Masala FM

Ratings
[Total: 0 Average: 0]
Sitemasala.fm


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

5 months ago

Masala.FM

🦉நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழக அரசின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். ஆனால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை சட்டத் துறை அமைச்சர் மறைத்துவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம், நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை; நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு சட்டத் துறை அமைச்சர் கொடுத்த பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
... மேலும்மேலும்

6 months ago

Masala.FM
🎯பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று 😥✍🏻இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதத் துறவிகளில் ஒருவர் பாம்பன் சுவாமிகள்.கனவிலும் நனவிலும் முருகப் பெருமானையே நினைந்துருகி வாழ்ந்தவர். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவான ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர்.ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும் ஊரில் பிறந்தார். தாய், செங்கமலத்தம்மையார், தந்தை சாத்தப்பப்பிள்ளை. மத் குமரகுருதாச சுவாமிகளான இவர், பிறந்த ஊரின் நினைவாகப் பாம்பன் சுவாமிகள் என்றே அடியார்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சிறுவயது முதலே தினமும் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை ஓதுவார். முருகன் மீது கந்த சஷ்டி கவசம் போலவே துதி பாட வேண்டும் என்று விரும்பினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தன் ஞான குருவான அருணகிரிநாதரின் பெயரை வைத்து முடிக்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். முருகன் திருவருளால், ‘கங்கையை சடையிற் பரித்து’ என்னும் முதலடியுடன் தொடங்கி, முருகன் துதிகளை இயற்றினார். தினமும் உணவு உண்னும் முன் ஒரு பாடலை இயற்றுவது என்ற நியதியை வகுத்து, அதன்படி நூறு பாடல்களை இயற்றி முடித்தார்.துறவறம்முருகப் பெருமான் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, சுவாமிகளுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் இல்லை. துறவறம் பூண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் சுவாமிகளுக்கு ‘சடாக்‌ஷர மந்திர உபதேசம்’ செய்த சேது மாதவ ஐயர், சுவாமிகளைத் திருமண வாழ்வில் ஈடுபடச் சொன்னார். அவருடைய வழிகாட்டலில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். சுவாமிகளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சுவாமிகளின் மனம் முருகனை நினைத்தபடியே இருந்தது.பொய் சொன்னதால் தண்டனைசுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்த நேரம் அது. சுவாமிகளின் தந்தை சிவபதம் எய்தினார். அப்போது துறவறம் பெறுவதற்காகப் பழநி செல்ல இருப்பதாகத் தன் நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம் கூறினார். பழநிக்கு வர பெருமானிடம் இருந்து உத்தரவு வந்ததா என்று கேட்ட நண்பரிடம் சுவாமிகள் ஆம் என்று பொய்யுரைத்தார். அன்று மாலை சுவாமிகள் முருகன் துதியைப் பாடிக் கொண்டிருந்தபோது, அச்சுற்றுத்தும் முகத்துடன் சுவாமிகளின் முன் முருகன் தோன்றினார். “நான் உத்தரவு தருவதற்கு முன்பே தந்துவிட்டதாகப் பொய் பகன்றாயா?” என்று முருகப் பெருமான் கேட்டார். “நான் சுயலாபத்துக்காக அப்படிச் சொல்லவில்லை. ஆன்ம லாபம் கருதித்தான் அப்படி பொய் உரைத்தேன்” என்று சுவாமிகள் சொன்னார்.முருகப் பெருமானின் சினம் தணிய வில்லை. “எக்காரணம் கொண்டும் பொய் சொல்வது தவறு” என்று சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்து உத் தரவு கிடைக்கும் வரை பழநிக்கு வரக் கூடாது என்றும் சொல்லி மறைந்தார்.பழநியம்பதிக்கு வருமாறு முருகப் பெருமானிடம் இருந்து அழைப்பு வரும் என்று சுவாமிகள் காத்திருந்தார். ஆனால் அவருடைய இறுதிக்காலம் வரை பெருமானிடம் இருந்து அழைப்பு வரவேயில்லை. ஆன்ம லாபம் கருதிக்கூட பொய் சொல்லக் கூடாது என்பதைத் தனக்கு உணர்த்தவே பெருமான் அப்படி நடந்துகொண்டதை சுவாமிகள் புரிந்துகொண்டார்.சத்தியத் திருநாள்இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆடி மாதமும் சுக்கிரவாரத்தில் ‘சத்தியத் திருநாளா’கக் சுவாமிகளின் அடியார்கள் கடைபிடித்து வருகிறார்கள். அடியாரின் வழி நின்றி தாங்களும் சத்தியத்தை மீறக் கூடாது என்பதே சத்தியத் திருநாளின் நோக்கம்.சுவாமிகள், தான் வழிபடுகிற மூர்த்திகளில் எல்லாம் முருகனையே காணும் கொள்கைப் பிடிப்பு கொண்டவர். தன் வாழ்நாளில் முருகனிடம் உபதேசம் பெற வேண்டும் என்பது சுவாமிகளின் பெரு விருப்பம். அதனால் பிரப்பன்வலசை என்னும் ஊரில் தவத்தில் ஈடுபட்டார். தவத்தைத் தொடர விடாமல் பல்வேறு இடையூறுகள் வந்தன. அனைத்தையும் முருகன் திருநாமத்தால் தகர்த்து எறிந்தார்.ஏழாம் நாள் இரவு, இரண்டு முனிவர்களுடன் அடியார் உருவத்தில் முருகன் வந்தார். சுவாமிகளிடம் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்தச் சொல்லை உச்சரித்தபடியே தவத்தில் ஆழ்ந்தார் . முப்பத்தைந்தாம் நாள் தவத்தில் இருந்து எழச் சொல்லி அசரீரி கேட்டது. எம்பெருமான் சொன்னால் மட்டுமே எழுவேன் என்று சுவாமிகள் சொன்னார். இது முருகன் கட்டளை என்று பதில் வந்த பிறகே தவத்தில் இருந்து எழுந்தார் சுவாமிகள்.உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத் துக்கள் இவற்றின் எண்ணிக்கையை ஒன்றிணைத்து சண்முகக்கவசம் பாடினார். இந்த 30 பாடல்களையும் பாடினால் இன்னல்கள் தீரும் என்பது அடியார்கள் வாழ்வில் கண்ட உண்மை.ஒரு முறை சுவாமிகள் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூப்பின் காரணமாகவும், சுவாமிகள் உப்பு இல்லாத உணவை உண்பதாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது வானத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்தாடின. இன்னும் பதினைந்து தினங்களில் குணமாகும் என்ற அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை வடிவில் முருகப் பெருமான் காட்சியளித்தார். சுவாமிகளின் கால் குணமானது. சென்னை அரசு மருத்துவமனை பதிவுக்கல்லில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.முருகப் பெருமான் மீது 6666 பாடல்களைப் பாடிய பாம்பன் சுவாமிகள், தமது 79ஆவது வயதில் இதே நாளில் சென்னை, திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.பாம்பன் சுவாமிகளின் மகாசமாதியில் ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையில் மயூர வாகன சேவன விழா நடைபெறுகிறது. அன்று சுவாமிகளின் அடியார்கள், சுவாமிகள் இயற்றிய பாடல்களைப் பாடி முருகன் அருளைப் பெறுவர்.

🎯பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று 😥

✍🏻இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதத் துறவிகளில் ஒருவர் பாம்பன் சுவாமிகள்.

கனவிலும் நனவிலும் முருகப் பெருமானையே நினைந்துருகி வாழ்ந்தவர். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவான ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர்.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும் ஊரில் பிறந்தார். தாய், செங்கமலத்தம்மையார், தந்தை சாத்தப்பப்பிள்ளை. மத் குமரகுருதாச சுவாமிகளான இவர், பிறந்த ஊரின் நினைவாகப் பாம்பன் சுவாமிகள் என்றே அடியார்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சிறுவயது முதலே தினமும் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை ஓதுவார். முருகன் மீது கந்த சஷ்டி கவசம் போலவே துதி பாட வேண்டும் என்று விரும்பினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தன் ஞான குருவான அருணகிரிநாதரின் பெயரை வைத்து முடிக்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். முருகன் திருவருளால், ‘கங்கையை சடையிற் பரித்து’ என்னும் முதலடியுடன் தொடங்கி, முருகன் துதிகளை இயற்றினார். தினமும் உணவு உண்னும் முன் ஒரு பாடலை இயற்றுவது என்ற நியதியை வகுத்து, அதன்படி நூறு பாடல்களை இயற்றி முடித்தார்.

துறவறம்

முருகப் பெருமான் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, சுவாமிகளுக்கு இல்வாழ்க்கையில் நாட்டம் இல்லை. துறவறம் பூண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் சுவாமிகளுக்கு ‘சடாக்‌ஷர மந்திர உபதேசம்’ செய்த சேது மாதவ ஐயர், சுவாமிகளைத் திருமண வாழ்வில் ஈடுபடச் சொன்னார். அவருடைய வழிகாட்டலில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். சுவாமிகளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சுவாமிகளின் மனம் முருகனை நினைத்தபடியே இருந்தது.

பொய் சொன்னதால் தண்டனை

சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்த நேரம் அது. சுவாமிகளின் தந்தை சிவபதம் எய்தினார். அப்போது துறவறம் பெறுவதற்காகப் பழநி செல்ல இருப்பதாகத் தன் நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம் கூறினார். பழநிக்கு வர பெருமானிடம் இருந்து உத்தரவு வந்ததா என்று கேட்ட நண்பரிடம் சுவாமிகள் ஆம் என்று பொய்யுரைத்தார். அன்று மாலை சுவாமிகள் முருகன் துதியைப் பாடிக் கொண்டிருந்தபோது, அச்சுற்றுத்தும் முகத்துடன் சுவாமிகளின் முன் முருகன் தோன்றினார். “நான் உத்தரவு தருவதற்கு முன்பே தந்துவிட்டதாகப் பொய் பகன்றாயா?” என்று முருகப் பெருமான் கேட்டார். “நான் சுயலாபத்துக்காக அப்படிச் சொல்லவில்லை. ஆன்ம லாபம் கருதித்தான் அப்படி பொய் உரைத்தேன்” என்று சுவாமிகள் சொன்னார்.

முருகப் பெருமானின் சினம் தணிய வில்லை. “எக்காரணம் கொண்டும் பொய் சொல்வது தவறு” என்று சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்து உத் தரவு கிடைக்கும் வரை பழநிக்கு வரக் கூடாது என்றும் சொல்லி மறைந்தார்.

பழநியம்பதிக்கு வருமாறு முருகப் பெருமானிடம் இருந்து அழைப்பு வரும் என்று சுவாமிகள் காத்திருந்தார். ஆனால் அவருடைய இறுதிக்காலம் வரை பெருமானிடம் இருந்து அழைப்பு வரவேயில்லை. ஆன்ம லாபம் கருதிக்கூட பொய் சொல்லக் கூடாது என்பதைத் தனக்கு உணர்த்தவே பெருமான் அப்படி நடந்துகொண்டதை சுவாமிகள் புரிந்துகொண்டார்.

சத்தியத் திருநாள்

இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆடி மாதமும் சுக்கிரவாரத்தில் ‘சத்தியத் திருநாளா’கக் சுவாமிகளின் அடியார்கள் கடைபிடித்து வருகிறார்கள். அடியாரின் வழி நின்றி தாங்களும் சத்தியத்தை மீறக் கூடாது என்பதே சத்தியத் திருநாளின் நோக்கம்.

சுவாமிகள், தான் வழிபடுகிற மூர்த்திகளில் எல்லாம் முருகனையே காணும் கொள்கைப் பிடிப்பு கொண்டவர். தன் வாழ்நாளில் முருகனிடம் உபதேசம் பெற வேண்டும் என்பது சுவாமிகளின் பெரு விருப்பம். அதனால் பிரப்பன்வலசை என்னும் ஊரில் தவத்தில் ஈடுபட்டார். தவத்தைத் தொடர விடாமல் பல்வேறு இடையூறுகள் வந்தன. அனைத்தையும் முருகன் திருநாமத்தால் தகர்த்து எறிந்தார்.

ஏழாம் நாள் இரவு, இரண்டு முனிவர்களுடன் அடியார் உருவத்தில் முருகன் வந்தார். சுவாமிகளிடம் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்தச் சொல்லை உச்சரித்தபடியே தவத்தில் ஆழ்ந்தார் . முப்பத்தைந்தாம் நாள் தவத்தில் இருந்து எழச் சொல்லி அசரீரி கேட்டது. எம்பெருமான் சொன்னால் மட்டுமே எழுவேன் என்று சுவாமிகள் சொன்னார். இது முருகன் கட்டளை என்று பதில் வந்த பிறகே தவத்தில் இருந்து எழுந்தார் சுவாமிகள்.

உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத் துக்கள் இவற்றின் எண்ணிக்கையை ஒன்றிணைத்து சண்முகக்கவசம் பாடினார். இந்த 30 பாடல்களையும் பாடினால் இன்னல்கள் தீரும் என்பது அடியார்கள் வாழ்வில் கண்ட உண்மை.

ஒரு முறை சுவாமிகள் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூப்பின் காரணமாகவும், சுவாமிகள் உப்பு இல்லாத உணவை உண்பதாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது வானத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்தாடின. இன்னும் பதினைந்து தினங்களில் குணமாகும் என்ற அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை வடிவில் முருகப் பெருமான் காட்சியளித்தார். சுவாமிகளின் கால் குணமானது. சென்னை அரசு மருத்துவமனை பதிவுக்கல்லில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முருகப் பெருமான் மீது 6666 பாடல்களைப் பாடிய பாம்பன் சுவாமிகள், தமது 79ஆவது வயதில் இதே நாளில் சென்னை, திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.

பாம்பன் சுவாமிகளின் மகாசமாதியில் ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையில் மயூர வாகன சேவன விழா நடைபெறுகிறது. அன்று சுவாமிகளின் அடியார்கள், சுவாமிகள் இயற்றிய பாடல்களைப் பாடி முருகன் அருளைப் பெறுவர்.
... மேலும்மேலும்

7 months ago

Masala.FM
🎬தாதாசாஹெப் பால்கே பிறந்த நாளின்று🌺:
*************************************👀
🎯இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே.இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல.ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார்.படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை.தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே.எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது
#Aanthai #MasalaFM

🎬தாதாசாஹெப் பால்கே பிறந்த நாளின்று🌺:
*************************************👀
🎯இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே.

இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல.

ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார்.

படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை.

தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே.

எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது
#Aanthai #MasalaFM
... மேலும்மேலும்

7 months ago

Masala.FM
ஹிட்லரின் கடைசி நிமிடங்கள.(அவர் இறந்த நாளின்று) (68 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக நர்ஸ் பேட்டி)கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்...✍🏻இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களா?ஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.✍🏻உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது?ஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது.
எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங் கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.✍🏻நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை. கோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்றுவிட்டார்.✍🏻குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையா?நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல. குழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ், குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்...) ஒரு நாள்... மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்கைகளில் குழந்தைகள் படுத்திருந்தார்கள். அவர்கள் படுக்கை அருகே மெல்லிய கயிறு இருக்கும். ஏதாவது தேவை என்றால் அதை இழுத்தாலே போதும். அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களை வாழவிட்டிருக்க வேண்டும். (குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு கோயபல்ஸ் தம்பதிகள் 1945, மே 1ல் தற்கொலை செய்து கொண்டனர்.)✍🏻கோயபல்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?நான் அவரை வெறுக்கிறேன். யாருமே அவரை விரும்ப மாட்டார்கள். அவரை சுற்றி உறவினர் உட்பட சிலர் இருந்து கொண்டே இருப்பார் கள். பதவிக்காகத்தான் அவர் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்களும் அவரிடம் நிறையப் பேர் இருந்தார்கள். எங்களை விட அந்த பெண்களுக்கு அதிக சலுகைகள் இருந்தன.✍🏻காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தவுடனே, எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களே?ஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.✍🏻கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதே?பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார். அவ்வளவுதான். அவரைப் பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.✍🏻நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்த பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?ஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன் னார்கள். என்னை பெரிதும் அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்த கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள். ஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார்.✍🏻பதுங்கு குழியில் கடைசி நிமிடங்களைப் பற்றி சொல்ல முடியுமா?ஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.✍🏻தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமே?அன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார். ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்த சத்தத்தை (தன் னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா... போக வேண்டுமா என்று குழப்பம். எதும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரியும். அதன் பின்னர், பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை. அது தோட்டப்பகுதிக்கு எடுத்து செல்லபட்டது.✍🏻அடுத்து என்ன நடந்தது?உலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.✍🏻பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களா?நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.✍🏻ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்?ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள். நுழைவாயிலில் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள். நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம். ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். நான் அடுத்த பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.✍🏻போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் பேசினார்களே?ஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார் கள். எனக்கு விருந்தளித்தார் கள். தொடர்ந்து அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள். இருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.✍🏻கடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை?1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்த போது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா உயிரோடு இருக் கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.✍🏻ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான டவுன்பால் எனும் படத்தை பார்த்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?நன்றாக இருந்தது. அவர்களுக்கு கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள். ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.✍🏻நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர் களா? அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா?இதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா தவறா என்று கூற முடியாது. ஆனால் பொதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.#Aanthai #MasalaFM

ஹிட்லரின் கடைசி நிமிடங்கள.(அவர் இறந்த நாளின்று) (68 ஆண்டுக்குப் பின் முதன்முறையாக நர்ஸ் பேட்டி)

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்சாக பணிபுரிந்த எர்னா பிளஜல் (93), ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்த அவர் முதல் முறையாக பேட்டியளித்தார். உலக வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை போடுகிறார்...

✍🏻இரண்டாம் உலகப் போர் முடியும் நேரத்தில், நீங்கள் ஹிட்லரின் பதுங்கு குழியில் இருந்தீர்களா?

ஆம். 1945ல் போர் முடியும் போது, நான் பதுங்கு குழியில்தான் இருந்தேன். பெர்லின் பல்கலைக்கழக கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அங்கிருந்து ஹிட்லர் பதுங்கியிருந்த ரகசிய இடத்துக்கு கிளினிக் மாற்றப்பட்டது. எல்லாம் முடியும் வரை அங்கேயேதான் வாழ்ந்தேன்.

✍🏻உங்களுக்கு அங்கு எப்படி வேலை கிடைத்தது?

ஹிட்லரின் ரகசிய இடத்தில் வேலை இருப்பதாக தலைமை சகோதரி கூறினார். உங்களுக்கு விருப்பமா என்றும் கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்படி உத்தரவும் வந்தது. நான் அங்கு சென்று, ஹிட்லரின் மறைவிடத்தைப் பார்த்த போது, அது பதுங்கு குழி போல் அல்லாமல் தரைக்கடியில், கட்டடங்களுடன் பெரியதாகவும், மிகவும் அழகாகவும் இருந்தது.
எனக்கு அங்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. ரஷ்யப் படைகள் பெர்லினை நெருங் கிய போது, நாங்கள் அனைவரும் சிறிய இடத்துக்குள் பங்கு போட வேண்டியிருந்தது. எனக்கும் இன்னொரு நர்சுக்கும் ஓர் அறை ஒதுக்கப்பட்டது.

✍🏻நாஜி கொள்கைகளின் பிரச்சார பீரங்கியான கோயபல்சின் மனைவி மாக்டாவை நீங்கள் பதுங்கு குழியில் சந்தித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் தனது முதல் கணவரை பிரிந்து பின்னர் கோயபல்சை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரது இரண்டாவது திருமணமும் மகிழ்ச்சிகரமாக இல்லை. கோயபல்சைப் பற்றி பல கிசுகிசுக்கள். எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் கோயபல்சின் அழகான ஆறு குழந் தைகளை அவரது மனைவி மாக்டா கொன்றுவிட்டார்.

✍🏻குழந்தைகளை கொல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறவில்லையா?

நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை வெளியில் இருந்ததைப் போல் சாதாரணமானது அல்ல. குழந்தைகளை பெர்லினுக்கு வெளியே கொண்டு சென்று விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் கோயபல்ஸ், "குழந்தைகள் எனக்கு சொந்தமானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று கோபத்துடன் கூறிவிட்டார். (பழைய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர யோசிக்கிறார்...) ஒரு நாள்... மாக்டா பல் மருத்துவரிடம் செல்வதாக என்னிடம் கூறினார். ஆகவே அன்றிரவு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். பதுங்கு குழியில் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருந்த இரு படுக்கைகளில் குழந்தைகள் படுத்திருந்தார்கள். அவர்கள் படுக்கை அருகே மெல்லிய கயிறு இருக்கும். ஏதாவது தேவை என்றால் அதை இழுத்தாலே போதும். அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார்கள். அவர்களை வாழவிட்டிருக்க வேண்டும். (குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு கோயபல்ஸ் தம்பதிகள் 1945, மே 1ல் தற்கொலை செய்து கொண்டனர்.)

✍🏻கோயபல்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் அவரை வெறுக்கிறேன். யாருமே அவரை விரும்ப மாட்டார்கள். அவரை சுற்றி உறவினர் உட்பட சிலர் இருந்து கொண்டே இருப்பார் கள். பதவிக்காகத்தான் அவர் வாலைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்களும் அவரிடம் நிறையப் பேர் இருந்தார்கள். எங்களை விட அந்த பெண்களுக்கு அதிக சலுகைகள் இருந்தன.

✍🏻காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தவுடனே, எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களே?

ஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.

✍🏻கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்று கூறப்பட்டதே?

பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார். அவ்வளவுதான். அவரைப் பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.

✍🏻நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்த பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

ஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன் னார்கள். என்னை பெரிதும் அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்த கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள். ஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார்.

✍🏻பதுங்கு குழியில் கடைசி நிமிடங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

ஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.

✍🏻தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப். 29ல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமே?

அன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார். ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்த சத்தத்தை (தன் னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா... போக வேண்டுமா என்று குழப்பம். எதும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரியும். அதன் பின்னர், பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை. அது தோட்டப்பகுதிக்கு எடுத்து செல்லபட்டது.

✍🏻அடுத்து என்ன நடந்தது?

உலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல் லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.

✍🏻பதுங்குகுழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களா?

நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. பதுங்கு குழியிலிருந்து ஒவ் வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்ய படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம்.

✍🏻ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்?

ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள். நுழைவாயிலில் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள். நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம். ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். நான் அடுத்த பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.

✍🏻போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் பேசினார்களே?

ஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார் கள். எனக்கு விருந்தளித்தார் கள். தொடர்ந்து அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள். இருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.

✍🏻கடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை?

1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்த போது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா உயிரோடு இருக் கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.

✍🏻ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான "டவுன்பால்' எனும் படத்தை பார்த்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நன்றாக இருந்தது. அவர்களுக்கு கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள். ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.

✍🏻நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர் களா? அல்லது அதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா?

இதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா தவறா என்று கூற முடியாது. ஆனால் பொதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.

#Aanthai #MasalaFM
... மேலும்மேலும்

7 months ago

Masala.FM

🦉மெட்ரோ ரயில் ஊழியர்களிடம் சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர் நல ஆணையம், மெட்ரோ நிர்வாகம், தொழிற்சங்கத்தினர் பங்கேற்கின்றனர்

@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Masala FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .