Viduthalai

Ratings
[Total: 0 Average: 0]
Siteviduthalai.inComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

... மேலும்மேலும்

Comment on Facebook

தமிழ் தட்டச்சு, தமிழ் பிழை திருத்தம் நன்கு தெரியும்

msg me for free lifetime TV/WEB hosting...

இந்திய அரசுக்கே சவால் விடும் நித்தியானந்தாக்கள்!
மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்!‘அய்-டெக் கருவிகளின் துணையோடு பலவித ‘‘லீலைகள்திருவண்ணாமலையில் படித்து, பட்ட தாரியான ஒரு இளைஞன் வேலை கிட் டாமல் அலைந்த நிலையில், பலவிதமாக யோசித்த நிலையில், மடங்கள் நிறைந்த அந்த ஊரில் - இந்த மட வியாபாரம் - நல்ல பக்தி வியாபாரமே செழிக்கும் வாணிபம் என்பதை எப்படியோ ஆழ மாக உணர்ந்துகொண்டு - திருவண்ணா மலையிலே சாமியார்களுக்குப் பஞ்சமில்லாத காரணத்தால் - கடைசியில் ஆங்காங்கே ஓடி, ஒரு ‘ஆசிரமத்தையும், சீட கோடிகளையும், பக்தைகளையும், பக்தர்களையும் உருவாக்கியதோடு, பல மொழி கற்றவர்களை அழைத்து, நவீன தொழில்முனைவோரின் உத்திகளையும், ‘அய்-டெக் கருவிகளின் துணையோடு, அபார விளம்பரங்களைச் செய்து, நல்ல பக்தி வியாபாரத்தினை லாபகரமாகச் செய்து, அதற்கே உரிய மோசடிகளையும், மொள்ளமாரித்தனம், அவதார வேஷம் முதலிய பலவித ‘‘லீலைகளையும் செய்து, ஏராளமான பணம் சம்பாதித்த தோடு, பல குறுக்கு வழிகளில் காலி களுக்குக் காவி உடை தரிக்கச் செய்து, புதுப்புது ஆக்கிரமிப்புகளையும், பாலின வன்கொடுமைகளையும் செய்ததால் குற்றவாளியானார்.கிரிமினல் குற்றங்களுக்காகநாட்டை விட்டே தப்பினார்மதுரை ஆதீனகர்த்தர் நாக்கில் தேன் தடவி, அவரை ஏமாற்றி அம்மடத்தின் இளைய பட்டமாகி, பிறகு அவரையே வெளியேற்றிட முயன்றவுடன், அவர் விழித்துக்கொண்டதாலும், சட்டம், அரசு அவர் பக்கம் நின்றதாலும் ஒருவழியாக அங்கே இருந்து விரட்டப்பட்டு, கருநாடகத்தில் மடம், திருவண்ணாமலையில் - மலையின் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சி, பிறகு எப்படியோ குஜராத் வரை சென்று மடங்கட்டி, அங்கேயும் பெண்களையும், சிறார்களையும் கடத்தி, பிறகு பலவிதமான கிரிமினல் குற்றங்களின் காரணமாக சிக்க நேரிடும் என்ற அச்சத் தினால் நாட்டை விட்டே அந்தத் தீவிற்கு தப்பி ஓடிவிட்டார்.இப்போது அவர் தேடப்படும் கிரிமி னல் குற்றவாளி - Proclaimed Offender போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்!இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ளார்!நம் நாட்டு காவல்துறையின் அல்லது வெளியுறவுத் துறை போன்ற துறையின் அதிகாரிகளின், அதிகார வர்க்கத்தின் துணையோ இல்லாமல் அவர் எப்படி தப்பித்து வெளிநாட்டில் ஒரு தீவையே எப்படி விலைக்கு வாங்கியுள்ளார்? அந்தத் தீவிற்குக் கைலாயம் என்றும் பெயரிட்டு, ‘‘இந்து நாடாக அதை அறிவித்து, ‘‘இங்கே வாருங்கள், நான் சிவபெருமான் அவதாரம்; உங்களுக்குக் குடியுரிமை தருகிறேன் என்று நாளேடுகளில் செய்தியை இணையத்தின்மூலம் அவரே வெளியிட்டுப் பரப்பி, இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ளார்!அன்றைய காங்கிரசு கட்சியைக் கேள்வி கேட்ட பா.ஜ.க.வின் இன்றைய நிலை என்ன?‘‘விஜய் மல்லய்யா என்ற வங்கி மோசடி மன்னனை எப்படி வெளியேற விட்டீர்கள் என்று காங்கிரசைப் பார்த்துக் கேள்வி கேட்ட அன்றைய எதிர்க்கட்சி பா.ஜ.க. இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்துகிறது.வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி, நீரவ்மோடி, பா.ஜ.க. ஆட்சியில் எப்படி வெளிநாட்டிற்குத் தப்பினார் என்ற
கேள்விக்கே விடை இன்னும் கிடைக்காத நிலையில், அடுத்து நித்தியானந்தா என்ற பெயரில் ஒரு காவி மோசடிப் பேர்வழி - கிரிமினல் குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு ஆளான கடைந்தெடுத்த நபர் எப்படித் தப்பினார் - வெளியேறினார்? அதுவும் வெளிநாட்டில் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர் எப்படிப் பணம் சேர்த்தார்?காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ப.சிதம் பரங்கள்மீது பாயும் சட்டங்கள் இந்த நித்தியானந்தாக்களின் இத்தகைய சாலோப, சாமீப, சாரூப, சாயுச்சிய பக்தி
ராஜ்ஜியத்தை எப்படி அனுமதிக்கின்றன?மத்திய அரசின் உள்துறைக்கே அவர் போன்ற ஆசாமிகள் சவால் விடுகிறார்களே, அதற்குரிய கடும் எதிர்நடவடிக்கைகள்தான் என்ன?தனி ஹிந்து நாடாம்; இவர் குடியுரிமை வழங்குகிறாராம்; வாருங்கள் என்ற அழைப்பு விடுத்து பகிரங்கமாக ஏடுகளுக்குப் பேட்டி தருகிறாராம். இவைகளை எப்படி மத்திய அரசு சகித்துக் கொண்டுள்ளது?மோசடி மன்னர்களான சாமியார்களுக்கு தனிச் சிறைச்சாலை தேவை!இத்தகைய கிரிமினல் மோசடி மன்னர்களான சாமியார்கள் - பாபா ஆசாராம், இப்படிப் பலரும் சிறையில் உள்ள நிலையில், இவர்களுக்கென திகார் போன்று ஒரு தனிச்சிறைச்சாலையே தேவை என்னும் அளவுக்கு நாளும் குற்றங்களை தேசிய அளவில் நடத்தி வருவதோடு, சர்வதேச அளவுக்கும் சென்றுள்ளார்களே!எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்!இதுபோன்ற மோசடி தனி நாடு உருவாக்கும் நாடோடிகளைக் கண்டு, அவர்கள்மீது என்ன தீவிர நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டுள்ளது?நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை அரசின் கவனத் திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதும் முக்கியம்!ஹிந்து நாடு என்பதால் மென்மையான நடவடிக்கையா?ஜாதி இல்லாத நாடும்; சாமியார்கள் அற்ற நாடும்தான் சரியான நாடுமோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யத் தவறக்கூடாது!ஜாதி இல்லாத நாடும்சாமியார்கள் அற்ற நாடும்தான் சரியான நாடாகும்.இந்த நித்தியானந்தாக்களை விட்டு விட்டால், நாட்டில் மேலும் பல நித்தி யானந்தாக்கள் உருவாகக்கூடிய அபாய மும் உண்டு, மறவாதீர்!உடனடியாக மேல் நடவடிக்கைகள் மூலமாக இந்தக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படவேண்டும்!பெண்ணினம் - பாதுகாப்படையட்டும்!கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்7.12.2019

