இரண்டாவது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு. முதலீட்டை வாங்கும் போது ஒரு விலை, கொடுக்கும் போது ஒரு விலை. மேலும், இது நீண்ட கால ஃபண்ட் என்பதால் ஹெட்ஜிங் கூட செய்ய முடியாது.

மூன்றாவது, வரிவிதிப்பு முறைகளில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை. எதாவது ஒரு விதியை சரியாக கடைபிடிக்க வேண்டும். முன் தேதியிட்டு வரி வசூலிப்பது, ஜி.ஏ.ஏ.ஆர். (general anti avoidance rule) போன்றவை வென்ச்சர் கேப்பிடல் துறைக்கு சவால்தான்.
... மேலும்மேலும்

5 years ago

Tamilnadu Today
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது என்கிறார் ஆலன்.புத்திசாலி நாடுகள்!நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.இது இந்திய நிலவரம்!முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.தண்ணீருக்கு எங்கு கணக்கு?ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
... மேலும்மேலும்