Moon TV

Ratings
[Total: 7 Average: 3.3]
ChannelMoon TV Live
YoutubeMoon TVComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

23 hours ago

Namakaga TV

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை நேற்று அதிகாலை தெலங்கானா போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதை பொதுமக்கள் வரவேற்பதுபோன்று திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பொங்க வரவேற்று பதிவிட்டுள்ளார்.

“ச்சும்மா கிழி” என்றும் ஹைதராபாத் போலீஸூக்கு மரியாதை தெரிவித்தும், டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப்பதிவு அவரது கணக்கை பின் தொடரும் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், ஆட்சிப்பணி அதிகாரி போலீஸ் என்கவுன்ட்டர் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் உள்ளபோது அதில் ஆட்சியராக கடந்துச் செல்லாமல் சராசரி மனிதர்போல் பதிவிடுவது, அவரை பின்பற்றும் பலருக்கும் தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறாரே என சங்கடப்பட்ட சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அவரிடமே கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதில் ஒருவர், ”சார், இதுபோன்ற விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டாம். வெகுஜன மக்கள் இதனை வரவேற்கலாம். ஆனால் உங்களைப் போன்ற உயர் அலுவலர்கள் இதுபோன்ற கருத்தை பதிவிட்டிருக்க வேண்டாம்” என்ற தொனியில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர் விஜயகார்த்திகேயன், “இது என் தனிப்பட்ட கருத்து தான்” என பதில் அளித்திருந்தார்.

அதேபோல் மற்றொருவர், நீங்கள் என்கவுன்ட்டரை ஆதரிக்கிறீர்களா? என கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த ஆட்சியர், “தனிப்பட்ட முறையில் இந்த வழக்கில் ஓ.கே சொல்வேன். அவர்கள் தப்பிக்கும்போதுதான் போலீஸார் என்கவுன்ட்டர் நிகழ்த்தி உள்ளனர்” என பதில் ட்விட் போட்டுள்ளார்.போலீஸாரை வாழ்த்துவதற்கு ரஜினி நடித்து வெளிவர உள்ள ’தர்பார்’ படத்தின், பாடலான “ச்சும்மா கிழி” என்பதை தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு போட்டு அதை சமூகவலைதளத்தில், ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் பதிவிட்டு பேசுபொருள் ஆக்கியிருப்பது பலரையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.
... மேலும்மேலும்

24 hours ago

Namakaga TV
Video image

பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளவே முடியாது ப.சிதம்பரம் பேட்டி

youtu.be/fLQAt1myx84

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

24 hours ago

Namakaga TV
Video image

நான் ப.ஜா.கா'வின் சிறுபான்மை பிரிவா ? பாத்திமா அலி

youtu.be/uDDXuk9t6WU

#NamakagaNews #NamakagaTV
... மேலும்மேலும்

Comment on Facebook

24 hours ago

Namakaga TV

புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்துக்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தவில்லை அதனால் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது ;
அதிமுக அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையர் மாறியுள்ளது ஜனநாயகத்துக்கு வெட்கட் கேடு. நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியுள்ளார்கள். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
... மேலும்மேலும்

24 hours ago

Namakaga TV

நேபாளத்தில் நடைபெறும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை செய்துள்ளார். 87 கிலோ பளுதூக்கும் பிரிவில் புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த அனுராதா தங்கம் வென்றார். தங்கம் வென்ற அனுராதா தஞ்சை தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ... மேலும்மேலும்

1 day ago

Namakaga TV
Video image

வெங்காயத்தால் மூன்று மாநிலங்கள் ஆட்சியை இழந்த வரலாறு உண்டு – திருச்சியில் வைகோ பேட்டி

youtu.be/emYg8j7tzdA

#NamakagaNews #NamakagaTV
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

15 ஆண்டுகளுக்கு பிறகு பாலக்கோடு குமாரசெட்டி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

youtu.be/2NuInOaEwus

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

நாகை மாவட்டம் சோழவித்யாபுரத்தில் யானை கொம்பன்நோய் தாக்கி 200 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை.

youtu.be/b7s6rKAUrgQ

#NamakagaNews #NamakagaTV
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 5ம் வகுப்பு மாணவர்கள் இல்லை. எனவே அதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி & பிரைமரி பள்ளிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

youtu.be/VYrVlAtRikc

#NamakagaTV #Namakaganews
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

கமல், தனுஷ் கதாநாயகிகளுக்கு அரை மணி நேரம் முத்தம் தருகிறார்கள் கே ராஜன் விளாசல்
youtu.be/4bI0bqQ_KUk

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் இன்று சென்னை பத்திரிக்கையாளர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார....
youtu.be/AevHluEak6E

#NamakagaNews #NamakagaTV
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

இராணுவப் பயிற்சியினை முடித்து இன்று இராணுவ வீரர்களாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட 502 இளம்வீரர்கள்!

youtu.be/B9cPTR8Rgf4

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

காரைக்குடி: 200 பவுன் நகையைக் கொள்ளையடித்தவர்கள் 20 நாளில் சிக்கினர்.
youtu.be/VyYZSoRamHE

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

ஈரோட்டில் 2900 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்.

youtu.be/yXU-K6iQq0A

#NamakagaNews #NamakagaTV
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV
Video image

இந்திய அளவில் 4-வது சிறந்த காவல்நிலையமாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு!
youtu.be/CvsEGWjCtKY

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV

சித்தோடு வெல்ல மண்டியில் உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டதில் 3 டன் கலப்பட வெல்லம் பறிமுதல் ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

#NamakagaNews #NamakagaTV
... மேலும்மேலும்

1 day ago

Namakaga TV
Video image

டிசம்பர் 6 ம் தேதியை தேசிய மத நல்லிணக்க நாளாக மத்திய அரசு அறிவிக்கக் கோரிக்கை.

youtu.be/c_KzLTAX3uo

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

1 day ago

Namakaga TV

தொழில் அதிபர் வீட்டில் 200 பவுண் ரூ 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 20 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்த காவல்துறையினர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோம்பு பொட்டல் அருகில் வசிப்பவர் பிரபல தொழில் அதிபர் இளங்கோ மணி. இவருக்கு செக்காலை ரோட்டில் சங்கீதசில்க்ஸ்ஜவுளி
கடைஉள்ளது .இளங்கோ மணி குடும்பத்துடன் கடந்த மாதம் தைவன் நாட்டுக்கு
சுற்றுலா சென்று விட்டு கடந்த மாதம் 15 தேதி இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது 6 படுக்கை அறைகளும் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . போலீசார் வந்து விசாரனை செய்ததில் சுற்றுலா சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 200 பவுன்தங்கநகை,மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என தெரிய வந்தது
ஆதிக நகைகளை வைத்து இருந்த ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் ஒரு CCTV கேமிர கூட வைக்க வில்லை
காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு அருகில் இருந்த வீடுகள் CCTV காட்சிகள்
போலிஸ்செக்போஸ்ட் CCTV காட்சிகள் ஆய்வு செய்த போது ஒரு கார் அப்பகுதியில் சுற்றி வந்தது தெரிந்து அந்த கார் நம்பரை வைத்து
கொள்ளையர்களை தேடி வந்தனர் கழனிவாசல் பகுதியில் வாகன சோதனையின் போது அந்த எண்
காரில் வந்தவர்களை பிடித்து
காவல்துறையினர் தீவிரவிசாரனை செய்ததில் அவர்கள் மதுரை ஆனையூர் அகதிகள் முகாமை சேர்ந்த அன்பு குமார் ,சதீஸ், சிவராஜன், ஆகியோர் தான் கொள்ளையடித்தனர் என்பது தெரியவந்தது அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 120 பவுன் நகைகளை 2 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்டு உள்ளனர் மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 80 பவுன் நகை 3 கிலோ வெள்ளி பொருட்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் கொள்ளை சம்பவம் நடந்து 20 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்ள்ள காரைக்குடி DSP அருண் தலமையிலான காவல்துறை யின ைர பாராடடினர்

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

1 day ago

Namakaga TV

நீலகிரி மாவட்டம்
குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 502 இளம் ராணுவ வீரர்களுக்கு சத்தியபிரமாண நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டனர்.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 502 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது. பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.பயிற்சி வீரர்களின் கம்பீரமான அனுப்பி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, பிரிகேடியர் ஆர்.எஸ்.குரையா
VSM அவர்களால்
4 சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்து பேசுகையில் இந்த இளம் இராணுவ வீரர்கள் கடினமான பயிற்சி மேற்கொண்டு இந்திய இராணுவ த்திற்கு அர்ப்பணிப்பதாகவும்
அவர்களது எதிர்காலம் நல்ல முறையில் அமைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்
தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாய், அணிவகுத்து வந்த காட்சியை கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர். பயிற்சியை முடித்த 502 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர்ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரிியர்கள் கலந்து கொண்டனர்.

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

1 day ago

Namakaga TV

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன் பட்டியில் கூலித் தொழிலாளி மணிகண்டன் (40) என்பவர் தனது மைத்துனர் பாண்டீஸ்வரனால் குத்திக்கொலை. ராயப்பன்பட்டி காவல்துறையினர் பாண்டீஸ்வரனை கைது செய்து விசாரணை

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

2 days ago

Namakaga TV
Video image

Encounter!!! அன்றே செய்தது தமிழகம்!!
youtu.be/abROl36lQnI

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

2 days ago

Namakaga TV

சத்தியமாக இருமுடியில் பிளாஸ்டிக் இல்லை என சபரிமலை பக்தர்களிடம் அங்குள்ள போலீசார் சத்தியம் பெற்றுவருகின்றனர். கேரளாவில் பிளாஸ்டிக்கை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் மாநில அரசு, ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கும் அதே கோரிக்கையை முன் வைத்து வருகிறது. பொதுவாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இருமுடி பையில் அபிஷேக பொருட்களான பொரி, அவல் போன்ற பொருட்களின் பாலிதீன் பைகள், பன்னீர் பாட்டில்கள் ஆகியவை மாளிகைப்புறம் பகுதியில் மலைபோல் குவிகிறது. இவை பாண்டித்தாவளம் பகுதியில், எரித்து அழிக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்க, குழுவாக அமர்ந்திருக்கும் பக்தர்களிடம் 'அடுத்த ஆண்டு வரும் போது எங்கள் குழுவினர் பிளாஸ்டிக், பாலிதீன் கொண்டு வரமாட்டோம்' என சத்தியம் பெறுகின்றனர். இது நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக செங்கண்ணுார், நிலக்கல், பம்பை போன்ற இடங்களில் துணிப்பை கொடுக்கப்படுகிறது. ... மேலும்மேலும்

2 days ago

Namakaga TV

போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது:

கருணை மனுக்களை நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

- ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு.
... மேலும்மேலும்

2 days ago

Namakaga TV

நித்யானந்தா எங்கு உள்ளார் என்பதை கண்டறிய சிரமமாக உள்ளது - இந்திய வெளியுறவுத் துறை.

உலகம் முழுவதிலும் உள்ள இந்திய தூதரகங்களில் நித்யானந்தா குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது - இந்திய வெளியுறவுத் துறை.

நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கோரிய புதிய விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது - இந்திய வெளியுறவுத்துறை.

நித்யானந்தா வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாரா என்பதை எங்களால் கூற முடியாது - வெளியுறவுத்துறை.
... மேலும்மேலும்

2 days ago

Namakaga TV

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தேனியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையதை சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தரவரிசையில் அந்தமான் அபர்தீன் காவல்நிலையம் முதலிடத்தில் உள்ளது.

2ம் இடத்தில் குஜராத் மாநிலம் மகிசாகர் பாலசினார் காவல் நிலையமும், 3ம் இடத்தில் தமிழ்நாடு தேனி மகளிர் காவல் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
... மேலும்மேலும்

2 days ago

Namakaga TV
#RIPதலித் இயக்கங்களின் முதுபெரும் தலைவர் பாவலர் டாக்டர் வை. பாலசுந்தரம் அவர்கள் காலமாகிவிட்டார்.

#RIP

தலித் இயக்கங்களின் முதுபெரும் தலைவர் பாவலர் டாக்டர் வை. பாலசுந்தரம் அவர்கள் காலமாகிவிட்டார்.
... மேலும்மேலும்

2 days ago

Namakaga TV
Video image

சட்டமேதை அம்பேத்கரின் 53 ஆண்டு நினைவு நாள்: நாடெங்கிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி!

youtu.be/GPYs_bakmNU

#NamakagaNews #NamakagaTV
... மேலும்மேலும்

Comment on Facebook

2 days ago

Namakaga TV
Video image

1500 ஆண்டுகளுக்கு முந்திய போர்வீரர்களின் நினைவு நடுகற்கள் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கண்டுபிடிப்பு....
youtu.be/cDbzwVffTmo

#NamakagaTV #NamakagaNews
... மேலும்மேலும்

Comment on Facebook

2 days ago

Namakaga TV
Video image

கைலாஸா உங்களை அன்புடன் அழைக்கின்றது!! நித்தி கலக்கல் !!!
youtu.be/GG9MdBV9BUI

#NamakagaTV #NamakagaNews #kailasaa #nithiyanandha
... மேலும்மேலும்

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Moon TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .