யாமறிந்த மொழிகளிலே "தமிழ்" மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணங்கச்செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்.
இன்றைய குறளமுதம் - Intraiya Kural Amutham. Today's Thirukkural.
திருவள்ளுவரின் திருக்குறள் பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: பொச்சாவாமை / Unforgetfulness குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
விளக்கம் 1: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
விளக்கம் 2: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
English Couplet 531: 'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control.
Couplet Explanation: More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.
Transliteration(Tamil to English): iRandha vekuLiyin theedhae siRandha uvakai makizhchchiyiR soarvu ============================================ -Android - கோகுலம் தமிழ் வானொலியை உங்கள் அன்ட்றொய்ட் சாதனங்களில் கேட்டு மகிழ: play.google.com/store/apps/details?id=org.shoutcloud.GTRFM ============================================ -iPhone - கோகுலம் தமிழ் வானொலியை உங்கள் ஐபோஹ்ன், ஐபாட் ஐபொட் போன்ற ஆப்பிள் சாதனங்களில் கேட்டு மகிழ: itunes.apple.com/us/app/gtr.fm/id994572621?mt=8 ============================================ கோகுலம் தமிழ் வானொலியை கணணி மூலம் கேட்டு மகிழ: www.gtr.fm அல்லது www.gtrfm.com அல்லது www.facebook.com/GokulamTamilRadio/app_402411266453495 ---------------------------------------------------------------------- - GTR.FM #GTRFM #GTR #gokulamtamilradio # GTRFM #tamil #thamizh #Canada #TamilRadio #thamizhRadio #thirukkural #kural #tamil ... மேலும்மேலும்
விளக்கம் 1: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
விளக்கம் 2: மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
English Couplet 821: Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mind.
Couplet Explanation: The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.
Transliteration(Tamil to English): seeritam kaaNin eRidhaRkup pattadai naeraa nirandhavar natpu ============================================ -Android - கோகுலம் தமிழ் வானொலியை உங்கள் அன்ட்றொய்ட் சாதனங்களில் கேட்டு மகிழ: play.google.com/store/apps/details?id=org.shoutcloud.GTRFM ============================================ -iPhone - கோகுலம் தமிழ் வானொலியை உங்கள் ஐபோஹ்ன், ஐபாட் ஐபொட் போன்ற ஆப்பிள் சாதனங்களில் கேட்டு மகிழ: itunes.apple.com/us/app/gtr.fm/id994572621?mt=8 ============================================ கோகுலம் தமிழ் வானொலியை கணணி மூலம் கேட்டு மகிழ: www.gtr.fm அல்லது www.gtrfm.com அல்லது www.facebook.com/GokulamTamilRadio/app_402411266453495 ---------------------------------------------------------------------- - GTR.FM #GTRFM #GTR #gokulamtamilradio # GTRFM #tamil #thamizh #Canada #TamilRadio #thamizhRadio #thirukkural #kural #tamil ... மேலும்மேலும்
குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!
– நன்றி
ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.