இந்திய அரசுக்கே சவால் விடும் நித்தியானந்தாக்கள்!
மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்!

‘அய்-டெக்' கருவிகளின் துணையோடு பலவித ‘‘லீலைகள்''

திருவண்ணாமலையில் படித்து, பட்ட தாரியான ஒரு இளைஞன் வேலை கிட் டாமல் அலைந்த நிலையில், பலவிதமாக யோசித்த நிலையில், மடங்கள் நிறைந்த அந்த ஊரில் - இந்த மட வியாபாரம் - நல்ல பக்தி வியாபாரமே செழிக்கும் வாணிபம் என்பதை எப்படியோ ஆழ மாக உணர்ந்துகொண்டு - திருவண்ணா மலையிலே சாமியார்களுக்குப் பஞ்சமில்லாத காரணத்தால் - கடைசியில் ஆங்காங்கே ஓடி, ஒரு ‘ஆசிரமத்தை'யும், சீட கோடிகளையும், பக்தைகளையும், பக்தர்களையும் உருவாக்கியதோடு, பல மொழி கற்றவர்களை அழைத்து, நவீன தொழில்முனைவோரின் உத்திகளையும், ‘அய்-டெக்' கருவிகளின் துணையோடு, அபார விளம்பரங்களைச் செய்து, நல்ல பக்தி வியாபாரத்தினை லாபகரமாகச் செய்து, அதற்கே உரிய மோசடிகளையும், மொள்ளமாரித்தனம், அவதார வேஷம் முதலிய பலவித ‘‘லீலைகளையும்'' செய்து, ஏராளமான பணம் சம்பாதித்த தோடு, பல குறுக்கு வழிகளில் காலி களுக்குக் காவி உடை தரிக்கச் செய்து, புதுப்புது ஆக்கிரமிப்புகளையும், பாலின வன்கொடுமைகளையும் செய்ததால் குற்றவாளியானார்.

கிரிமினல் குற்றங்களுக்காக

நாட்டை விட்டே தப்பினார்

மதுரை ஆதீனகர்த்தர் நாக்கில் தேன் தடவி, அவரை ஏமாற்றி அம்மடத்தின் இளைய பட்டமாகி, பிறகு அவரையே வெளியேற்றிட முயன்றவுடன், அவர் விழித்துக்கொண்டதாலும், சட்டம், அரசு அவர் பக்கம் நின்றதாலும் ஒருவழியாக அங்கே இருந்து விரட்டப்பட்டு, கருநாடகத்தில் மடம், திருவண்ணாமலையில் - மலையின் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சி, பிறகு எப்படியோ குஜராத் வரை சென்று மடங்கட்டி, அங்கேயும் பெண்களையும், சிறார்களையும் கடத்தி, பிறகு பலவிதமான கிரிமினல் குற்றங்களின் காரணமாக சிக்க நேரிடும் என்ற அச்சத் தினால் நாட்டை விட்டே அந்தத் தீவிற்கு தப்பி ஓடிவிட்டார்.

இப்போது அவர் தேடப்படும் கிரிமி னல் குற்றவாளி - Proclaimed Offender போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்!

இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ளார்!

நம் நாட்டு காவல்துறையின் அல்லது வெளியுறவுத் துறை போன்ற துறையின் அதிகாரிகளின், அதிகார வர்க்கத்தின் துணையோ இல்லாமல் அவர் எப்படி தப்பித்து வெளிநாட்டில் ஒரு தீவையே எப்படி விலைக்கு வாங்கியுள்ளார்? அந்தத் தீவிற்குக் கைலாயம் என்றும் பெயரிட்டு, ‘‘இந்து நாடாக'' அதை அறிவித்து, ‘‘இங்கே வாருங்கள், நான் சிவபெருமான் அவதாரம்; உங்களுக்குக் குடியுரிமை தருகிறேன்'' என்று நாளேடுகளில் செய்தியை இணையத்தின்மூலம் அவரே வெளியிட்டுப் பரப்பி, இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ளார்!

அன்றைய காங்கிரசு கட்சியைக் கேள்வி கேட்ட பா.ஜ.க.வின் இன்றைய நிலை என்ன?

‘‘விஜய் மல்லய்யா என்ற வங்கி மோசடி மன்னனை எப்படி வெளியேற விட்டீர்கள்'' என்று காங்கிரசைப் பார்த்துக் கேள்வி கேட்ட அன்றைய எதிர்க்கட்சி பா.ஜ.க. இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்துகிறது.

வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி, நீரவ்மோடி, பா.ஜ.க. ஆட்சியில் எப்படி வெளிநாட்டிற்குத் தப்பினார் என்ற
கேள்விக்கே விடை இன்னும் கிடைக்காத நிலையில், அடுத்து நித்தியானந்தா என்ற பெயரில் ஒரு காவி மோசடிப் பேர்வழி - கிரிமினல் குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு ஆளான கடைந்தெடுத்த நபர் எப்படித் தப்பினார் - வெளியேறினார்? அதுவும் வெளிநாட்டில் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர் எப்படிப் பணம் சேர்த்தார்?

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ப.சிதம் பரங்கள்மீது பாயும் சட்டங்கள் இந்த நித்தியானந்தாக்களின் இத்தகைய சாலோப, சாமீப, சாரூப, சாயுச்சிய பக்தி
ராஜ்ஜியத்தை எப்படி அனுமதிக்கின்றன?

மத்திய அரசின் உள்துறைக்கே அவர் போன்ற ஆசாமிகள் சவால் விடுகிறார்களே, அதற்குரிய கடும் எதிர்நடவடிக்கைகள்தான் என்ன?

தனி ஹிந்து நாடாம்; இவர் குடியுரிமை வழங்குகிறாராம்; வாருங்கள் என்ற அழைப்பு விடுத்து பகிரங்கமாக ஏடுகளுக்குப் பேட்டி தருகிறாராம். இவைகளை எப்படி மத்திய அரசு சகித்துக் கொண்டுள்ளது?

மோசடி மன்னர்களான சாமியார்களுக்கு தனிச் சிறைச்சாலை தேவை!

இத்தகைய கிரிமினல் மோசடி மன்னர்களான சாமியார்கள் - பாபா ஆசாராம், இப்படிப் பலரும் சிறையில் உள்ள நிலையில், இவர்களுக்கென திகார் போன்று ஒரு தனிச்சிறைச்சாலையே தேவை என்னும் அளவுக்கு நாளும் குற்றங்களை தேசிய அளவில் நடத்தி வருவதோடு, சர்வதேச அளவுக்கும் சென்றுள்ளார்களே!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்!

இதுபோன்ற மோசடி தனி நாடு உருவாக்கும் நாடோடிகளைக் கண்டு, அவர்கள்மீது என்ன தீவிர நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டுள்ளது?

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை அரசின் கவனத் திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதும் முக்கியம்!

ஹிந்து நாடு என்பதால் மென்மையான நடவடிக்கையா?

ஜாதி இல்லாத நாடும்; சாமியார்கள் அற்ற நாடும்தான் சரியான நாடு

மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யத் தவறக்கூடாது!

ஜாதி இல்லாத நாடும்

சாமியார்கள் அற்ற நாடும்தான் சரியான நாடாகும்.

இந்த நித்தியானந்தாக்களை விட்டு விட்டால், நாட்டில் மேலும் பல நித்தி யானந்தாக்கள் உருவாகக்கூடிய அபாய மும் உண்டு, மறவாதீர்!

உடனடியாக மேல் நடவடிக்கைகள் மூலமாக இந்தக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படவேண்டும்!

பெண்ணினம் - பாதுகாப்படையட்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

7.12.2019
... மேலும்மேலும்

Comment on Facebook

தமிழன் பண்பாட்டையும் பாரம்பாரியத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்க வந்தது தான் திரவிடமா ?

கொதிப்பது சரி ஆனால் நித்தி மட்டும்தானா ? பக்கத்து கேராளாவில் ஒரு பாதிரி பத்தி கொதிக்கலையே ? ஏன் ? பதிவே இல்லை ஏன் காரணம் திரவிட பொய்யர்கள் இனி தமிழனை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியாது காலம் மாறி விட்டது

ஆமா மற்ற மத தலைவர்கள் தவறு செய்து செய்தி வரும் போது உங்க வாயில் என்ன இருக்கும் தெரிந்து கொள்ளலாமா

'இந்து' என்றால் திருடன் என்று சரியாகத்தான் சொன்னார்கள்?

அவ சாமி இருக்கிறார் சொல்லி சம்பாதிக்கிறார் நீ சாமி இல்லைன்னு சொல்லிட்டு சம்பாதிக்கிற அவ்வளவுதான் வித்தியாசம்

சரி கேரளா பாதிரி கண்ணியாஸ்தீரிகளையும் பல பெண்களையும் கற்பழிச்சானே அப்ப நீங்க எல்லோரும் அவன் சாமான கூம்ப போணிகளா

View more comments

மாநில அரசுப் பணியாளர்களுக்கும் தேசிய தேர்வா?
--------------------------------------------------------------------------------------------------------------
சமூகநீதி மண்ணில் பிரளயம் ஏற்படும் - எச்சரிக்கை!மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ், குரூப் ஏ மற்றும் குருப் பி பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தி வருகிறது.
எஸ்.எஸ்.சி. எனப்படும் (Staff Selection Commission) மத்திய அரசுக்கான குரூப் பி பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வினை நடத்தி வருகிறது.மாநிலத்தில் மாநில அரசால் மாநில தேர்வு ஆணையத்தால் (TNPSC) மாநில அரசு பணியாளர்களுக்காகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.எல்லாம் ஒரே ஒரே இராகம்தானா?மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியிடங்களுக்கும் - மாநில அரசுக்கான பணியிடங்களுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே பொதுத் தகுதித் தேர்வு நடத்தும் யோசனையைத் தெரிவித்துள்ளது.மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான அரசின் கொள்கை என்பது ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ரேசன் முறை என்று எல்லாம் ஒரே ஒரே பாட்டுதான்.மாநிலங்களே கூடாது என்பதுதான் பி.ஜே.பி., சங்பரிவார்களின் கொள்கையாகும்.இப்பொழுது ஒவ்வொன்றாக மாநில அரசுகளின் உரிமைகளையும் விழுங்கும் வேலையில் பி.ஜே.பி. அரசு இறங்கி விட்டதாகவே தெரிகிறது.மாநில அரசுக்கு என்னதான் உரிமை?தங்கள் தங்கள் மாநிலத்துக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யும் உரிமைகூட மாநில அரசுகளுக்குக் கிடையாதா?
இத்துடன் தேசிய அளவில் மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத் தரவரிசை தயாரிக்கப்படுமாம்.இதன் பொருள் தமிழகத்தின் நிர்வாகத்தில் பீகார்காரரும், உ.பி.காரரும் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். ஏனெனில், எந்த மொழியிலும் எழுதலாம் என்கிறபோது, தமிழ் தெரியாத பீகார், உ.பி., ம.பி. அலுவலர்களிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழை மட்டுமே பேசத் தெரிந்த பொதுமக்கள் அவதிப்பட வேண்டியதுதான்.இதன் நோக்கம் மாநிலத்திற்கான தனித் தன்மையையும், கலாச்சாரத்தையும் நாசப்படுத்துவதுதான்.இதன் பின்னணியில் பார்ப்பனிய பெருஞ்சதித் திட்டம் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக் காலகட்டத்தில் தேசியம் என்ற போர்வையில் குப்தர்கால ஆட்சியை - மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத் திட்டமிட்டு விட்டார்கள்.குப்தர் கால ஆட்சியை இவர்கள் பொற்காலம் என்று சொல்லுவதில்லையா? அது ஒரு பார்ப்பனத் தர்பாரே!மாநில அளவில் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதை மாற்றி, தேசிய அளவில் நீட் என்னும் தேசிய நுழைவுத் தேர்வை நடத்தியதால் ஏற்பட்ட கடும் இழப்பிலிருந்து மீள முடியாமல் மாநில மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள். இது போதாது என்று இப்பொழுது, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதைபோல - மாநில அரசுப் பணி களிலும் தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டிட வஞ்சகக் கத்தியைத் தீட்டுகிறது.கருத்துக் கணிப்பு என்பது ஏமாற்று வேலையே!மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப் படுமாம். மற்றவர்களும் கருத்துகளைக் கூறலாமாம். நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கைமீது கேட்கப்பட்ட கருத்துகள்பற்றி வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை.பார்ப்பன ஆட்சியின் கண்ணிவெடிகள்!அந்த நிலைதான் இதற்கும் ஏற்படும். சமூகநீதியை ஒழித்துக்கட்ட ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய பா.ஜ.க. என்னும் பார்ப்பன ஆட்சி கண்ணிவெடிகளை வைத்துக் கொண்டே வருகிறது.தமிழ்நாடு அரசு இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மத்திய அரசின் அச்சுறுத் தலுக்கோ கூட்டணி தர்மத்துக்கோ அடி பணிந்து போய்விடுமாயின் அதைவிடத் தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.அண்ணாவின் பெயரில் உள்ள ஆட்சியின் கவனத்துக்கு...மாநில உரிமைகளுக்காக மாநிலங்களவையில் தனது முதல் உரையிலேயே அழுத்த மாகக் குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா - அதனை மறந்துவிடக் கூடாது.நாட்டுப் பிரிவினையைக் கைவிடும்போது கூட பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று அழுத்தமாகச் சுட்டிக் காட்டத் தவறவில்லை அறிஞர் அண்ணா.நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி இரு மசோதாக்களை நிறைவேற்றியும் அதன் முடிவில் கோட்டை விட்டதுபோல, இதிலும் நடந்துகொண்டால், தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.இது சமூகநீதி மண் - 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றிய மண்.
மண்டல் குழுப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட போராடி வெற்றி பெற்ற மண். சமூகநீதிக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமான மண்.பிரளயம் ஏற்படும் - எச்சரிக்கை!இதில் எந்த இடத்திலாவது, எந்த வகையிலாவது அ.தி.மு.க. அரசு, மத்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாகுமானால், பெரிய பிரளயம் ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்.பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமான வரம்பு நிர்ணயித்ததன் பலனை முதலமைச்சர் எம்.ஜி.ஆரே அனுபவிக்க வில்லையா? மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் எம்.ஜி.ஆர். தோல்வியைக் கண்ட பழைய வரலாற்றை எல்லாம் மறந்து விடக் கூடாது! கூடாது!!எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!-கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
6.12.2019

மாநில அரசுப் பணியாளர்களுக்கும் தேசிய தேர்வா?
--------------------------------------------------------------------------------------------------------------
சமூகநீதி மண்ணில் பிரளயம் ஏற்படும் - எச்சரிக்கை!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ், குரூப் ஏ' மற்றும் குருப் பி' பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தி வருகிறது.
எஸ்.எஸ்.சி. எனப்படும் (Staff Selection Commission) மத்திய அரசுக்கான குரூப் பி' பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வினை நடத்தி வருகிறது.மாநிலத்தில் மாநில அரசால் மாநில தேர்வு ஆணையத்தால் (TNPSC) மாநில அரசு பணியாளர்களுக்காகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

எல்லாம் ஒரே' ஒரே' இராகம்தானா?

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியிடங்களுக்கும் - மாநில அரசுக்கான பணியிடங்களுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே பொதுத் தகுதித் தேர்வு நடத்தும் யோசனையைத் தெரிவித்துள்ளது.

மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான அரசின் கொள்கை என்பது ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ரேசன் முறை என்று எல்லாம் ஒரே' ஒரே' பாட்டுதான்.

மாநிலங்களே கூடாது என்பதுதான் பி.ஜே.பி., சங்பரிவார்களின் கொள்கையாகும்.

இப்பொழுது ஒவ்வொன்றாக மாநில அரசுகளின் உரிமைகளையும் விழுங்கும் வேலையில் பி.ஜே.பி. அரசு இறங்கி விட்டதாகவே தெரிகிறது.

மாநில அரசுக்கு என்னதான் உரிமை?

தங்கள் தங்கள் மாநிலத்துக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யும் உரிமைகூட மாநில அரசுகளுக்குக் கிடையாதா?
இத்துடன் தேசிய அளவில் மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத் தரவரிசை தயாரிக்கப்படுமாம்.

இதன் பொருள் தமிழகத்தின் நிர்வாகத்தில் பீகார்காரரும், உ.பி.காரரும் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். ஏனெனில், எந்த மொழியிலும் எழுதலாம் என்கிறபோது, தமிழ் தெரியாத பீகார், உ.பி., ம.பி. அலுவலர்களிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழை மட்டுமே பேசத் தெரிந்த பொதுமக்கள் அவதிப்பட வேண்டியதுதான்.

இதன் நோக்கம் மாநிலத்திற்கான தனித் தன்மையையும், கலாச்சாரத்தையும் நாசப்படுத்துவதுதான்.

இதன் பின்னணியில் பார்ப்பனிய பெருஞ்சதித் திட்டம் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக் காலகட்டத்தில் தேசியம் என்ற போர்வையில் குப்தர்கால ஆட்சியை - மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத் திட்டமிட்டு விட்டார்கள்.

குப்தர் கால ஆட்சியை இவர்கள் பொற்காலம் என்று சொல்லுவதில்லையா? அது ஒரு பார்ப்பனத் தர்பாரே!

மாநில அளவில் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதை மாற்றி, தேசிய அளவில் நீட்' என்னும் தேசிய நுழைவுத் தேர்வை நடத்தியதால் ஏற்பட்ட கடும் இழப்பிலிருந்து மீள முடியாமல் மாநில மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள். இது போதாது என்று இப்பொழுது, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதைபோல - மாநில அரசுப் பணி களிலும் தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டிட வஞ்சகக் கத்தியைத் தீட்டுகிறது.

கருத்துக் கணிப்பு என்பது ஏமாற்று வேலையே!

மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப் படுமாம். மற்றவர்களும் கருத்துகளைக் கூறலாமாம். நீட்' மற்றும் தேசிய கல்விக் கொள்கைமீது கேட்கப்பட்ட கருத்துகள்பற்றி வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை.

பார்ப்பன ஆட்சியின் கண்ணி'வெடிகள்!

அந்த நிலைதான் இதற்கும் ஏற்படும். சமூகநீதியை ஒழித்துக்கட்ட ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய பா.ஜ.க. என்னும் பார்ப்பன ஆட்சி கண்ணிவெடிகளை வைத்துக் கொண்டே வருகிறது.

தமிழ்நாடு அரசு இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மத்திய அரசின் அச்சுறுத் தலுக்கோ கூட்டணி தர்மத்துக்கோ' அடி பணிந்து போய்விடுமாயின் அதைவிடத் தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அண்ணாவின் பெயரில் உள்ள ஆட்சியின் கவனத்துக்கு...

மாநில உரிமைகளுக்காக மாநிலங்களவையில் தனது முதல் உரையிலேயே அழுத்த மாகக் குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா - அதனை மறந்துவிடக் கூடாது.

நாட்டுப் பிரிவினையைக் கைவிடும்போது கூட பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று அழுத்தமாகச் சுட்டிக் காட்டத் தவறவில்லை அறிஞர் அண்ணா.

நீட்' தேர்விலிருந்து விலக்குக் கோரி இரு மசோதாக்களை நிறைவேற்றியும் அதன் முடிவில் கோட்டை விட்டதுபோல, இதிலும் நடந்துகொண்டால், தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இது சமூகநீதி மண் - 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றிய மண்.
மண்டல் குழுப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட போராடி வெற்றி பெற்ற மண். சமூகநீதிக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமான மண்.

பிரளயம் ஏற்படும் - எச்சரிக்கை!

இதில் எந்த இடத்திலாவது, எந்த வகையிலாவது அ.தி.மு.க. அரசு, மத்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாகுமானால், பெரிய பிரளயம் ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்.

பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமான வரம்பு நிர்ணயித்ததன் பலனை முதலமைச்சர் எம்.ஜி.ஆரே அனுபவிக்க வில்லையா? மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் எம்.ஜி.ஆர். தோல்வியைக் கண்ட பழைய வரலாற்றை எல்லாம் மறந்து விடக் கூடாது! கூடாது!!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

-கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
6.12.2019
... மேலும்மேலும்

Comment on Facebook

அதிமுக தனது உண்மை முகத்தை காட்ட வேண்டும்!!

TNPSC விசயத்தில் அடிமை அதிமுக அரசின் மௌனமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.

விலையில்லா சோறு... 😀

View more comments

தன்னைப் பார்ப்பனர் என்று அடையாளம் காட்டும் மத்திய நிதியமைச்சர்
துடில்லி, டிச 5 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெங் காயம் விலை ரூ.200 ஆகி விட்டது என்று கூறி அதற்கு தீர்வுதான் என்ன என்று நிதி அமைச்சரிடம் உறுப்பினர் கள் கேட்ட போது, நான் வெங்காயம், பூண்டு சாப் பிடாத பாரம்பரிய குடும் பத்தில் இருந்து வந்தவர். ஆகையால் எனக்கு இது பற்றி தெரியாது என்று எந்த ஒரு மன உறுத்தலும் இன்றி இறுமாப்போடு பதில் கூறி னார்.வெங்காய விலையால் நாட்டு மக்கள் கடும் அவதிய டைந்து வரும் நிலையில், நிர்மலாவின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. தான் வெங்காயத்தை சாப் பிட மாட்டேன் என நிர்மலா கூறியதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் இவரது பதிலைக் கேட்டு ஆளும் பாஜக உறுப் பினர்கள் சிரித்துக்கொண்டு இருந்தனர்.இந்தியாவில் கடந்த சில நாட்களாக வெங்காய விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வெங் காயத்தின் விலை ரூ.170 முதல் ரூ. 200 வரை விற்பனை செய் யப்படுகிறது. இதனால் நடுத் தர மக்கள் மிகவும் அவ திக்குள்ளாகியுள்ளனர்.
http://www.viduthalai.in/e-paper/192334.html

தன்னைப் பார்ப்பனர் என்று அடையாளம் காட்டும் மத்திய நிதியமைச்சர்
துடில்லி, டிச 5 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெங் காயம் விலை ரூ.200 ஆகி விட்டது என்று கூறி அதற்கு தீர்வுதான் என்ன என்று நிதி அமைச்சரிடம் உறுப்பினர் கள் கேட்ட போது, நான் வெங்காயம், பூண்டு சாப் பிடாத பாரம்பரிய குடும் பத்தில் இருந்து வந்தவர். ஆகையால் எனக்கு இது பற்றி தெரியாது என்று எந்த ஒரு மன உறுத்தலும் இன்றி இறுமாப்போடு பதில் கூறி னார்.

வெங்காய விலையால் நாட்டு மக்கள் கடும் அவதிய டைந்து வரும் நிலையில், நிர்மலாவின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. தான் வெங்காயத்தை சாப் பிட மாட்டேன் என நிர்மலா கூறியதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இவரது பதிலைக் கேட்டு ஆளும் பாஜக உறுப் பினர்கள் சிரித்துக்கொண்டு இருந்தனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக வெங்காய விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வெங் காயத்தின் விலை ரூ.170 முதல் ரூ. 200 வரை விற்பனை செய் யப்படுகிறது. இதனால் நடுத் தர மக்கள் மிகவும் அவ திக்குள்ளாகியுள்ளனர்.
www.viduthalai.in/e-paper/192334.html
... மேலும்மேலும்

Comment on Facebook

She should remove from FM post for her irresponsible answer.

வெங்காயம் கிலோ பத்து ரூபாய்க்கு விற்றது விவசாயிகள் கண்ணீரோடு சாலையில் கொட்டினர் அப்போது எங்கே சென்றாய் விடுதலை? பாப்பான் பாப்பான்னு ஜாதி அரசியல் செய்யாதே அசிங்கமாக இருக்கிறது

இதே காங்கிரஸ் ஆட்சியில் 65. ரூபாய்க்கு விற்றபோது என்னமா துள்ளினீங்க சங்கீகளா. இப்ப நவதுவராத்தையும் அடச்சுபோய் வெங்காயம்ன்னு பேரைக்கூட சொல்ல மாட்டிறீங்களடா

இந்த நாரவாயி தான் 2013 ல் வேங்காயத்தை பற்றி பேசியது

NALLA VAELA IVALUNGA VENGAAYAM VELLA POONDU THINGIRATHU ILLA. ITHAIYUM IVALUNGA THINNAA VENGAAYAM VELLA POONDU VILAI ENGAEYO POAYIDUM.

வெங்காயமே வெங்காயத்தை சாப்பிடாது...சரிதான்....இம்மாதிரியான கேவலமான முட்டாள்களை அமைச்சராக்கிய மடையர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை....வாழ்க ஜனநாயகம்..வளர்க மக்களாட்சி

Thimir.

புலி புல்ல தின்னாலும் பிராமின் திருந்த மாட்டான்

திரிக்கப்பட்ட செய்தி.. அவர் எதற்கு சொன்னார், அதற்கு முன் பின் என்ன விவாதம் நடந்ததுனு முழு வீடியோ பார்த்துட்டு பேசுங்க ஓசி சோறே

நீ மட்டும் எப்பொழுது பார்த்தாலும் திராவிடம் திராவிடம் என்று உளறிக்கொண்டே இருக்கிறாயே

அடேய் லூசு, அந்தம்மா பேசிய முழு வீடியோவும் பாருடா, நீ சொல்றது ஊடகங்கள் சொல்றது அத்தனையும் பொய் ன்னு தெளிவா தெரியும்

Only 2% of India do not eat onion & garlic...What about the 98% who eat it....You are the the FM of 130 crores of Indians...not just 3 crores...

In general,she does'nt inspire any confidence as our Finance Minister.She is all the time in a combative mood,trying to score points over the opposition.At times her speeches seem immature and childish. All these would not have mattered if economy is doing well ..Unfortunately nothing seems to be going right for her and the country

ஆக வெங்காயம் பூண்டு துன்னீனா நீ முமீன் அல்லபுகாரி 855. ஜாபிர்(ரலி) அறிவித்தார். 'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.புகாரி 856. அப்துல் அஸீஸ் அறிவித்தார். ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

ஏண்டா இன்னும் பார்ப்பான் உங்கள (திராவிடர்கள் - தெலுங்கர்கள்) வாயில ஒப்பான் கதறிக்கிட்டு இருக்கீங்கடா திருட்டு பையல்களாக ஆரியமும் - திருட்டு திராவிடனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு

Yes these Minority people of the country are a serious threat to the nation!!

ஹோட்டல் சாப்பாட்டுக்கு GST வரிவிதிப்பு ஏன் என்று கேட்டபோது, "வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்" என்று சொன்னவர் தான் நிர்மலா சீதாராமன்.சிங்கப்பூரில் வரி குறைவாக உள்ளதே என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பிய போது, "என்னை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு கொடுத்ததே பெரிய விசயம்" என்று சொன்னவர் நிர்மலா சீதாராமன்.தற்போது வெங்காயம் விலை உயர்வு பற்றி கேட்டால், "நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை எனவே, பாதிப்பில்லை" என்று கூறியிருக்கிறார்.நிர்மலா தேர்தலில் நின்று மக்களிடம் வோட்டு கேட்டு நாடாளுமன்றம் வரவில்லை. மக்களை சந்திக்காமல் நேரடியாக தன் உயர் சமூகத்தவர்களின் லாபியால் மந்திரி ஆனவர். அவரிடம் சாமானிய மக்கள் மீதான வெறுப்பும் வன்மமும் மட்டுமே இருக்க முடியும்.

பார்ப்பன நாய்களே இப்படித்தான் வடமாநில சோத்துக்கு செத்த முட்டாள் பசங்க இருக்கும் வரை இப்படித்தான் இருப்பானுங்க

நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்தவள், அதனால் அதன் விலை உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை...இப்படி நிதி அமைச்சர் சொன்னதாக பல பதிவுகள், குறிப்பாக கம்யூனிச மற்றும் திராவிட சித்தாந்தவாதிகள் பக்கங்களில் !இது போன்ற செய்தியை எழுதும் முன், பரப்பும் முன் சற்றேனும் யேசித்தார்களா, செய்தியை சரி பார்த்தார்களா என்றால் நிச்சயம் இல்லை! ஏதோ ஒன்று கிடைத்தது, எழுதி விஷம் கக்கலாம் - அவ்வளவு தான்...செய்தியை சரிபார்த்தால் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பேசியது முற்றிலும் வேறு விதமாக உள்ளது.மனம் முழுதும் சாதிய வன்மம் மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு கூட்டம் உண்டு என்றால் உலகிலேயே அது நம் மாநிலத்தில் மட்டும் தான் இருக்கும்..அதீத சுதந்திரம் நமக்கு ஒத்து வராது. கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே நல்லது.

ஹோட்டல் சாப்பாட்டுக்கு GST வரிவிதிப்பு ஏன் என்று கேட்டபோது, "வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்" என்று சொன்னவர் தான் நிர்மலா சீதாராமன்.சிங்கப்பூரில் வரி குறைவாக உள்ளதே என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பிய போது, "என்னை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு கொடுத்ததே பெரிய விசயம்" என்று சொன்னவர் நிர்மலா சீதாராமன்.தற்போது வெங்காயம் விலை உயர்வு பற்றி கேட்டால், "நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை எனவே, பாதிப்பில்லை" என்று கூறியிருக்கிறார்.நிர்மலா தேர்தலில் நின்று மக்களிடம் வோட்டு கேட்டு நாடாளுமன்றம் வரவில்லை. மக்களை சந்திக்காமல் நேரடியாக தன் உயர் சமூகத்தவர்களின் லாபியால் மந்திரி ஆனவர். அவரிடம் சாமானிய மக்கள் மீதான வெறுப்பும் வன்மமும் மட்டுமே இருக்க முடியும்.

இது ஒரு பிரச்சினையா????... வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் வாய் நாறும்...so!!!!

View more comments

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘இந்தியா?திரும்பப் பெறுக - இன்றேல் கிளர்ச்சி வெடிக்கும்!தமிழ்நாடு அரசின் சார்பில் பல ஆண்டுகாலமாக சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்தில் புதிதாக ஒரு ஏற்பாட்டினை தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராக உள்ள திரு.மாஃபா பாண்டியராஜன் அவர்கள் செய்துள்ளதாகக் கூறி, அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்துவரும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையின் வேரில் வெந்நீர் ஊற்றி, மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசின் ‘சட கோபம் சாத்தப்படத் துடியாய்த் துடிக் கிறார் போலும்!அண்ணாவை அறிவாரா அமைச்சர்?1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்த போது அவர் எந்தக் கட்சியில் இருந்தார் என்று நமக்குத் தெரியாது; ஆனால், அவர் மாணவப் பருவத்தில் இருந்திருக்கக் கூடும்.ஒரு அமைச்சரின் வேலை ஒரு அரசு திட்டவட்டமாகக் கடந்த 50 ஆண்டு களுக்குமேலாகக் கடைபிடித்துவரும் ‘‘Policy Decision - கொள்கையை மாற்றிட - டில்லியைத் திருப்தி செய்து, அவாளின் புன்னகையைப் பெற இப்படி தமிழ்நாட்டின் மாநில உரிமையை இழக்கலாமா?மற்றவர்கள் அல்லது நம் மாணவர்கள் விரும்பும் மொழியைக் கற்றுக்கொடுக்க ஹிந்திப் பிரச்சார சபா, Alliance Francaise  போன்ற அமைப்புகள் இருக்கும்போது, தமிழ்நாடு அரசு சார்பாக உள்ள நிறுவனம் - அதன் பெயரையே மாற்றிடுவது போன்று - பன்மொழி கற்றுத் தரும் பயிற் சிக்காகத் தொடங்கப்பட்டதோ, நடை பெறுவதோ அல்ல.தமிழை செம்மொழியாக்கிட அரும் பாடுபட்ட கலைஞர் முயற்சியால், மைசூரில் இருந்த மத்திய அரசின் அந்த நிறுவனம், தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டது.செம்மொழி நிறுவனத்தின் அவல நிலை!இன்று அச்செம்மொழி நிறுவனத் தினை - திட்டமிட்டே அலட்சியப்படுத்தி - அதில் எந்த உருப்படியான ஆய்வும் நடத்தப்படாமல், ‘தினக்கூலி நிறுவனம் போல குற்றுயிரும் குலை உயிருமாக நடத்துவதை மாற்றி அதனை மேம்படுத் துவதற்கு, இவரது அமைச்சகத்தின் தனிக் கவனம் செலுத்தப்படவேண்டியது தலையாய கடமை அல்லவா?அதை விட்டுவிட்டு, ‘‘கிடப்பது கிடக் கட்டும், கிழவனைத் தூக்கி மணையில்வை என்பதுபோல, ஹிந்திக்கு நடை பாவாடை விரித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்பதன் பெயர், பொருள், பணி எல்லாவற்றையும் மாற்றிட முயலு வதா?பல மொழிகள் ஒப்பீடு செய்வது வேறு; பன்மொழி பயிற்சி நிலையமாக்கி, அதன், தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிப் படையிலே ஓட்டை போட்டு, அதனை திசை திருப்புவது எவ்வகையிலும் நியாயமல்ல.இன்னமும் தமிழ் கற்காத, தமிழில் பேசத் தெரியாத பல ஆட்சி அதிகாரிகள் முதல் பாமரர் வரை பலரும் உண்டு.அடுத்த கட்டம் சமஸ்கிருதமா?தமிழைப் பரப்பும் பணியில் ஆய்வு செய்யும் வேலை - முழுமையாக ஈடுபட வேண்டியதுதான் இதன் நோக்கம், இலக்கு.அதை விடுத்து, இப்போது இந்திய மொழி, உலக மொழி என்று ஆரம்பத்தில் ‘அடணா பாடுவது, அடுத்தகட்டமாக ஏதாவது இந்திய மொழி என்ற இடத்தில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளலாம் என் பதற்கு இது முன்னுரையோ - உரைப் பாயிரமோ என்ற அய்யமும் நமக்கு எழுகிறது!மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கவும், தமிழ்நாட்டுக்குள் பறக்கும் பயணியர் விமானங்களில் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்கவும், உலகப் பொது நூலாம் திருக்குறளை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் பரப்பும் பணியில் ஈடுபடவேண்டிய ஓர் ஆய்வு நிறுவனம், இப்படி திசை திருப் பல்களுக்கு ஆளாகி இருப்பது வன்மை யான கண்டனத்திற்குரியது.கிளர்ச்சி வெடிக்கும்!உடனே இந்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்; இன்றேல், கிளர்ச்சி வெடிப்பது உறுதி!-கி.வீரமணி,தலைவர்,திராவிடர் கழகம்5.12.2019
http://www.viduthalai.in/e-paper/192332.html

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘இந்தி'யா?

திரும்பப் பெறுக - இன்றேல் கிளர்ச்சி வெடிக்கும்!

தமிழ்நாடு அரசின் சார்பில் பல ஆண்டுகாலமாக சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்தில் புதிதாக ஒரு ஏற்பாட்டினை தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராக உள்ள திரு.மாஃபா பாண்டியராஜன் அவர்கள் செய்துள்ளதாகக் கூறி, அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்துவரும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையின் வேரில் வெந்நீர் ஊற்றி, மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசின் ‘சட கோபம்' சாத்தப்படத் துடியாய்த் துடிக் கிறார் போலும்!

அண்ணாவை அறிவாரா அமைச்சர்?

1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்த போது அவர் எந்தக் கட்சியில் இருந்தார் என்று நமக்குத் தெரியாது; ஆனால், அவர் மாணவப் பருவத்தில் இருந்திருக்கக் கூடும்.

ஒரு அமைச்சரின் வேலை ஒரு அரசு திட்டவட்டமாகக் கடந்த 50 ஆண்டு களுக்குமேலாகக் கடைபிடித்துவரும் ‘‘Policy Decision'' - கொள்கையை மாற்றிட - டில்லியைத் திருப்தி செய்து, அவாளின் புன்னகையைப் பெற இப்படி தமிழ்நாட்டின் மாநில உரிமையை இழக்கலாமா?

மற்றவர்கள் அல்லது நம் மாணவர்கள் விரும்பும் மொழியைக் கற்றுக்கொடுக்க ஹிந்திப் பிரச்சார சபா, Alliance Francaise போன்ற அமைப்புகள் இருக்கும்போது, தமிழ்நாடு அரசு சார்பாக உள்ள நிறுவனம் - அதன் பெயரையே மாற்றிடுவது போன்று - பன்மொழி கற்றுத் தரும் பயிற் சிக்காகத் தொடங்கப்பட்டதோ, நடை பெறுவதோ அல்ல.

தமிழை செம்மொழியாக்கிட அரும் பாடுபட்ட கலைஞர் முயற்சியால், மைசூரில் இருந்த மத்திய அரசின் அந்த நிறுவனம், தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டது.

செம்மொழி நிறுவனத்தின் அவல நிலை!

இன்று அச்செம்மொழி நிறுவனத் தினை - திட்டமிட்டே அலட்சியப்படுத்தி - அதில் எந்த உருப்படியான ஆய்வும் நடத்தப்படாமல், ‘தினக்கூலி' நிறுவனம் போல குற்றுயிரும் குலை உயிருமாக நடத்துவதை மாற்றி அதனை மேம்படுத் துவதற்கு, இவரது அமைச்சகத்தின் தனிக் கவனம் செலுத்தப்படவேண்டியது தலையாய கடமை அல்லவா?

அதை விட்டுவிட்டு, ‘‘கிடப்பது கிடக் கட்டும், கிழவனைத் தூக்கி மணையில்வை'' என்பதுபோல, ஹிந்திக்கு நடை பாவாடை விரித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்பதன் பெயர், பொருள், பணி எல்லாவற்றையும் மாற்றிட முயலு வதா?

பல மொழிகள் ஒப்பீடு செய்வது வேறு; பன்மொழி பயிற்சி நிலையமாக்கி, அதன், தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிப் படையிலே ஓட்டை போட்டு, அதனை திசை திருப்புவது எவ்வகையிலும் நியாயமல்ல.

இன்னமும் தமிழ் கற்காத, தமிழில் பேசத் தெரியாத பல ஆட்சி அதிகாரிகள் முதல் பாமரர் வரை பலரும் உண்டு.

அடுத்த கட்டம் சமஸ்கிருதமா?

தமிழைப் பரப்பும் பணியில் ஆய்வு செய்யும் வேலை - முழுமையாக ஈடுபட வேண்டியதுதான் இதன் நோக்கம், இலக்கு.

அதை விடுத்து, இப்போது இந்திய மொழி, உலக மொழி என்று ஆரம்பத்தில் ‘அடணா' பாடுவது, அடுத்தகட்டமாக ஏதாவது இந்திய மொழி என்ற இடத்தில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளலாம் என் பதற்கு இது முன்னுரையோ - உரைப் பாயிரமோ என்ற அய்யமும் நமக்கு எழுகிறது!

மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கவும், தமிழ்நாட்டுக்குள் பறக்கும் பயணியர் விமானங்களில் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்கவும், உலகப் பொது நூலாம் திருக்குறளை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் பரப்பும் பணியில் ஈடுபடவேண்டிய ஓர் ஆய்வு நிறுவனம், இப்படி திசை திருப் பல்களுக்கு ஆளாகி இருப்பது வன்மை யான கண்டனத்திற்குரியது.

கிளர்ச்சி வெடிக்கும்!

உடனே இந்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்; இன்றேல், கிளர்ச்சி வெடிப்பது உறுதி!

-கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

5.12.2019
www.viduthalai.in/e-paper/192332.html
... மேலும்மேலும்

Comment on Facebook

திரவிடனுக்கு இதில் என்ன வேலை

உ.பி. பி.ஜே.பி. ஆட்சியில் மரத்தடியில் பள்ளிகள் ‘விடுதலை தகவல் உண்மையே!புதுடில்லி, டிச.4 பெரியார் பிறந்த நாள் மலரில் மதுரா பகுதியில் மரத்தடியில் நடக் கும் பள்ளி ஒன்று படமாக வந்திருந்தது, ஆனால் இது பொய்யானது என்று சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் குளிர்கால கூட்டத் தொடரில் பேசிய மதுரா நாடாளுமன்ற உறுப் பினர் எனது தொகுதியில் வயல் வெளியிலும், மரத்தடி யிலும் பள்ளிகள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் அனைத்துக் கட்சி களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசி வரு கின்றனர்.அதன்பகுதியாக, நடிகை யும், பாஜக எம்பியுமான ஹேமாமாலினி பேசினார். மதுரா தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பின ராக இருக் கும் அவர் கூறி இருப்பதாவது:எனது தொகுதியில் பள் ளிக்கூடங்களின் நிலைமை ரொம்ப மோசம்.நிறைய பள்ளிக்கூடங் களில் போதிய கட்டடங்கள் இல்லை. பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடத்தப்படுகின் றன. கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குப் போதிய கல்வி கிடைக்க வில்லை.அரசு, தனியார் பங்களிப்பு இணைந்து, இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண வேண் டும். பள்ளிகளில் வகுப்பறை களை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
http://www.viduthalai.in/e-paper/192305.html

உ.பி. பி.ஜே.பி. ஆட்சியில் மரத்தடியில் பள்ளிகள் ‘விடுதலை' தகவல் உண்மையே!

புதுடில்லி, டிச.4 பெரியார் பிறந்த நாள் மலரில் மதுரா பகுதியில் மரத்தடியில் நடக் கும் பள்ளி ஒன்று படமாக வந்திருந்தது, ஆனால் இது பொய்யானது என்று சமூக வலைதளங்களில் கருத்துதெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் குளிர்கால கூட்டத் தொடரில் பேசிய மதுரா நாடாளுமன்ற உறுப் பினர் எனது தொகுதியில் வயல் வெளியிலும், மரத்தடி யிலும் பள்ளிகள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் அனைத்துக் கட்சி களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசி வரு கின்றனர்.

அதன்பகுதியாக, நடிகை யும், பாஜக எம்பியுமான ஹேமாமாலினி பேசினார். மதுரா தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பின ராக இருக் கும் அவர் கூறி இருப்பதாவது:

எனது தொகுதியில் பள் ளிக்கூடங்களின் நிலைமை ரொம்ப மோசம்.

நிறைய பள்ளிக்கூடங் களில் போதிய கட்டடங்கள் இல்லை. பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடத்தப்படுகின் றன. கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குப் போதிய கல்வி கிடைக்க வில்லை.

அரசு, தனியார் பங்களிப்பு இணைந்து, இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண வேண் டும். பள்ளிகளில் வகுப்பறை களை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
www.viduthalai.in/e-paper/192305.html
... மேலும்மேலும்